ஜெனிவா,ஜன.25- உலகளவில் அய்ந்தில் ஒரு தொழிலாளி பணி யிடங்களில் வன்முறை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவதாக தொழி லாளர் பன்னாட்டமைப்பின் ஆய்வு அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பிரச்சினை அனைத்து துறைகளின் பணியிடங்களில் மட்டுமல்லாது, பணி தொடர்பான பய ணங்கள், அலுவலக நிகழ் வுகள், டிஜிட்டல் வழியிலான தொடர்புகள், சமூக நட வடிக்கைகளில் கூட தொழி லாளர்கள் எதிர்கொள்ளும் சூழல் உள்ளது. பணியிடங் களில் தொழிலாளர்கள் மீது நடைபெறும் வன்முறை மற்றும் துன்புறுத்தல் களைத் தடுப்பதற்கும், அதை சரி செய்வதற்கும் நடைமுறை வழிகாட்டுதல்களை கொடுப் பது ஆராய்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பிரச்சி னைகள் குறித்து மேற் கொள்ளப்பட்ட ஆய்வில் வன்முறை, துன்புறுத்தல் உள்ளிட்ட வற்றிற்கான மூல காரணங்களை குறைப்பது, பணி செய்வதற்கு முறையான சூழலை அமைத்துத் தருவது, உதாரணமாக தனியாக வேலை செய்ய சூழலை அமைத்துக் கொடுத்தல், தொழிலாளர்களுக்கு பணியிடங்களில் பிரச்சினைகளை உருவாகும் போது மூன்றாம் தரப்பினரிடம் கொண்டு சென்று சரி செய்வது, தொடர்பு கொள்வது மற்றும் மன அழுத்தம் போன்ற அடிப்படை பிரச்சினைகள் குறித்தும் தொழிலாளர்கள் மீது வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் இல்லாத பணிச் சூழலை உருவாக்க முதலாளிகள் மற்றும் தொழி லாளர்கள் இருவரையும் அணிதிரட்டுவது குறித்து இந்த ஆய்வறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.
ஆய்வு மேற்கொள்ளப் பட்ட 25 நாடுகளில், பணியிட வன்முறை மற்றும் துன் புறுத்தல்கள் அனைத்தும் மற்ற விதிகளுடன் ஒப்பிடும் போது பணியிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பிரச்சி னைகள் சட்டங்களின் கீழ் அதிகம் வருவதை காட்டியுள் ளது. நிறுவனங்கள் மற்றும் பணியிடங்களுக்கு ஏற்றவாறு நடைமுறை யுக்திகள், பயிற்சித் திட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை அமல் படுத்தும் போது வன்முறை மற்றும் துன்புறுத்தல் தடுப்புச் சட்ட விதிகளை அமல்படுத்தி தொழிலாளர்கள் எதிர் கொள்ளும் வன்முறைகளை கட்டுப்படுத்த இயலும் என் றும் அறிக்கை வலியுறுத்தி யுள்ளது.
Thursday, January 25, 2024
உலகில் அய்ந்தில் ஒரு தொழிலாளி மீது வன்முறை!
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment