விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 30, 2024

விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை

featured image

‘இந்தியா’ கூட்டணி என்பது கொள்கைக் கூட்டணியாகும் – யாரும் இதனை விட்டு அகல முடியாது; அதேநேரத்தில், வடக்கே சபலங்கள் உள்ளவர்கள் எப்படி வேண்டுமானாலும் போகலாம்!
மக்களை நம்பித்தான் ‘இந்தியா’ கூட்டணியே தவிர
தலைவர்களை நம்பி அல்ல!
தலைவர்கள் ‘இந்தியா’ கூட்டணியில் தொடர்ந்தால், அவர்களுடைய பொதுவாழ்க்கையில் ஒரு பழி ஏற்படாது!

திருச்சி, ஜன.30 ‘இந்தியா’ கூட்டணி என்பது கொள்கைக் கூட்டணியாகும். யாரும் இதனை விட்டு அகல முடியாது. அதேநேரத்தில், வடக்கே சபலங்கள் உள்ளவர்கள் எப்படி வேண்டுமானாலும் போகலாம்; ஆனால், மக்களை நம்பித்தான் ‘இந்தியா’ கூட்டணி இருக்கிறதே தவிர, தலைவர்களை நம்பி அல்ல! தலைவர்கள் இந்தக் கூட்டணியில் இருந்தால், அவர்களுக்கு மரியாதை – தலைவர்கள் இந்தக் கூட்டணியில் தொடர்ந்தால், அவர்களுடைய பொதுவாழ்க்கையில் ஒரு பழி ஏற்படாது. அரசியல் நெறி தவறினால், அறங்கூற்றாகும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘வெல்லும் ஜனநாயகம்!”
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் தமிழர் தலைவர் வாழ்த்துரை!

திருச்சி சிறுகனூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கடந்த 26-1-2024 அன்று மாலை நடைபெற்ற ‘‘வெல்லும் ஜனநாயகம்” மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.
அவரது வாழ்த்துரை வருமாறு:

‘‘இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு எங்கள்பகைவர் எங்கோ மறைந்தார்’’
இன்றைய அரசியல் சூழ்நிலையில், ஒரு மதவெறி இந்தியாவை மாற்றி, மனுதர்ம இந்தியாவை மாற்றி, சமதர்ம, மனிதநேய இந்தியாவை, புதிய ஒரு இந்தியாவை இங்கே நிர்ணயிப்பதற்காக – ‘‘இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்’’ என்று புரட்சிக்கவிஞர் அவர்களின் கவிதைக்கிணங்க – வெள்ளம்போல் கூடியிருக்கக் கூடிய, கடல்போன்ற இந்தக் கூட்டத்தைப் பார்க்கின்ற நேரத்தில், நிச்சயம் இந்தியா வெல்லும்! ஜனநாயகம் வெல்லும்! அதை வர லாறு என்றும் சொல்லும், சொல்லும் என்பது உறுதி யாகின்றது. நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இங்கே முன்மொழிந்து சென்றார்களே, அதனை நடைமுறைப் படுத்துவதற்காகத்தான் – அகில இந்திய தலைவர்களும் – தமிழ்நாட்டுத் தலைவர்களும் இங்கே கூடியிருக் கின்றார்கள்.

இது தலைவர்களின் கூட்டணி அல்ல நண்பர்களே, இது மக்கள் கூட்டணி – இது கொள்கைக் கூட்டணி!

‘இந்தியா’ கூட்டணி என்பது ஒரு சில சலசலப்புகளால் மாறாது; மக்கள் தயாராகிவிட்டார்கள்; இது வெறும் தலைவர்களின் கூட்டணி அல்ல நண்பர்களே, இது மக்கள் கூட்டணி – இது கொள்கைக் கூட்டணி என்ற மிகச் சிறப்பான வகையில் அமைத்திருக்கக் கூடிய விடுதலைச் சிறுத்தைகளின் இந்த அற்புதமான மாநாடு – ‘‘வெல்லும் ஜனநாயகம்” என்ற தலைப்பில் நம்முடைய அருமைச் சகோதரர் – வரலாற்றிலே புதிய பொன் னேட்டை எப்பொழுதும் எழுதிக் கொண்டிருப்பதற்கு சளைக்காத, ஒரு கொள்கைப் போராளியாக, சமூகப் போராளியாக இருக்கக்கூடிய அன்புச் சகோதரர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் மானமிகு எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களே,

‘இந்தியா’ கூட்டணி வெல்லும் என்பதை உறுதி செய்துகொண்டிருக்கக் கூடிய
ஒப்பற்ற முதலமைச்சர்!

