மாவட்டம் முழுவதும் கிளைக் கழகங்களை
அமைத்து – தொடர் கொள்கை பிரச்சாரம்
காஞ்சிபுரம் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்
காஞ்சிபுரம், ஜன. 30– 27.2.2024 சனிக்கிழமை காலை 11.00 மணியளவில், காஞ்சி புரம் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம், காஞ்சிபுரம், ஓரிக்கை பகுதியில் உள்ள, மாவட்டத் தலைவர் அ.வெ. முரளி அவர்களின் ‘குறளகம்’ இல்லம் தமிழர் தலைவர் கூடத்தில், தலை மைக் கழக அமைப்பாளர் பு. எல்லப்பன் தலை மையில் நடைபெற்றது.
எழுச்சிப் பாடகர் உலக ஒளி கடவுள் மறுப் புப் பாடலையும், திருக் குறள் பற்றிய பாடலையும் பாடி அனைவரின் பாராட் டையும் பெற்றார்.
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் முனைவர் பா. கதிரவன், காப்பாளர் டி.ஏ.ஜி. அசோ கன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ.வெ. முரளி அனைவரையும் வரவேற்று கலந்துரையா டல் கூட்டத்தின் நோக் கங்களை விளக்கினார்.
கூட்டத்தில், இராணிப்பேட்டை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சு. லோக நாதன், மாவட்ட திரா விடர் கழக இளைஞர ணித் தலைவர் வீ. கோவிந் தராஜ், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலா ளர் இளம்பரிதி, மாநகர பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பிரபாகரன், செயலாளர் பெ. சின்ன தம்பி, அறிவு வளர்ச்சி மன்ற அமைப்பாளர் நாத்திகம் நாகராசன், தோழர் ரவி பாரதி, ஓய்வு பெற்ற ஆசிரியர் ரத்தின. பச்சையப்பன், பல்லவர் மேடு சேகர், தோழர் சே. நவீன்குமார், மருத்துவர் குழலரசி, குறளரசு, எழில ரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அனைவரும் கருத்து களைப் பகிர்ந்தபின் கீழ்க் காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. அண்மையில் இயற்கை எய்திய திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறை வேற்றி அமைதி காத்து இரங்கல் மரியாதை செலுத்தப்பட்டது,
2. மாவட்டம் முழு தும் தொடர் பிரச்சாரம் செய்து கிளைக் கழகங் களை அமைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
3. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 91ஆம் பிறந்த நாளை யொட்டி 91 விடுதலை சந்தாக்களைச் சேகரித்து தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்களிடம் வழங்க வேண்டும் என தீர்மானிக் கப்பட்டது.
4. இராமன் கோயி லைக் காரணமாகக் காட்டி மக்களைப் பிளவுபடுத் தும் ஒன்றிய பாஜக அர சைக் கண்டித்தும், வரும் நாடாளுமன்றத் தேர்த லில் பாஜக வைத் தோற் கடித்து இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்ய அனைத்து முற் போக்கு அமைப்புகளு டன் இணைந்து பணி யாற்ற வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
மாவட்ட கழக இணைச் செயலாளர் ஆ. மோகன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவர் ந. சிதம்பரநாதன் அனை வருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment