நூலகங்களுக்கு…
தமிழ்நாட்டில் பொது நூலக இயக்கத்தின் கீழ் 4,658 நூலகங்கள் செயல்படுகின்றன. இதில் முதல் கட்டமாக 828 நூலகங்களுக்கு இணைப்புக் கட்டடங்கள் கட்டப்படவுள்ளன.
1000 இடங்களில்
சென்னையில் 1000 இடங்களில் இலவச வைபை வசதி அமைக்கப்பட்டு வருகிறது. இவை இந்த மத இறுதி அல்லது அடுத்த மாதத்திற்குள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தகவல்.
எச்சரிக்கை
வாட்ஸ் அப்பில் மிஸ்டு கால்கள், வீடியோ அழைப்புகள் உள்ளிட்ட 7 வகை மோசடிகள் அதிகமாக நடந்து வருவதாகவும் இதுகுறித்து பயணங்கள் எச்சரிக் கையாக இருக்க வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மீனவர்கள்
பாக்ஜலசந்தி கடலில் சமீபத்தில் மீன் பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டு மீனவர்கள் 40 பேர் விசாரணை கைதிகளாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட வாய்ப் புள்ளதாக இலங்கை அதிகாரிகள் தகவல்.
No comments:
Post a Comment