ராமர் கோவிலும் அதைச் சுற்றி
உற்பத்தி செய்யப்படும் மயக்கமும்
ஒரு பக்கம் நான்கு முக்கிய சங்கராச்சாரியார்கள் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா மத சம்பிரதா யங்கள் கடைப்பிடிக்கப்படாமல், அரசியல்மயமாக்கப்பட்ட நிகழ்வாக மாற்றப்பட்டுவிட்டதால் அந்நிகழ்ச்சியை புறக் கணிப்பதாக அறிவித்துள்ளனர். இன்னொரு பக்கம், தரைத்தளம் மட்டும் கட்டி முடிக்கப் பட்டுள்ள நிலையில் முதல் மற்றும் இரண்டாம் தளங்கள் டிசம்பர் 2024-க்குள் கட்டி முடிக்கப் படும் என்று கோவிலின் முதன்மைக் கட்டடக் கலைஞர் நிரிபேந்திரா மிஸ்ரா தெரிவித்துள் ளார். இவை இரண்டையும் பற்றி வாய் திறக்காத ‘கோயபல்ஸ் – மோடி (கோடி மீடியா)’ ஊடகங்கள் மற்றும் பிரதான ஹிந்தி மற்றும் ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்கள் இந்திய முஸ்லிம் களின் மனநிலை தற்போது எப்படி இருக்கிறது என்றோ அரசும் மதமும் ஒரு ஜன நாயகக் குடியரசில் வேறு வேறாக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தோ பேசுவார்கள் என எதிர்பார்ப்பது வீண்.
ஊடக அவமானம்
1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது “அயோத் தியா: நாட்டின் அவமானம்” என முன்னணிக் கட்டுரை வெளியிட்டிருந்த இந்தியா டுடே பத்திரிக்கை தற்போது 2024 இல் “ராமர் வருவார்” என்று பெரிய எழுத்துக்களுடன் ராமர் படங்கள் ஒட்டிய பேருந்தை அயோத்தியில் வலம் வர விட்டிருக்கிறது. தேசிய அளவில் இந்த நிலை என்றால் தமிழ்நாட்டில் காவி மயமான ‘தினமலர்’ தன் இணையதள முகப்பிலேயே “அகிலமே எதிர்பார்க்கும் அயோத்தி ராமர் கோவில் கும்பா பிஷேகம்” என்று ஒரு தனி ‘நியூஸ் புல்லட்டின்’ வைத்து அதனுள் பல வீடியோக்களையும் கட்டுரைகளையும் தொகுத்து வைத்துள்ளது.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்தியாவில் ஊடக சுதந்திரத்தைக் குழி தோண்டி புதைத்து வரும் பா.ஜ.க. ராமர் கோவில் திறப்பை ஒரு தவிர்க்க முடியாத செய்தி யாக எங்கு போனாலும் நம் கண்களில் பட்டுக் கொண்டே இருக்கும் அளவிற்கு மாற்றியுள்ளது. இதற்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் பெருந்துணை செய்கின்றன. அகமதாபாத் தில் இருந்து அயோத்தியா விற்கு ஜனவரி 11 அன்று தொடங்கி வைக்கப்பட்ட முதல் இண்டிகோ விமானத்தில் இருக்கக்கூடிய கேபின் குழுவினர் ராமர், லட்சுமணர், சீதை, அனுமான் போல வேடமிட்டு வந்திருந்தனர். பி.வி.ஆர் மற்றும் அய்நாக்ஸ் தியேட்டர்கள் “வரலாறு உருவாவதை பெரிய திரையில் காண வாரீர்” என ராமர் கோவில் திறப்பு விழாவைக் காண வருவோர்க்கு ஒவ் வொரு டிக்கெட்டுடன் இலவச பாப்கார்ன் வழங்குவதாகக் கூறி விளம்பரம் செய்துள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னையில் பி.வி.ஆர்-அய்நாக்ஸ் தியேட் டர்கள் குறைவாகவே இருந்தது. ஆனால் இன்று ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு வளர்ந்துள்ளன. இந்த விரிவாக்கத்தையும் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலைப் பின் பற்றுவதையும் இணைத்துப் பார்த்தால் பெரு நிறு வனங்கள் எப்படி மதவாத, பாசிச சக்திகளுக்கு மேடை அமைத்துத் தருகின்றன என்பதை புரிந்து கொள்ளலாம்.
“ஹனுமான்” திரைப்படம் ஜனவரி 12 அன்று வெளியானது. பிப்ரவரி மாதம் “ஆர்டிக்கல் 370” என்ற ஒரு படம் வெளியாகப் போவதாக அறி விப்பு வந்துள்ளது. தேர்தலுக்கு முன்பும் தேர்தல் நடக்கும் போதும் எத்தனை இந்துத்துவா அரசியல் திரைப்படங்கள் வெளியாகி இருக்கும் என நாம் யூகித்துக் கொள்ளலாம். வாட்ஸப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளில் ராமர் கோவில் தொடர்பான ரீல்ஸ் பரப்பப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி குழந்தை ராமர் கையைப் பிடித்து கோவிலுக்கு அழைத்துச் செல்லும் ஓவியத்தை நாம் அனைவரும் பார்த்திருப்போம்.
மக்களையே பிரச்சாரகர்களாக மாற்றுவது
இது தவிர, ஏஎன்அய் (ANI) செய்தி முகமை ஜனவரி 20 அன்று மகாராட்டிராவில் ஆர்.எஸ்.எஸ். தலைமையக மான நாக்பூர் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் நூற்றுக்கணக் கான மாணவர்கள் அயோத்தியில் நடக்கும் “பிரான் ப்ரதிஷ்டா”வை ஒட்டி தங்கள் ஆசிரியருடன் ராமர் பஜனை பாடல்களுக்கு நடனமாடும் வீடியோவை வெளியிட்டது. இதற்கு பத்து நாட்களுக்கு முன்பு குஜராத்தில் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்கள் தங்களின் பெயர்கள் வருகைப் பதிவேட்டில் இருந்து வாசிக்கப்படும் போது “எஸ் சார்/மேடம்” என்று சொல்லாமல் “ஜெய் சிறீராம்” என்று சொன்ன வீடியோ வைரலானது.
இந்திய பார் கவுன்சில் தலைவர் உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதிக்கு நாட்டில் உள்ள அனைத்து நீதிமன் றங்களுக்கும் ஜனவரி 22 அன்று விடுமுறை அளிக்கக் கேட்டுக் கொண்டுள் ளார். அதே தேதியில் ஒன்றிய அரசு அலுவலகங் களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப் பட்டிருப்பது நாடறிந்ததே. புதுச்சேரியில் இருக்கும் ஜிப்மர் மருத்துவமனையும் அரை நாள் விடுமுறை அறிவித்து புற நோயாளிகள் சிகிச்சைக்கு வருவதைத் தவிர்க்கவும் எனத் தெரிவித்துள்ளது. வட இந்தியாவில் கர்ப்பிணிப் பெண்கள் குழந்தை பிறக்கும் நாளை ஜனவரி 22 ஆக அமைத்துத் தரவும், சிஸேரியன் வழி குழந்தை பேறுக்கும் வேண்டி மருத்துவமனை களை அணுகுவதாக செய்திகள் காணக் கிடைக்கின்றன.
ஒரு பக்கம் மருத்துவமனைகள் இயங்காது; என்பதை யும் மறுபக்கம் பெண்கள் அந்த நாள் அன்று தங்கள் குழந்தைகள் உலகிற்கு வர வேண்டும் என வேண்டு வதையும் விட இந்துத்துவ அரசியலின் முரணை தெளி வாகக் காட்டிட வேறு உதாரணம் வேண்டுமோ?
மேற்கண்ட செய்திகள் எல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பதாகத் தோன்றலாம். ஆனால் வட இந்தியாவில் ஒவ்வொரு இடத்திலும் இது போன்ற பகுத்தறிவுக்கு ஒவ்வாத, வர லாற்றை மதிக்காத, மக்களின் சமூகப் பொருளாதார சூழலுக்கு தொடர்பில்லாத விசித்திரமான சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக் கின்றன. ராமர் அரசியலுக்கும் தென்னிந்தியாவிற்கும் இடையே பாலம் அமைக்க பாஜக அத்தனை முயற்சி களையும் எடுத்து வருகிறது. வீடு வீடாகப் போய் கோவில் திறப்பு விழா அழைப் பிதழ் கொடுப்பதும், தியேட்டர்களில் ராமர் கோவில் திறப்பு விழாவை ஓட்டுவதும், மத உணர் வைத் தூண்டும் திரைப்படங்களை வெளி யிடுவதும் அதன் முயற்சிகள் பலவற்றில் சில.
பாஜகவின் அரசியல் திட்டம்
விலை உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பெண்களுக்கு எதிரான கொடுமைகள், தேர்தல் நடத்தப்படாத காஷ்மீர், வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்படாத மணிப்பூர், அண்டை நாடுகளுடனான பிரச்சினை, ஜாதி வன் முறைகள், பெருமுதலாளிகளின் அசுர வளர்ச்சி என ஒரு பிரச்சினையும் இந்தியாவில் இல்லை என மக்களை தற்காலிகமாக ஒரு மயக்க நிலைக்கு கொண்டு சென்று, மத வெறியை ஏற்றி விட்டு அப்படியே அதை ஏப்ரல்-மே வரை தக்க வைத்து, தேர்தலை சந்திப்பது தான் பாஜக வின் திட்டம்.
நன்றி: ‘தீக்கதிர்’, 22.1.2024
No comments:
Post a Comment