அரசாணை
இடு பொருள்களின் விலை உயர்வை ஈடு செய்யவும், பால் உற்பத்தியை உயர்த்தி அதைக் கூட்டுறவு நிறுவனமான ஆவினுக்கு வழங்க வழி வகுக்கவும், ஒரு லிட்டருக்கு ரூ.3 ஊக்கத் தொகையை 18.12.2023 முதல் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கரோனா
இந்தியாவில் நேற்று (20.1.2024) காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 313 பேருக்கு தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால் கரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 50 லட்சத்து 23 ஆயிரத்து 461 ஆக அதிகரித்தது.
தேர்வு
சிவில் நீதிபதி பதவிக்கு வரும் 29ஆம் தேதி முதல் நேர்முகத் தேர்வு தொடங்கும் என்று தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
அதிவேக ரயில்
சென்னை – மைசூர் இடையே அதிவேக புல்லட் ரயில் திட்டம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
உத்தரவு
சார் பதிவாளர்கள் அலுவலகங்களில் தங்கள் உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களை அனுமதிக்கக்கூடாது என சார்பதிவாளர்களுக்கு பதிவுத் துறை அதிரடி உத்தர விட்டுள்ளது.
அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரியில் 19.1.2024 அன்று
700 கன அடியாக இருந்த நீர் வரத்து நேற்று (20.1.2024) காலை நிலவரப்படி வினாடிக்கு
1,500 கன அடியாக அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment