– பெ. கலைவாணன், திருப்பத்தூர்
இந்திய அரசமைப்புச் சட்டம் 51-கி(லீ) வலியுறுத்தும் அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், சீர்திருத்தக் கருத்துகள் போன்றவைகளை உள்ளடக்கி மக்க ளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஆணைப்படியும் ஜனவரி 20, 21 சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் மந்திரமா? தந்திரமா? பயிற் சிப் பட்டறை நடைபெற்றது.
இந் நிகழ்வு இக் காலத்திற்கும், எக் காலத்திற்கும் தேவையான ஒன்று, இத் தகைய முயற்சிகள், பயிற்சிகள் இந்தியா விலே எந்த ஒரு இயக்கத்தாலும், நபர் களாலும் சிந்திக்க முடியாத ஒன்று. எதையும் ஈரோட்டு பார்வை கொண்டு பார்க்கும் தமிழர் தலைவர் நம் ஆசிரியர் அவர்களுக்கு மட்டுமே இந்த சிந்தனை சாத்தியம். அந்த வகையில் மந்திரமா? தந்திரமா? பயிற்சி மிக மிக அவசியம்.
இக் காலத்தில் மக்கள் அதிகமாக கோவிலுக்கு செல்லுவது போன்ற தோற் றம் காணப்படுகிறது. இந்த கோவில்களில் இத்தனை லட்சம் பேர் கூடினார்கள், அந்த கோவில்களில் இத்தனை லட்சம் பேர் கூடினார்கள் என்று சொன்னாலும் அவர்களிடம் காணப்படும் மூட நம்பிக் கைகள், மூடப் பழக்க வழக்கங்கள் எத்த கைய நிலையில் உள்ளது என்று கூர்ந்து கவனிப்போமாயின்….
உதாரணமாக மக்களின் பிரதிபலிப் பாக ஓரளவிற்காவது இருக்கும் இன்றைய தமிழ் திரைப்படங்களை கவனித்தால் நமக்கு புரியும்.
திரைப் படங்கள் மக்களிடம் எவை சொன்னால் பண வசூல் அறுவடை செய்யலாம் என்று கணக்குபோட்டு தான் படங்களை எடுப்பார்கள். அந்த வகை யில் சில வருடங்களுக்கு முன்பு வரை அதிகமாக பக்திப் படங்கள், கடவுள் அவதார படங்கள், என்று அதிக எண் ணிக்கையில் வந்து கொண்டிருக்கும். அப்படி முன்னர் பக்திப் படங்கள் திரை யிடும் திரையரங்குகளில் பக்திப் பாடல்கள் வரும்போது திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கும் பல பெண்கள் தன்னிலை மறந்து வெறி பிடித்து ஆடுவார்கள். அச்செயல் அவருக்குள் தெய்வம் இறங்கி அவர்கள் தெய்வம் வந்து ஆடுவதாக சொல்லுவார்கள்.
அப்படி ஆடுபவர்களை திரையரங்க ஊழியர்கள் அவர்களுக்கு வேப்பிலை அடித்தும், விபூதி அடித்தும், கற்பூரம் காட்டியும் அமைதிப்படுத்துவார்கள். இந்த காட்சிகள் எல்லாம் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு திரைப்பட காட்சி களிலும் நடக்கும்.
அப்படி கணக்குப் போட்டுப் பார்த் தால் ஒரு திரையரங்கில் நூறு பெண் களுக்கு மேல், தமிழ்நாடு முழுவதும் என்று கணக்கு பார்த்தால் லட்சக் கணக்கான பெண்கள்.
திரையரங்கா? கோயிலா? என்றே தெரியாது. திரையரங்கு ஊழியர்கள் எல்லாம் பூசாரிகளாக மாறி இருப்பார்கள். திரையரங்கு முன்னே சாமி சிலைகள், உண்டியல் வேறு, படத்திற்கான டிக்கெட் வசூல் பத்தாது என்று உண்டியல் வசூல் தனியாக நடக்கும். இப்படியான காட்சிகள் எல்லாம் திரைப் படங்களுக்கு மேல் சுவாரசியமானதாக இருக்கும்.
தெய்வம் வந்து ஆடுவது போன்ற செயல் ஒரு மன நோய் என்பது பகுத்தறிவாளர்களாகிய நமக்கு எல்லாம் தெரியும். இப்படியான போக்கு மக்களின் மனநிலை சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது. ஆனால் இப்போது தமிழ் திரைபடங்களில் இது போன்ற பக்திப் படங்கள் வருகை அதிகமாக வருவதில்லை. அப்படியே வந்தாலும் திரையரங்குகளில் ஓடி வசூல் பெறுவ தில்லை. கடைசியாக வந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். அந்த படமும் சரியாக ஓடவில்லை.
