
கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக கழக கொள்கை விளக்க துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கி பரப்புரை செய்தனர். கழக நிர்வாகிகள் கன்னியாகுமரி பகுதியில் நடந்த இந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிர மணியம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்து பரப்புரையைத் தொடங்கிவைத்தார். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழகச் செயலாளர் குமாரதாஸ், மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் மஞ்சு குமார் , கன்னியாகுமரி கிளைக்கழக அமைப்பாளர் க.யுவான்ஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர் . தந்தை பெரியாருடைய கருத்துகள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய கருத்துகள் அடங்கிய துண்டறிக்கைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிப் படித்து அறிவுத் தெளிவுப் பெற்றனர்.
No comments:
Post a Comment