இங்கே சிறப்பாக உரையாற்றி விடைபெற்றுச் சென்றிருக்கின்ற, ‘இந்தியா’ கூட்டணி என்றைக்கும் வெல்லும் என்பதை உறுதி செய்துகொண்டிருக்கக் கூடிய, நம்முடைய ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மாண்புமிகு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களே,
மேடையில் இருக்கக் கூடிய அத்துணைத் தலை வர்களான பெருமக்களே, வெள்ளம்போல் திரண் டிருக்கக் கூடிய, கடலின் எழுச்சியோ என்று நினைக்கக்கூடிய அளவிற்கு இங்கே வந்திருக்கக் கூடிய அருமைச் சகோதரர்களே!

ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமானால், நாம் ஒன்றுபட்டு நிற்கவேண்டும்!

கட்சி இல்லை, ஜாதி இல்லை, மதம் இல்லை – ஜனநாயகம் காப்பாற்றப்படவேண்டும்; ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமானால், நாம் ஒன்றுபட்டு நிற்கவேண்டும் என்று நினைத்து இங்கே வந்திருக்கக் கூடிய உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படி ஒரு சாதனையை படைத்துள்ள நம்முடைய அருமைச் சகோதரர் எழுச்சித் தமிழர் இம்மாநாட்டிற்கு எல்லோரையுமே அழைத்திருக்கின்றார்.
இங்கே வந்திருக்கக்கூடிய தலைவர்கள் எல்லாம், பதவிக்கான தலைவர்கள் அல்ல!
இங்கே வந்திருக்கக்கூடிய தலைவர்கள் எல்லாம், பதவிக்கான தலைவர்கள் அல்ல; மக்களுக்குச் செய்ய வேண்டிய உதவிக்காகத் தங்களின் வாழ்நாளையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்ற கொள்கை இயக்கங் களுக்கு முன்னோடியாக இருக்கக் கூடியவர்கள்.
லட்சக்கணக்கிலே கூடியிருக்கின்ற உங்கள் மத்தியில் ஓரிரு செய்திகளை மட்டும் சொல்கிறேன்.
முதலாவதாக, நம்முடைய எழுச்சித் தமிழர் அவர்கள், இங்கே 33 தீர்மானங்களை – ஆவணப்படுத்தி இருப்பதைப்போல அந்தத் தீர்மானங்கள் இருக்கின்றன.

எல்லோருக்கும் எல்லாமும் தரக்கூடிய ஓர் இந்தியா உருவாகவேண்டும் என்பதற்காகத்தான்!

 

புதிய இந்தியா
நவீன இந்தியா
மதச்சார்பற்ற இந்தியா
மதவெறி அற்ற ஓர் இந்தியா
புதுமையாக உருவாகவேண்டும்.
எல்லோருக்கும் எல்லாமும் தரக்கூடிய ஓர் இந்தியா உருவாகவேண்டும் என்பதை மிக அருமையாக இங்கே நிறைவேற்றப்பட்ட 33 தீர்மானங்களில் அவர்கள் வடித் திருக்கிறார்கள்.

திருச்சி, ஜன.30 ‘இந்தியா’ கூட்டணி என்பது கொள்கைக் கூட்டணியாகும். யாரும் இதனை விட்டு அகல முடியாது. அதேநேரத்தில், வடக்கே சபலங்கள் உள்ளவர்கள் எப்படி வேண்டுமானாலும் போகலாம்; ஆனால், மக்களை நம்பித்தான் ‘இந்தியா’ கூட்டணி இருக்கிறதே தவிர, தலைவர்களை நம்பி அல்ல! தலைவர்கள் இந்தக் கூட்டணியில் இருந்தால், அவர்களுக்கு மரியாதை – தலைவர்கள் இந்தக் கூட்டணியில் தொடர்ந்தால், அவர்களுடைய பொதுவாழ்க்கையில் ஒரு பழி ஏற்படாது. அரசியல் நெறி தவறினால், அறங்கூற்றாகும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘வெல்லும் ஜனநாயகம்!” விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் தமிழர் தலைவர் வாழ்த்துரை!

