மதுரவாயல், ஜன. 22- ஆவடி மாவட்டம் மதுரவாயல் பகுதி திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 21-01-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5-:30 மணிக்கு பூந்தமல்லி ஒன்றிய செய லாளர் சு.வெங்கடேசன் அலுவல கத்தில் மதுரவாயல் பகுதி கழக தலைவர் வேல்சாமி தலை மையில் அன்புச் செல்வி கடவுள் மறுப்பு கூற கூட்டம் துவங்கியது.
சிறப்பு அழைப்பாளர்களாக ஆவடி மாவட்ட கழக தலைவர் வெ.கார்வேந்தன் , சேத்பட் நாக ராசன் கலந்து கொண்டனர்.கலந் துரையாடல் கூட்டத்தில் 28-1-2024 ஞாயிற்றுக்கிழமை காலை சேத்பட் நாகராசன் அவர்களது இல்ல திரு மணத்தை நடத்தி வைக்க மதுரவாயல் பகுதிக்கு வருகைதரும் கழக தலைவர் தமிழர் தலைவர் அவர்களுக்கு சிறப்பான முறையில் உற்சாக வரவேற்பு அளிப்பதென தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
தீர்மானத்தையொட்டி ஆவடி மாவட்ட கழக துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், இளைஞ ரணி செயலாளர் ஏ.கண்ணன், பட்டாபிராம் பகுதி தலைவர் இரா.வேல்முருகன், ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் சுந்தர்ராஜன், நகர செயலாளர் தி.மணிமாறன், ஒன் றிய செயலாளர் சு.வெங்கடேசன், மதுரவாயல் பகுதி அமைப்பாளர் தங்க.சரவணன், பூந்தமல்லி இப் ராஹிம் ஆகி யோர் உரையாற்றினர்.இறுதியில். ஏ.கண்ணன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment