அசாம் முதலமைச்சருக்கு ராகுல் காந்தி சவால் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 25, 2024

அசாம் முதலமைச்சருக்கு ராகுல் காந்தி சவால்

featured image

குவாஹத்தி, ஜன.25 என் மீது எத்தனை வழக்குகள் வேண்டுமா னாலும் பதிவு செய்யுங்கள். ஆனால், இத் தகைய மிரட்டல்கள் வழியாக என்னை பணிய வைக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அசாம் மாநில முதலமைச் சருக்கு சவால் விட்டுள்ளார்.
கடந்த 14ஆ-ம் தேதி வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் தவுபல் நகரில் இருந்து பாரத ஒற்றுமை நியாய நடைப்பயணத்தை ராகுல் காந்தி தொடங்கினார். கடந்த செவ்வாய்க்கிழமை அசாமின் குவா ஹாட்டி நகருக்கு அவர் நடைப் பயண மாக சென்றார். 5,000-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர் களும் அவருடன் சென்றனர். அப்போது குவா ஹாட்டி நகருக் குள் ராகுல் காந்தி நுழைய அசாம் காவல் துறையினர் அனுமதி வழங்க வில்லை. இதன் காரணமாக காவல்துறையினருக்கும் காங்கிரஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காவல் துறை அமைத் திருந்த தடுப்பு களை காங்கிரஸார் அகற்றினர்.
இதைத் தொடர்ந்து ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அசாம் முதல மைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உத்தரவிட்டார். ராகுல் காந்தி உட்பட முக்கிய தலைவர்கள் மீது அசாம் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்நிலையில் அசாம் மாநிலம் பர்பெட்டா மாவட்டத்தில் நேற்றைய (24.1.2024) நடைப் பயணத்தின்போது ராகுல் காந்தி பேசுகையில் “இன்னும் 25 வழக் குகள் வேண்டுமானாலும் பதிந்து கொள்ளுங்கள். ஆனால், இத் தகைய மிரட்டல்கள் வழியாக பாஜக – ஆர்எஸ்எஸ் ஒருபோதும் என்னை பணிய வைக்க முடியாது. மிகவும் ஊழல் மிக்க முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா. அவர் உங்களிடம் பேசிக் கொண்டிருக் கையிலேயே உங்கள் நிலத்தை அபகரித் திருப்பார். நீங்கள் காண்டா மிருகங்களை பார்க்க காசிரங்கா தேசிய பூங்காவுக்கு போகும்போது, அங்கும் முதல மைச்சருக்கு நிலம் இருப்பதைப் பார்க்கலாம். நீங்கள் எப்போது தொலைக் காட்சியை பார்த்தாலும் அதில் ஹிமந்தா பிஸ்வாதான் தோன்றுவார். அவர் விருப்பப் படியே ஊடகங்கள் செயல்பட முடியும்” என்று விமர்சித்துள்ளார்.

No comments:

Post a Comment