திருச்சி சிறுகனூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கடந்த 26-1-2024 அன்று மாலை நடைபெற்ற ‘‘வெல்லும் ஜனநாயகம்” மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.
அவரது வாழ்த்துரை வருமாறு:
‘‘இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு எங்கள்பகைவர் எங்கோ மறைந்தார்’’
இன்றைய அரசியல் சூழ்நிலையில், ஒரு மதவெறி இந்தியாவை மாற்றி, மனுதர்ம இந்தியாவை மாற்றி, சமதர்ம, மனிதநேய இந்தியாவை, புதிய ஒரு இந்தியாவை இங்கே நிர்ணயிப்பதற்காக – ‘‘இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்’’ என்று புரட்சிக்கவிஞர் அவர்களின் கவிதைக்கிணங்க – வெள்ளம்போல் கூடியிருக்கக் கூடிய, கடல்போன்ற இந்தக் கூட்டத்தைப் பார்க்கின்ற நேரத்தில், நிச்சயம் இந்தியா வெல்லும்! ஜனநாயகம் வெல்லும்! அதை வர லாறு என்றும் சொல்லும், சொல்லும் என்பது உறுதி யாகின்றது. நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இங்கே முன்மொழிந்து சென்றார்களே, அதனை நடை முறைப் படுத்துவதற்காகத்தான் – அகில இந்திய தலைவர்களும் – தமிழ்நாட்டுத் தலைவர்களும் இங்கே கூடியிருக் கின்றார்கள்.

இது தலைவர்களின் கூட்டணி அல்ல நண்பர்களே, இது மக்கள் கூட்டணி –
இது கொள்கைக் கூட்டணி!

‘இந்தியா’ கூட்டணி என்பது ஒரு சில சலசலப்புகளால் மாறாது; மக்கள் தயாராகிவிட்டார்கள்; இது வெறும் தலைவர்களின் கூட்டணி அல்ல நண்பர்களே, இது மக்கள் கூட்டணி – இது கொள்கைக் கூட்டணி என்ற மிகச் சிறப்பான வகையில் அமைத்திருக்கக் கூடிய விடுதலைச் சிறுத்தைகளின் இந்த அற்புதமான மாநாடு – ‘‘வெல்லும் ஜனநாயகம்” என்ற தலைப்பில் நம்முடைய அருமைச் சகோதரர் – வரலாற்றிலே புதிய பொன் னேட்டை எப்பொழுதும் எழுதிக் கொண்டிருப்பதற்கு சளைக்காத, ஒரு கொள்கைப் போராளியாக, சமூகப் போராளியாக இருக்கக்கூடிய அன்புச் சகோதரர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் மானமிகு மாண்புமிகு எழுச்சித் தமிழர் தொல்.திருமா வளவன் அவர்களே,
‘இந்தியா’ கூட்டணி வெல்லும் என்பதை உறுதி செய்துகொண்டிருக்கக் கூடிய
ஒப்பற்ற முதலமைச்சர்!
இங்கே சிறப்பாக உரையாற்றி விடைபெற்றுச் சென்றிருக்கின்ற, ‘இந்தியா’ கூட்டணி என்றைக்கும் வெல்லும் என்பதை உறுதி செய்துகொண்டிருக்கக் கூடிய, நம்முடைய ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மாண்புமிகு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களே,
மேடையில் இருக்கக் கூடிய அத்துணைத் தலை வர்களான பெருமக்களே, வெள்ளம்போல் திரண் டிருக்கக் கூடிய, கடலின் எழுச்சியோ என்று நினைக்கக்கூடிய அளவிற்கு இங்கே வந்திருக்கக் கூடிய அருமைச் சகோதரர்களே!

ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமானால், நாம் ஒன்றுபட்டு நிற்கவேண்டும்!

கட்சி இல்லை, ஜாதி இல்லை, மதம் இல்லை – ஜனநாயகம் காப்பாற்றப்படவேண்டும்; ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமானால், நாம் ஒன்றுபட்டு நிற்கவேண்டும் என்று நினைத்து இங்கே வந்திருக்கக் கூடிய உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படி ஒரு சாதனையை படைத்துள்ள நம்முடைய அருமைச் சகோதரர் எழுச்சித் தமிழர் இம்மாநாட்டிற்கு எல்லோரையுமே அழைத்திருக்கின்றார்.

இங்கே வந்திருக்கக்கூடிய தலைவர்கள் எல்லாம், பதவிக்கான தலைவர்கள் அல்ல!

இங்கே வந்திருக்கக்கூடிய தலைவர்கள் எல்லாம், பதவிக்கான தலைவர்கள் அல்ல; மக்களுக்குச் செய்ய வேண்டிய உதவிக்காகத் தங்களின் வாழ்நாளையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்ற கொள்கை இயக்கங் களுக்கு முன்னோடியாக இருக்கக் கூடியவர்கள்.
லட்சக்கணக்கிலே கூடியிருக்கின்ற உங்கள் மத்தியில் ஓரிரு செய்திகளை மட்டும் சொல்கிறேன்.
முதலாவதாக, நம்முடைய எழுச்சித் தமிழர் அவர்கள், இங்கே 33 தீர்மானங்களை – ஆவணப்படுத்தி இருப்பதைப்போல அந்தத் தீர்மானங்கள் இருக்கின்றன.
எல்லோருக்கும் எல்லாமும் தரக்கூடிய ஓர் இந்தியா உருவாகவேண்டும் என்பதற்காகத்தான்!
புதிய இந்தியா
நவீன இந்தியா
மதச்சார்பற்ற இந்தியா
மதவெறி அற்ற ஓர் இந்தியா
புதுமையாக உருவாகவேண்டும்.
எல்லோருக்கும் எல்லாமும் தரக்கூடிய ஓர் இந்தியா உருவாகவேண்டும் என்பதை மிக அருமையாக இங்கே நிறைவேற்றப்பட்ட 33 தீர்மானங்களில் அவர்கள் வடித் திருக்கிறார்கள்.
இந்தத் தீர்மானங்கள் எல்லாம் வெறும் எழுத்துப் பக்கங்கள் அல்ல; நாளைக்கு ‘இந்தியா’ கூட்டணியின் ஆட்சி அமையப் போகிறது; அந்த ஆட்சியினுடைய சட்டத் திட்டங்களாக அவை வரப் போகின்றன என்பதற்கு அடையாளமாகும்.
அதைவிட ஒரு புதுமையை நம்முடைய எழுச்சித் தமிழர் அவர்கள் இங்கே சிறப்பாகச் செய்தார்கள்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தினுடைய
முகப்புரையை உறுதிப்படுத்தினார்!

என்ன அந்த புதுமை என்று சொன்னால், இந்திய அரசமைப்புச் சட்டத்தினுடைய முகப்புரை (பிரியாம்பிள்) என்பதை அவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.
அப்படி உறுதிப்படுத்திய நேரத்தில், அவர்களே படித்து, நாம் அத்துணை பேரும் அந்த உறுதிமொழியை இங்கே தெளிவாக சொன்னோம்.
இதை ஒழிப்பதுதான் இன்றைய பா.ஜ.க.. பெயரால், ஒன்றியத்தில் இருக்கக்கூடிய ஆர்.எஸ்.எஸ்.சினுடைய ஆட்சியாகும்.

பெரியாரும் – அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்!

‘‘இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஒழித்துவிட்டு, அதற்குப் பதிலாக மனுதர்மத்தைக் கொண்டு வர வேண்டும். ஒரு குறிப்பிட்ட மதம் என்று சொல்லக்கூடிய ஹிந்துராஷ்டிரத்தை உருவாக்கவேண்டும்” என்று நினைப்பதை, முழுக்க மறுப்பதுதான் பாபா சாகேப் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர். அவர்களின் தலையாய கொள்கை. தந்தை பெரியாரும் – அண்ணல் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று சொல்வோம்.
அப்படிப்பட்ட அவர்கள் இந்தியாவை வழிநடத் தினார்கள். இங்கே எழுச்சித் தமிழர் திருமா அவர்கள் படித்தார்களே, அந்த அரசமைப்புச் சட்டத்தினுடைய பீடிகையைப்பற்றி புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் ஓர் அற்புதமான விளக்கத்தைச் சொன்னார்கள்.

நாளைய இந்தியாவை, புதிய இந்தியாவை உருவாக்கக் கூடிய இளைஞர்கள்!

