ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.36.5 லட்சம் அபராதம் விதிப்பு!
சென்னை, ஜன. 25- கடந்த தீபாவளி விடுமுறை நாட் களை போலவே பொங்கல் விடுமுறை நாட்களிலும் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என எச்ச ரிக்கை விடுக்கப்பட்டு இருந் தது. அதனைத் தொடர்ந்து பெரும்பான்மையான ஆம்னி பேருந்துகள் புகார்க ளுக்கு இடம் அளிக்காமல் செயல்பட்டு வந்தாலும் சில பேருந்துகளில் கூடுதல் கட்ட ணம் வசூலிப்பதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்ததால் தமிழ்நாடு முழுவதிலும் கடந்த 10.01.2024 முதல் 21.01.2024 வரை சிறப்புக் குழுக்கள் மூலம் தணிக்கை மேற்கொள்ளப்பட் டன.
அதன்படி, மாநிலம் முழு வதிலும் 15,659 ஆம்னி பேருந் துகள் சோதனை செய்யப்பட் டதில் 1,892 பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்து இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இந்த பேருந்துக ளுக்கு ரூ.36.55 லட்சம் அபரா தமாக விதிக்கப்பட்டு வசூலிக் கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment