தஞ்சை, ஜன. 26- திராவிடர் கழக தஞ்சாவூர் மாவட்ட இணைச் செயலாளர் வடசேரி தீ.வ. ஞானசிகாமணி-இராணி இணையரின் மகன் பொறியாளர் ஞா.திலீபன், வடசேரி மா.மதிவாணன்– மீனாட்சி இணையரின் மகள் ம.சிந்து ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா கடந்த 17-.1.-2024 புதன் கிழமை காலை 10:30 மணி அளவில் ஒரத்தநாடு தெற்கு ஒன்றியம் வடசேரி மல்லிகா அய்யனார் திருமண மஹாலில் நடைபெற்றது.
மாவட்ட கழக துணைத் தலைவர் முத்து.இராஜேந்திரன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
ஊராட்சி மன்ற தலைவர் சோம. நந்தகுமார், ஒன்றிய குழு உறுப்பினர் மா. ராஜசேகரன், ஒரத்தநாடு நகர கழக தலைவர் பேபி.ரெ.ரவிச்சந்திரன் காங் கிரஸ் கட்சி பொறுப்பாளர் முருகையன். மாநில பகுத்தறிவாளக் கழக அமைப் பாளர் ஆசிரியர் கோபு.பழனிவேல், ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய தலைவர் த. ஜெகநாதன், தஞ்சை மாவட்ட செயலா ளர் அ.அருணகிரி , பட்டுக்கோட்டை மாவட்ட தலைவர் பெ.வீரையன், மன் னார்குடி மாவட்ட தலைவர் ஆர்.பி. எஸ்.சித்தார்த்தன், தஞ்சை மாவட்ட கழக தலைவர் வழக்கறிஞர் சி. அமர்சிங், கழக காப்பாளர் மு. அய்யனார், தலை மைக் கழக அமைப்பாளர் குடந்தை க.குருசாமி, திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக் குமார், இரா. குணசேகரன் உள்ளிட்ட கழக பொறுப்பாளர்கள் வாழ்த்துரை யாற்றினர்.
திராவிடர் கழக செயலவைத்தலைவர் சு. அறிவுக்கரசு அவர்கள் வாழ்த்துரை வாழ்வியல் உரையாற்றி இறுதியாக மணமக்களை உறுதிமொழி ஏற்க செய்து-மணமகளின் பாட்டி கணவனை இழந்த பாலம்மாள்மாணிக்கம் பொன் அணியை மணமக்களுக்கு எடுத்துக் கொடுக்க மணவிழாவை நடத்தி வைத்தார்கள்.
மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் தீ.வா. இன்பமூர்த்தி நன்றி கூறினார்.
தஞ்சை மாவட்ட துணை செயலாளர் அ.உத்திராபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
மணமக்களின் பெற்றோர்களுக்கும் மணமகளின் பாட்டி பாலம்மாள் மாணிக்கம் அவர்களுக்கும் சிறப்பு செய் யப்பட்டது.
திராவிடர் கழக மாநில மாணவர் அணி செயலாளர் இரா.செந்தூரப் பாண்டியன் மாவட்ட இளைஞரணி தலைவர் ரெ. சுப்ரமணியன், மாவட்ட மகளிர் அணி தலைவர் இ.அல்லிராணி வடசேரி இளங்கோ, நெடுங்கெல்லி, பன்னீர்செல்வம், சரவணன், சந்திர சேகரன், ஆறுமுகம், கதிரவன், கிளைக் கழகத் தலைவர் தா.ராமசாமி, நீடா மங்கலம் ஒன்றிய தலைவர் கருவாக் குறிச்சி தங்க.பிச்சைக்கண்ணு, நல்லிக் கோட்டை நல்லதம்பி, பட்டுக் கோட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் புலவஞ்சி காமராஜ், பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீலகண்டன், மன்னார்குடி ஒன் றிய தலைவர் மேலவாசல் தமிழ்ச்செல் வன், மேலவாசல் திரிசங்கு, ஒரத்தநாடு நகர இளைஞரணி தலைவர் ச.பிரபா கரன் மன்னார்குடி மாவட்ட அமைப் பாளர் ஆர்.எஸ். அன்பழகன், மன்னார் குடி வணங்காமுடி, ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் முக்கரை க.சுடர்வேந்தன், தொண்டராம்பட்டு உத்திராபதி, உள்ளிட்ட உறவினர்கள் நண்பர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
குறிப்பு: கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி இதுவாகும்.
No comments:
Post a Comment