அதை இங்கே திரண்டிருக்கக்கூடிய லட்சோப லட்ச மக்கள், குறிப்பாக இளைஞர்கள், நாளைய இந்தியாவை, புதிய இந்தியாவை உருவாக்கக் கூடிய இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.
அது என்னவென்றால், சுதந்திரம், சமூகநீதி, பொரு ளாதார நீதி, அரசியல் நீதியைக் கொண்ட சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம். இவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்று அம்பேத்கர் சொன்னார். அந்த மூன்றும்பற்றி பல பேர் என்ன நினைத்தார்கள்? அரசமைப்புச் சட்டத்தைப் படித்தவர்கள் – ‘‘பிரெஞ்சு புரட்சியில் இருந்து இந்த வார்த்தைகளை எடுத்திருக் கின்றார்கள் போலிருக்கிறது; எனவேதான், பிரெஞ்சு புரட்சியினுடைய தாக்கம், அம்பேத்கர் வெளிநாட் டிலிருந்த காரணத்தினால் வந்திருக்கிறது” என்றார்கள்.

உலகத்தின் முதல் பகுத்தறிவாளரான புத்தர்!

ஆனால், புரட்சியாளர் அம்பேத்கர் சொன்னார், ‘‘நான், பிரெஞ்சு புரட்சியிலிருந்த வாசகங்களைக் கொண்டு இந்திய அரசமைப்புச் சட்டத்தை அமைக்கவில்லை. மாறாக, புத்தர் – உலகத்தின் முதல் பகுத்தறிவாளராக நாம் கருதப்படக்கூடிய புத்தர் – சமூகநீதியினுடைய மிகப்பெரிய வாய்ப் பாக இருக்கக் கூடிய புத்தர் அவர்கள் – இந்தக் கருத்தை, சுதந்திரத்தை, சமத்துவத்தை, சகோதரத் துவத்தை, சமூகநீதியை, பாலியல் உரிமைகளை எடுத்துச் சொன்னவர்” என்று அழகாகச் சொன் னார்கள்.
எனவே, அதை இந்த மாநாட்டிலே தீர்மானமாக நிறைவேற்றி இருக்கிறீர்கள். 33 தீர்மானங்களில், கடைசி யாக இருக்கின்ற தீர்மானம் – அதுதான் ‘‘வெல்லும் ஜனநாயகம்” என்று ஆக்கியிருக்கிறீர்கள்.

மக்களுக்குரிய வாய்ப்புகள் ஒவ்வொரு நாளும் பறிபோய்க் கொண்டிருக்கின்றன!

அதை என்றைக்கும் சொல்லக்கூடிய அளவிற்கு ஜனநாயகம் வெல்லவேண்டும்; அப்படி வெல்லா விட்டால், இங்கே நம்முடைய முதலமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டியதைப்போல, இனி மாநிலங்கள் இருக்காது; மதச் சுதந்திரம் இருக்காது; மக்களுக்குரிய வாய்ப்புகள் இருக்காது. இன்றைக்கே அவை ஒவ்வொரு நாளும் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. ஆகவேதான், இதனை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
அத்துணை பேரும் இன்றைக்கு ஏன் கைகோத்து நிற்கின்றோம்?
இந்தத் தேர்தலிலே நாம் கொஞ்சம் அசந்தால், ஏமாந்தால் நாடு மீண்டும் பழைய கருப்பனாகவே, பழைய இடத்திற்கேப் போய்ச் சேர்ந்துவிடும் என்பதை வலியுறுத்தத்தான் அத்துணை பேரும் இன்றைக்குக் கைகோத்து நிற்கின்றோம். இதனைப் புரிந்து கொள்ளவேண்டும்.
இங்கே நிறைவேற்றப்பட்ட 33 தீர்மானங்கள் என்று வருகின்ற நேரத்தில், ஒவ்வொரு தீர்மானமும் வரலாற்றில் நிற்கக்கூடிய செயல்திட்ட தீர்மானங்களாகும்.

மிக முக்கிய தீர்மானம் 14 ஆவது தீர்மானம்!