அப்படியே பக்திப் படங்கள் வந் தாலும் மக்கள் யாரும் முன்னர் போன்று சாமி வந்து ஆடுவதில்லை , அப்போது போன்ற காட்சிகள் எல்லாம் இப்போது திரையரங்குகளில் நடப்பதில்லை. இவைகள் எல்லாம் எதைக் காட்டுகிறது.
மக்களே கடவுள் நம்பிக்கை வேறு, மூட நம்பிக்கைகள் வேறு, என்று ஓரள வுக்காவது உணரத் துவங்கியுள்ளார்கள் என்று நாம் உணரலாம்.
இதற்குக் காரணம் நமது இயக்கத்தின் தொடர் பிரச்சாரம், மற்றும் சமூக நீதியை, சமத்துவத்தை காக்கும் ஆட்சிகள். அதன் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளா தார முன்னேற்றம்.
அதனால் அன்றாட வாழ்க்கையில் இருந்த பொருளாதாரம் சார்ந்த, சமூகம் சார்ந்த, மனம் சார்ந்த பிரச்சினைகள் குறைந்துள்ளது, அதன் விளைவாக சாதாரண அடித்தட்டு மக்களிடையே இருந்த மன அழுத்தங்கள் குறைந் துள்ளன, ஆற்றாமைகள் குறைந்து உள்ளது, ஆகவே குடும்பங்களில் பிரச் சினைகளும் குறைந்துள்ளது.
தன் ஆழ்மன பிரச்சினைகளை வெளிப்படுத்த முடியாத சூழலில், இப்படி திரைப்படங்கள் பார்க்கும் போது , திரு விழாக்கள் போதும் அதை வெளிப்படுத்தி கொண்டிருந்தார்கள். அப்படியான நிலை இப்போது பக்தி திரைப்படங்கள் பார்க்கும் மக்களிடையே மிக குறைந்துள்ளது என்றே சொல்லலாம்.
அதே போன்று பேய்கள், அதன் மீதான பயங்கள். இதற்கும் இப்போது வரும் தமிழ் திரைப்படங்களே சாட்சி. இப்போது வரும் பேய் படங்கள் எல்லாம் பேய்களையே கலாய்க்கும் காட்சிகள் தான். அனைத்துப் பேய் படங்களும் நகைச்சுவை படங்களாகி போய் விட்டது.
பேய்களை நகைச்சுவையாக்கிய பெருமை தமிழ் திரையுலகத்தையே சாரும். தமிழ் மொழி திரைப் படங்கள் தவிர்த்து வேறு எந்த மொழி திரைப் படங் களிலும் நகைச்சுவை பேய் படங்கள் வந்ததில்லை.
இதற்கும் காரணம், தமிழ் இயக்குநர் மத்தியில் நாம் கொண்டு சேர்த்துள்ள பகுத்தறிவு பிரச்சாரங்கள் தான்.
மூட நம்பிக்கையை மூலதனமாக வைத்துக் கொண்டு, கடவுள் பெயராலும், மதத்தின் பெயராலும், மக்களிடையே உள்ள உணர்வுகளை தூண்டி ஆட்சியை கைப்பற்றி, ஸநாதன கொள்கைகளையும், மனு தர்மத்தையும் நிலை நிறுத்தி, ராம ராஜ்யத்தை நிறுவி ராமர் ஆட்சியை செய்ய துடிக்கும் பா.ஜா.க. அரசு. மக்களை பகுத்தறிவு கொண்டு சிந்திக்க விடாமல் மூட நம்பிக்கைகளை நிலை நிறுத்றும் வேலையை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறது.
அந்த மூட நம்பிக்கையின் உச்சம் தான் – இல்லாத கற்பனைக் கடவுளை இருப்பதாக, அந்த இடத்தில் தான் அவன் பிறந்தான் என்று சொல்லி, பழைமை வாய்ந்த மசூதியை இடித்து, இடித்த இடத்தில் கோடிக் கணக்கான ரூபாய்களை செலவு செய்து கட்டடம் கட்டி ஜனவரி 24 ஆம் தேதி மனுநீதி மன்னன் மோடி திறக்க உள்ள ராமர் கோயில்.
நாட்டின் வளர்ச்சிக்காக கலைஞர் அவர்களால் கொண்டு வரப்பட்ட சேது சமுத்திர திட்டம் . அதை நிறைவேற்ற பணிகளை துவங்கிய பொழுது, இல்லாத கடவுள் கட்டியதாகவும், அறிவியலுக்கு புறம்பாக அது ராமர் பாலம் என்று சொல்லி, தமிழ்நாட்டின் வளர்ச்சியை இந்த ராமன் பெயரை சொல்லித் தான் தடுத்தார்கள்.
இப்படி, கடவுள் பெயர்களை சொல்லி மக்களி டையே மத உணர்வை தூண்டி, பிளவை உருவாக்கி ஆட்சியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளவும், அப்படி தக்க வைத்துக் கொள்வதின் மூலம் அவர்கள் விரும்பும் ராம இராஜி யத்தை உருவாக்க முடியும் என்று மக் களிடையே தொடர்ந்து மூட நம்பிக் கைகள் விதைத்து கொண்டே இருக் கிறார்கள். அவர்களுக்கு துணை போகும் கார்ப் பரேட் சாமியார்கள். அவர்கள் அட்டூழியங்கள் தனிக் கதை.
