
நாகர்கோவில், ஜன. 28- குமரிமாவட்ட திராவிடர் கழக தலைவர் பெரியார் பெருந்தொண்டர் மா.மு. சுப்பிரமணியம் பவளவிழா பிறந்த தின விழா நாகர்கோவில் நீல கண்டன் உணவு விடுதியில் நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன், கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் தொலை பேசி மூலம் வாழ்த்துகளை தெரிவித்தனர். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்த நாடு இரா.குண சேகரன் தலைமை தாங்கி உரையாற்றினார்.
கழக மாவட்டத் தலைவர் மா. மு. சுப்பிர மணியம் ஏற்புரையாற்றி தோழர்களுக்கு விருந் தளித்தார். கழக மாவட்டச் செயலாளர் கோ .வெற்றி வேந்தன் மாவட்டதலைவருக்கும் தலை வரின் வாழ்விணையர் நீலாவுக்கும் பொன்னாடை அணிவித்து பரிசளித்து உரையாற்றினார்.
மாணவர் கழக மாநில அமைப்பாளர் செந்தூர் பாண்டியன், இளைஞரணி மாவட்ட தலைவர் இரா.இராஜேஷ், பகுத்தறிவாளர்கழக மாவட்ட தலைவர் உ.சிவ தாணு, மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள் கழக காப்பாளர் ஞா.பிரான்சிஸ், கழக இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னு ராசன், நாகர்கோவில் மாநகர கழக தலைவர் ச.ச.கருணா நிதி, திமுக தொழிற்சங்க பொறுப்பாளர் க.வ.இளங்கோ, அஞ்சல் தலைவர் (ஓய்வு) மு.குமரிச் செல்வன், மாநகர துணைத் தலை வர் கவிஞர் ஹ.செய்க்முகமது, கழக கோட்டாறு பகுதி தலைவர் ச.ச. மணிமேகலை, பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் பெரியார் தாஸ், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தலைவர் எஸ்.குமாரதாஸ், கன்னியாகுமரி கிளைக்கழக அமைப்பாளர் க.யுவான்ஸ் தோழர்கள் பா.சு முத்துவைரவன், சி.அய்சக் நியூட்டன், பெருமாள், மற்றும் மாவட்ட தலைவரின் குடும்பத்தினர், நண்பர்கள் பங்கேற்று பரிசுகள் வழங்கி வாழ்த்தினர்.
No comments:
Post a Comment