அதில் ஒரு மிக முக்கியமான தீர்மானம் -14 ஆவது தீர்மானமாக, நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதியை செயல்படுத்தவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்
ஒரே ஒரு உதாரணத்தைச் சொல்லுகிறேன் – இன் றைய ‘விடுதலை’யைப் பார்த்தால் உங்களுக்குத் தெளி வாகத் தெரியும்.
இங்கே வருகின்ற திங்கள்கிழமை முதற்கொண்டு, தமிழ்நாடு தேர்வாணையத்தின்மூலமாக, 245 பதவிகள், கீழமை நீதிபதிகளுக்கான பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்க விருக்கிறார்கள்.
அதில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பங்கெடுப்பார்கள். அப்படி பங்கெடுக்கும்பொழுது, அவர்களில் நான்கு பேர், உயர்நீதிமன்றத்திலிருந்து தமிழ்நாடு தேர்வாணை யத்தில் அமர்ந்திருப்பார்கள். அப்படி அனுப்பப்பட்ட வர்களில் இரண்டு பேர் பார்ப்பனர்கள்; இரண்டு பேர் மற்ற சமுதாயத்தைச் சார்ந்தவர்கள்.
சமூகநீதிக்கு எப்படியெல்லாம் குழிதோண்டப்படுகிறது என்பதைக் கண்டித்து ‘விடுதலை’யில் அறிக்கை!
அவர்கள் நடத்தும் நேர்முகத் தேர்வு 100 மதிப் பெண்களைக் கொண்டது. இந்த 100 மதிப்பெண்களைச் சேர்த்தால், ஏற்கெனவே தேர்வு பெற்றவர்கள் நீதிபதிகள் பதவிக்கு வர முடியாது. சமூகநீதிக்கு எப்படியெல்லாம் குழிதோண்டப்படுகிறது என்பதைக் கண்டித்து அறிக்கை எழுதியிருக்கின்றோம்.
அந்த நான்கு உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நீதிபதிக்கு இடம் கிடையாது; ஒரு எஸ்.டி., சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு இடம் கிடையாது. மைனாரிட்டி சமுதாயத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களுக்கோ, கிறித்தவர்களுக்கோ இடம் கிடையாது. இதை எதிர்க்கவேண்டி இருக்கிறது.
ஒரே வழி – ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெறவேண்டும்!
இப்படி ஒவ்வொரு பிரச்சினைக்கும் தனித்தனியே போராடவேண்டிய நிலையை மாற்றவேண்டுமானால், அதற்கு ஒரே வழி ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெறவேண்டும்.
ஊடகங்களில் வெளிவரக்கூடிய சில செய்திகளைப் பார்த்து, ‘‘இந்தியா கூட்டணியிலிருந்து அவர் போய் விட்டார்; இவர் போய்விட்டார்; அவர் வெளியேறுகிறார்” என்பதைப் பார்த்து நீங்கள் குழப்பமடையாதீர்கள். தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் குழப்பமடைய மாட்டார்கள்.
தமிழ்நாட்டில், 40-க்கு 40-ம் என்று சொல்வதைத் தாண்டி, ‘இந்தியா’ கூட்டணி நாடு முழுவதும் வெற்றி பெறும். தென் இந்தியாவில் பா.ஜ.க.விற்கு இடமில்லை என்று காட்டியிருக்கின்றோம்; அதுபோலவே, வடக்கே உள்ள மக்களும் பா.ஜ.க.விற்குத் தோல்வியைத் தரு வதற்குத் தயாராக இருக்கிறார்கள்.
