சென்னை,ஜன.18-தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 13.01.2024 அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களையும், அவர் களின் விசைப்படகையும் இலங் கைக் கடற்படையினர் 15.01.2024 அன்று சிறைபிடித்தனர் என்றும், மற்றொரு சம்பவத்தில், ராமநாத புரம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த 18 மீனவர்களையும், அவர்களது இரண்டு விசைப் படகுகளையும் 16.01.2024 அன்று இலங்கை கடற் படையினர் சிறைபிடித்துள்ளனர் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் கவலைபடத் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று நாட்களில் இலங்கை கடற்படையினர் தமிழ் நாடு மீனவர்களை அடுத்தடுத்து சிறைபிடித்துள்ளனர் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் இத்தகைய கைது நடவடிக் கைகள் மீன்பிடி தொழிலை மட் டுமே தங்கள் வாழ்வாதாரமாக நம்பியுள்ள மீனவ சமுதாயத்தின ரிடையே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது என்று கடிதத் தில் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையினரின் சிறைபிடிப்பு நடவடிக்கைகளில் எந்த தளர்வும் இருப்பதாகத் தெரி யவில்லை என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இத்தகைய தன்னிச்சையான கைது நடவடிக்கைகளை தடுத்திட இலங்கை அரசுக்கு வலியுறுத்திட வேண்டுமென்றும் இலங்கை கட் டுப்பாட்டில் உள்ள அனைத்துப் படகுகளையும் விடுவிக்க தெளி வான காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டுமென்றும் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன் பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசுடன் இந்த விவகாரத்தை வலுவாக எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதி யுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண் டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment