செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 20, 2024

செய்திச் சுருக்கம்

பாதிப்பு
இந்தியாவில் 1.20 கோடி பேர் கண்நீர் அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலருக்கு அந்நோயின் தாக்கம் குறித்த விழிப்புணர்வு இல்லை என்று டாக்டர் அகர்வால் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
நடவடிக்கை
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழி யர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப் படாது என்று முத்தரப்பு பேச்சு வார்த்தையின் போது போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
பசுமை முதன்மையாளர் விருதுக்கு
தமிழ்நாடு பசுமை முதன்மையாளர் விருதுக்கு வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவடட ஆட்சியர் அலுவலகம் அறிவித்து உள்ளது.

No comments:

Post a Comment