முதல் முறையாக தாய்ப்பாலில் மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதனால் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து கவலை அதிகரித்து உள்ளது.
இதுகுறித்த தகவல்கள் பாலிமர்ஸ் இதழில் வெளியிடப்பட்டு உள்ளன. ஆய்வாளர்கள் கண்டுபிடித்த மைக்ரோபிளாஸ்டிக்ஸ் பாலிஎதிலீன், பிவிசி மற்றும் பாலிபுரோப்பிலீன் ஆகியவற்றால் ஆனது என்று கூறப்பட்டு உள்ளது.
குழந்தை பிறந்த ஒரு வாரத்திற்குப் பிறகு இத்தாலியின் ரோமில் உள்ள 34 ஆரோக்கியமான தாய்மார்களிடமிருந்து எடுக்கப்பட்ட தாய்ப்பாலின் மாதிரிகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் இதனை கண்டறிந்து உள்ளனர்.
தாய்மார்களின் மாதிரிகளில் சுமார் 75 சதவீதம் மைக்ரோ பிளாஸ்டிக்ஸால் மாசுபட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாசுபடுவதைத் தவிர்ப்பதற்காக பிளாஸ்டிக் மற்றும் கட்டுப்பாட்டு மாதிரிகளைப் பயன்படுத்தாமல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சேமிக்கப் பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டன.
ஆய்வு குறித்து இத்தாலியின் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் வாலண்டினா நோட்டார்ஸ்டெபனோ கூறியதாவது:-
“தாய்ப்பாலில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இருப்பதற்கான ஆதாரம், குழந்தைகளின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள்தொகை பற்றிய நமது அக்கறையை அதிகரிக்கிறது”
தாய்மார்கள் தொகுக்கப்பட்ட உணவு மற்றும் பானங்கள் உட் கொள்வதையும் மற்றும் அழகுசாதனப் பொருட்கள், பற்பசை பயன் படுத்துவதையும் மற்றும் மைக்ரோபிளாஸ்டிக் கொண்ட செயற்கை துணிகளால் செய்யப்பட்ட ஆடைகளை அணிவதையும் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
எவ்வாறாயினும், ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள தாய்மார்களின் தாய்ப்பாலில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் இருப்பது, குறிப்பிடத்தக்கது.
நிபுணர்களின் தகவல் படி எல்லா இடங்களிலும் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் பரந்த அளவில் இருப்பதற்கு காரணம் அவை அதிக அளவு பிளாஸ்டிக் கடலில் கொட்டப்படுவதால் சுவாசம் மற்றும் தண்ணீரை உட்கொள்வதன் மூலம் அவை நம் உடலுக்குள் நுழைகின்றன.
ஒரு பாட்டில் மூலம் குழந்தைகளுக்கு உணவளிப்பதன் மூலம் ஒரே நாளில் மில்லியன் கணக்கான மைக்ரோபிளாஸ்டிக்ஸை விழுங்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மைக்ரோபிளாஸ்டிக்ஸின் அச்சுறுத்தல் இப்போது மனித ஆரோக்கியத்தின் பல அம்சங்களை பாதித்து உள்ளது. தாய்ப்பாலில் அவர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பு, இந்த ஆண்டு மார்ச் மாதம் நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு குழு முதல் முறையாக மனித இரத்தத்தில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இருந்ப்பதை கண்டறிந்தது.
மேலும் இத்தாலிய விஞ்ஞானிகளும் 2020 இல் குழந்தையின் நஞ்சுக் கொடியில் மைக்ரோபிளாஸ்டிகஸ் இருப்பதை உறுதிப்படுத்தினர்.
No comments:
Post a Comment