சீதையை புறக்கணித்து ராமரை மட்டுமே கொண்டாடுகிறார்கள்: மம்தா கடும் தாக்கு! - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 23, 2024

சீதையை புறக்கணித்து ராமரை மட்டுமே கொண்டாடுகிறார்கள்: மம்தா கடும் தாக்கு!

கொல்கத்தா, ஜன. 23- பாஜகவினர் பெண் களுக்கு எதிரானவர்கள் என்பதால் ராமரைப் பற்றி மட்டுமே பேசு கிறார்கள்; சீதா தேவியை புறக் கணிக்கிறார்கள்’ என்று பாஜகவை சாடியுள்ளார் திரிணமூல் காங் கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா.

பிரதமர் மோடி தலைமையில் அவரை முன்னிறுத்தி நடைபெற்ற ராமர் கோயில் குடமுழுக்கு விழா குறித்து, எதிர்க்கட்சிகளின் ‘இந் தியா’ கூட்டணியின் முக்கியத் தலைவரான மம்தா கடுமையாக விமர்சித்துள்ளார். குடமுழுக்கு நாளன்று ‘அனைத்து நம்பிக்கை பேரணி’ என்ற தலைப்பில் சகல மதங்களையும் உள்ளடக்கிய ஒற் றுமைப் பேரணியை கொல்கத் தாவில் அவர் நடத்தினார்.

அப்போது, ‘அரசியல் லாபங் களுக்காக பாஜகவினர் ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை பயன்படுத்திக்கொள்வதாகவும், பாஜகவினர் பெண்களுக்கு எதிரானவர்கள்’ என்றும் மம்தா சாடினார். “அவர்கள் ராமரைப் பற்றி மட்டுமே பேசுவார்கள். சீதா தேவியைப் பற்றி வாய் திறக்கமாட் டார்கள். ராமரின் வனவாசத்தின் போது சீதை, ராமருடன் இருந் தாள். ஆனால் பாஜவினர் பெண்க ளுக்கு எதிரானவர்கள் என்பதால் சீதா தேவியைப் பற்றி பேசுவ தில்லை. நாங்கள் துர்கா தேவியை வழிபடுபவர்கள். எனவே பாஜக வினர் எங்களுக்கு மதத்தைப் பற்றி விரிவுரை செய்ய முயற்சிக்க வேண்டாம். பாஜகவினர் போல தேர்தலுக்கு சற்று முன்பாக, மதத்தை அரசியலாக்கிப் பிழைப் பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அரசியலுக்கான வித்தை காட்டும் நிகழ்வாக ஆன்மிகத்தையும், மத வழிபாட்டையும் பயன்படுத்து வோருக்கு நாங்கள் எதிரானவர்கள். அதே வேளையில் ராமரை வழிபடு பவோர் மீது எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. என்று கூறினார்.

No comments:

Post a Comment