பிரதமர் மோடி கடைசியாக
ராமனை நம்பிக்கொண்டிருக்கின்றார்!
ஏனென்றால், மோடி தருகின்ற உத்தரவாதம் எதையுமே அவர் நிறைவேற்றுவதில்லை என்று எல்லோரும் தெரிந்துகொண்டார்கள். அதனால், அவர் கடைசியாக ராமனை நம்பிக்கொண்டிருக்கின்றார்.
எனவே, நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்! ‘இந்தியா’ கூட்டணி என்பது கொள்கைக் கூட்டணியாகும். யாரும் இதனை விட்டு அகல முடியாது.
மக்களை நம்பித்தான் ‘இந்தியா’ கூட்டணி இருக்கிறதே தவிர, தலைவர்களை நம்பி அல்ல!
அதேநேரத்தில், வடக்கே சபலங்கள் உள்ள வர்கள் எப்படி வேண்டுமானாலும் போகலாம்; ஆனால், மக்களை நம்பித்தான் இந்தியா கூட்டணி இருக்கிறதே தவிர, தலைவர்களை நம்பி அல்ல! தலைவர்கள் இந்தக் கூட்டணியில் இருந்தால், அவர்களுக்கு மரியாதை. தலைவர்கள் இந்தக் கூட்டணியில் தொடர்ந்தால், அவர்களுடைய பொதுவாழ்க்கையில் ஒரு பழி ஏற்படாது. அரசியல் நெறி தவறினால், அறங்கூற்றாகும்.
பொதுவாகவே, ‘ஆயாராம் காயாராம்’ போல, இங்கே இருந்து அங்கே ஒடுவது; அங்கே இருந்து இங்கே ஓடுவது போன்ற வித்தைகளெல்லாம் தமிழ்நாட்டில் ஒருபோதும் நடக்காது. வேண்டு மானால், வடநாட்டில் ஒரு சில பகுதிகளில் நடக்க லாம்; அதைக் கண்காணிக்கத்தான் அகில இந்திய தலைவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள்.
சரியான நேரத்தில்
விடுதலைச் சிறுத்தைகளின் மாநாடு!
எனவே, சரியான நேரத்தில் நம்முடைய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் திருமா அவர்கள், இந்த அற்புதமான மக்கள் கடலைக் கொண்ட மாநாட்டினைக் கூட்டி, சரியான தீர்மானங்களை இங்கே நிறைவேற்றியிருக்கிறார்.
ஏமாந்துவிடாதீர்கள்!
ஏதேதோ சொல்லி குழப்புவார்கள்; குழப்பமடையாதீர்கள்!
எனவேதான், உங்களுக்கு ஒரு வேண்டுகோள்! ஏமாந்துவிடாதீர்கள்! ஏதேதோ சொல்லி குழப்பு வார்கள்; நீங்கள் குழப்பமடையாதீர்கள். அவர் போகிறார், இவர் போகிறார்; ‘இந்தியா’ கூட்டணி பலகீனமடைகிறது என்று சொல்வார்கள்; அதை நீங்கள் யாரும் நம்பாதீர்கள்.
அதனை மறுத்துச் சொல்வதற்குத்தான் ராஜா வந் திருக்கிறார்; அதனைச் சொல்லுவதற்குத்தான் காம்ரெட் யெச்சூரி இங்கே வருகை தரவிருந்த நிலையில். இன்றைக்கு இங்கே அவர் வர இயலா விட் டாலும், அவருடைய ஆங்கில உரையை நம்மு டைய திருநாவுக்கரசு அவர்கள் இங்கே படிக்க விருக்கிறார்.
எனவே, அப்படிப்பட்ட ஓர் அற்புதமான சூழ்நிலை இருக்கிறது. இங்கே இருப்பவர்கள் கொள்கைக் கூட்டணியைச் சார்ந்தவர்கள்.