பல ஆண்டுகளுக்கு முன்பு பிள்ளையார் பால் குடிப்பதாக சொல்லி மக்களை எல்லாம் முட்டாளாக்கி, மக்களும் அதை நம்பி வரிசையில் நின்று பால் ஊற்றினார்களே! அதையும் நம்மை போன்ற பகுத்தறியும் தோழர்கள் தான் அந்த பிள்ளையாரையும் அந்த செயலைச் செய்ய தூண்டியவர்களையும் ஓட ஓட விரட்டி, மக்களை தெளிவை யடையச் செய்தார்கள்.
அதே போன்று, இன்றும் மூட நம்பிக்கைகளை, எண்ணங்களை மக்கள் மனதில் விதைத்து , அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள துடிக்கும் ஸநாதன சக்திகளை விரட்ட மக்களிடையே உள்ள மூடநம்பிக் கைகளை போக்கி, பகுத்தறிவை வளர்த்து, கடவுள் உள்பட எவை மீதும் ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகள் கேட்க வைப்பதின் மூலம், இந்த பாசிச மதவாத சக்திகள் மக்களின் மனங்களில் உள்ள இறை நம்பிக்கை பயன்படுத்தி தொடர்ந்து அறுவடை செய்யும் போக்கை நாம் மட்டுப்படுத்தலாம்.
தமிழ்நாட்டில் நாம் அதை செய் துள்ளோம்.
தமிழ்நாட்டில் தற்போது வரை அவர்களால் கால் ஊன்ற முடியவில்லை அதற்கு காரணம் பெரியார் என்பது நமக்கெல்லாம் தெரியும். இருந்தாலும் அவர்கள் மெதுவாக பரவும் நஞ்சாக வளர்ந்து வருகிறார்கள். அவர்கள் மேலும் வளராமல் தடுக்க மக்கள் மனங்களில் உள்ள மூட நம்பிக்கைகள் அறவே ஒழிக்க வேண்டும். மூட நம்பிக்கைகள் ஒழிந்தால் தான் தெய்வம் வந்து ஆடும் காட்சிகள் குறைந்தது போல் கடவுள் பெயரை சொல்லி வளரும் பா.ஜா.க. என்ற பாசிச நச்சு சக்தியின் வீரியத்தை குறைக்க முடியும்.
அந்த வகையில் ராமர் கோவில் திறக் கின்ற நாளில், பகுத்தறிவுக் கண்களை திறக்கும் நிகழ்ச்சியாக எதையும் தொலைநோக்குப் பார்வையில் காணும் ஆசிரியர் அவர்கள் சரியாக கணித்து ஏற்பாடு செய்துள்ளார்.
இப்போது கைப்பேசியில் உள்ள யு டியூப்யிலும் (you tube) கூகுளிலும் (google) தேடினால் போதும் அனைத்து விதமான மேஜிக் காட்சிகள் ( இவர்கள் சொல்லும் மந்திரங்கள்) அனைத்தும் எப்படி செய் கிறார்கள் என்ற விளக்கங்கள் அக்குவேறு, ஆணி வேறாக விளக்கு கிறார்கள். எதையும் இப்போதிருக்கும் இணைய தள உலகில் எவரையும் அவ்வளவு எளிதில் ஏமாற்றி விட முடியாது. எல்லா தகவலும் நம் உள்ளங்கையில் உள்ளது. அவை களையெல்லாம் பயனுள்ள வகையில் மாணவர்கள் பயன்படுத்த வேண்டும்.
அந்த வகையில் அந்த தளங்களுக்கு சென்று பார்த்தும் விழிப்படையாதவர் களுக்கும், அதை காண வாய்ப்பில்லா தவர்களுக்கும். குழந்தைகள், மாணவர் களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நம் தோழர்களுக்கு நேரடியாக சொல்லி தரும் பயிற்சி முகாம் தான் மந்திரம்? தந்திரமா? நிகழ்ச்சி.
இந்த நாடு மூட நம்பிக்கைகள் மீது கட்டப்பட வேண்டுமா?
அறிவியல் உண்மைகள் மீது கட்டப் பட வேண்டுமா?
எது இந்த சமூகத்திற்கு தேவை!
எது எல்லோருக்குமான முன்னேற் றத்தைக் கொடுக்கும்?
அதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.
ஆகவே, ஆசிரியர் ஆணையை ஏற்போம்!
மந்திரமா? தந்திரமா? பயிற்சி எடுப்போம்!
தமிழ்நாட்டு மக்களை மூட நம்பிக் கையிலிருந்து விளக்குவோம்!
ஸநாதன சக்திகளிடமிருந்து மக்களை காப்போம்!!
No comments:
Post a Comment