
கரூர் மாவட்டம் கரூர் வட்டம் புலியூர் கவுண்டம் பாளையத்தைச் சேர்ந்த திராவிடர் கழக பெரியார் பெருந்தொண்டர் க.வீரமணி – சந்திரா இணையரின் மகன் சிறீதரனுக்கும், சென்னை காட்டுப்பாக்கம் கு, லட்சுமிபதி – பவானி இணைய ரின் மகள் சந்திரிகாவுக்கும் சுயமரியாதை திருமணத்தை கரூர் மாவட்டம் புலியூர் ஏ.இ.எல்.திருமண மண்டபத்தில் கரூர் மாவட்ட கழக தலைவர் ப.குமாரசாமி தலைமையேற்று நடத்தி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வழக்குரைஞர் ஜெகதீசன் வரவேற்றார். மற்றும் வழக்குரைஞர் தமிழ் ராஜேந்திரன், விடுதலை சிறுத் தைகள் கட்சி மாவட்ட செயலாளர் புகழேந்தி, மக்கள் அதிகாரம் மாநில துணைச் செயலாளர் காளியப்பன் சென்னை, அரசப்பன் கலைக்குழு, கழக மாவட்ட செயலாளர் காளிமுத்து, கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தலைவர் பெருமாள், கரூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி தலைவர் அலெக்ஸ், காந்திகிராமம் செயலாளர் ராஜா மாவட்ட மகளிர் அணி தலைவர் ராஜாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment