முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சிதம்பரம் மானமிகு தோழர் நமசிவாயத்திற்கு நமது வீர வணக்கம்! - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 27, 2024

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சிதம்பரம் மானமிகு தோழர் நமசிவாயத்திற்கு நமது வீர வணக்கம்!

6-44

சிதம்பரத்தில் வாழ்ந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண் டரும், அரசமைப்புச் சட்ட எரிப்பு உள்பட திராவிடர் கழகம் நடத்திய பல போராட்டங்களில் சிறை சென்றவரும், மேனாள் நகராட்சி மன்ற உறுப்பின ரும், இறுதி மூச்சு உள்ள வரை கருப்புச் சட்டைக் காரராகவே வாழ்ந்தவரு மான மானமிகு தோழர் நமசிவாயம் அவர்கள் நேற்று (26.1.2024) தனது 96ஆவது வயதில் மறைந் தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம்.
மாணவப் பருவம் தொட்டே அவர் என்னை அறிவார். நட்புறவுடன் புலவர் கோ. இமயவரம்ப னுடனும், என்னிடமும் பழகுவார்.
இயக்கத் தலைமையிடம் சிலர் மாறுபட்டு சிதம்பரத்தில் போட்டி அமைப்புகளை உருவாக்கிய போதும், கொள்கைப் பாதையில் பயணம் மாறாது தலைமைக்குக் கட்டுப்பட்ட எடுத்துக்காட்டானவர்.
அவரது மறைவு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல; கொள்கைக் குடும்பமான நமது இயக்கத் திற்கும் பேரிழப்பாகும்.
அவரது மறைவால் துயருறும் அனைவருக்கும் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள் கிறோம்.
அவருக்கு கழகத்தின் சார்பில் நமது வீர வணக்கம்!

கி.வீரமணி
திராவிடர் கழகம்
தலைவர்,
27-1-2024

No comments:

Post a Comment