‘இந்தியா’ கூட்டணியில் உள்ளவர்கள்
யாரும் எங்கும் போகமாட்டார்கள்!

எனவேதான், இங்கே பதவிச் சபலத்திற்கோ, மற்ற மற்ற சபலங்களுக்கோ இடமில்லை. ஆகவேதான், ‘இந்தியா’ கூட்டணியில் உள்ளவர்கள் யாரும் எங்கும் போகமாட்டார்கள்.
நீங்கள் எவ்வளவு தூரம் அவர்களை இழுத் தாலும்கூட, மக்கள் தயாராகிவிட்டார்கள்.
வள்ளுவர் எழுதிய குறளில் ஒரு குறள்,
‘‘அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை”
என்பது.
எனவே, இப்பொழுது தேர்தலில் பிரச்சினை, தேர்தல் அறிக்கைகள்கூட அல்ல. மக்களுக்கு ஏற்படும் அல் லல்கள்; வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, அவர்கள் அன்றாடம் அனுபவிக்கக் கூடிய கொடுமை கள், ஜாதீயக் கொடுமைகள், மதவெறிக் கொடுமைகள், சிறுபான்மை சமுதாயத்தினர் நடமாட முடியாத ஒரு சூழல் – இவையெல்லாம்தான் இன்றைக்குப் பிரச் சினைகளாக இருக்கின்றன.
ஆகவேதான், ‘‘வெல்லும் ஜனநாயகம்” என்பதற்கு அடையாளமாகத்தான், அதை வருகின்ற தேர்தல் சொல்லவேண்டும். நிச்சயம் சொல்லும்!
வெறும் தேர்தல் பிரச்சினையல்ல – தலைமுறையைக் காப்பாற்றுகின்ற பிரச்சினை!
அப்படி இல்லாவிட்டால், நீங்கள் ஏமாந்தால், ஜனநாயகத்திற்கு ஏற்பட்டத் தோல்விதான் என்று வரும். இது வெறும் தேர்தல் பிரச்சினையல்ல – தலைமுறையைக் காப்பாற்றுகின்ற பிரச்சினை.
ஆகவேதான், நம்முடைய தலைமுறையைக் காப் பாற்றவேண்டுமானால், வருகின்ற மக்களவைத் தேர்த லில் இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். தலைமுறையைப் பாதுகாக்கவேண்டும்.
நம்முடைய தலைவர்கள் தந்தை பெரியாரானாலும், பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களானாலும், மார்க்ஸ் போன்றவர்களானாலும், இன்னும் பல தலை வர்கள் தமிழ்நாட்டினுடைய ஒப்பற்றத் தலைவர்கள், இந்தியாவினுடைய ஒப்பற்ற போராளிகள் – சமூகநீதிப் போராளிகள் – இவர்கள் எல்லாம் போராடி, இன்றைக்கு ஒரு கட்டத்திற்கு வந்திருக்கின்றோமே – அதனைக் காப்பாற்றி ஆகவேண்டும்; அதனை வளர்க்கச் செய்யவேண்டும் என்பதற்காகத்தான் இந்த மாநாடு – கலங்கரை வெளிச்சம்போன்று வழிகாட்டி இருக்கிறது.

33 தீர்மானங்களும், நமக்கு வெறும் காகிதங்கள் அல்ல; அறிவாயுதங்கள்!

இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 33 தீர்மானங்களும், நமக்கு வெறும் காகிதங்கள் அல்ல; அறிவாயுதங்கள்.
இந்த அறிவாயுதங்களைப் பயன்படுத்தி, மக்க ளிடையே எடுத்துச் சொல்லி, மிகப்பெரிய மாற் றத்தை, மறுமலர்ச்சியை உருவாக்குங்கள்.
எழுச்சித் தமிழர் திருமா அவர்களுக்கு வாழ்த்துகள்! நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்!
சரியான நேரத்தில்,
சரியான முடிவெடுத்து,
சரியான தலைவர்களை அழைத்து
சரியான ஏற்பாடுகளைச் செய்து, இம்மாநாட்டிற்கு ஏற்பாடு செய்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் திருமா அவர்களுக்கு வாழ்த்துகள்! நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்!
பாராட்டுகள் மட்டுமல்ல – சிறுத்தைகள் ஒரு காலத்தில் காட்டில் இருந்தன; இப்பொழுது நாட்டிற்கு வந்திருக்கின்றன.
‘‘பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டது – சிறுத்தையே வெளியே வா!” என்று புரட்சிக்கவிஞர் சொன்னார்!
‘பூட்டிய இருப்பு’ இருக்கிறது – ஆனால், சிறுத்தை வெளியில் இருக்கிறது.
‘‘வெல்லும் ஜனநாயகத்திற்கு’’ போர்ப் படை வீரர்களாக இருப்பார்கள் – கொள்கை வீரர்களாக இருப்பார்கள்!
இதுபோன்று வெளியில் இருக்கிறது என்று சொன் னால், அந்த சிறுத்தைகள் உழைத்து ‘‘வெல்லும் ஜன நாயகத்திற்கு” போர்ப் படை வீரர்களாக இருப்பார்கள் – கொள்கை வீரர்களாக இருப்பார்கள்!
நாம் வெல்வோம்!
‘‘ஜனநாயகம் வெல்லும்!! அதை வரலாறு என்றைக்கும் சொல்லும், சொல்லும்!!! என்று கூறி, வாய்ப்பளித்த உங்கள் அனைவருக்கும் நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்து, விடைபெறுகிறேன்!
வாழ்க ஜனநாயகம்!
பாதுகாப்போம் அரசமைப்புச் சட்ட உரிமைகளை!
நன்றி, வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரை யாற்றினார்.

No comments:

Post a Comment