
அனுமன் வேடத்தில் நடித்த கலைஞர் மேடையிலேயே உயிரிழப்பு
சண்டிகர், ஜன. 23- அரியானாவில் ராமன் கோவில் திறப்புவிழாவை ஒட்டி நடந்த நாடகத்தின் போது.. அனுமன் வேடத்தில் நடித்த கலைஞர் மேடையிலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார்
அரியானா மாநிலத்தலைநகர் சண்டிகரில்,அயோத்தியில் ராமன் கோவில் திறப்புவிழாவை ஒட்டி, நாடகம் நடைபெற்றது. இந்த நாடகத்தில் அனுமன் வேடத்தில் நடித்த அரீஷ் மேத்தா மாரடைப்பால் மேடையிலேயே சரிந்து விழுந்து பலியானார்.
அயோத்தியில் ராமர் கோயில் குடமுழுக்கு நடந்தது இதை யொட்டி, பல்வேறு இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டன. அந்த வகையில் அரியா னாவில் பிவானி ஜவஅர் சவுக்கில் ராம் லீலா எனும் நாடகம் நடந்தது. இந்த நாடகத்தில் மேடைக் கலைஞர் அரீஷ் மேத்தா நடத்தினார்.
இதில் அரீஷ் அனுமன் வேடம் போட்டிருந்தார். அவர் இந்த நாட கக் கம்பெனியில் 25 அண்டுகளாக அனுமன் வேடத்தில் நடித்து வரு கிறார். ராமன் பட்டாபிஷேகம் குறித்து மேடைக் கலைஞர்கள் நடித்துக் கொண்டிருந்தனர். இந்த ராமன் பட்டாபிஷேகமானது பாடல் வடிவில் இருக்க அதற்கு எல்லோரும் நடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அனுமனாக நடித்த அரீஷ் மேத்தா, ராமனாக நடித்த வரின் பாதத்தில் விழுந்து வணங் கிய போது சரிந்து விழுந்தார். நீண்ட நேரமாகியும் அவர் எழாத தால் உடன் இருந்த கலைஞர்கள் அவரை தூக்கினர். அனால் அவரி டம் எந்த வித அசைவும் இல்லை. இதனால் பதறிய கலைஞர்கள் உடனே அவரை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற் கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
No comments:
Post a Comment