‘சிந்து சமவெளி நாகரிகம் – ஓர் அறிமுகம்’ – கருத்தரங்கம்
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற “சிந்து சமவெளி நாகரிகத் தொல்லியல் களங்களில் தடயவியல் ஆய்வுகள்” எனும் தலைப்பிலான சிறப்பு சொற்பொழிவினை தென் கொரியா நாட்டின் கொரியா பல்கலைக் கழக தொல்லியல் பேராசிரியர் முனைவர் கிம்யோங்ஜூன் ஆற்றினார். தொல்லியலாளர் முனைவர் ச. தீபிகா, ‘சிந்து சமவெளி நாகரிகம் – ஓர் அறிமுகம்’ எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார். சிறப்புச் சொற்பொழிவாளர் கிம்யோங்ஜூன் அவர்களுக்கு திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவர் முனைவர் பெ. ஜெகதீசன் பயனாடை அணிவித்திட, செயலாளர் பேராசிரியர் அ. கருணானந்தன் ‘பெரியார் சிந்தனை பற்றிய ஆங்கிலப் புத்தகத்தினை நினைவுப் பரிசாக வழங்கினார். உடன்: மய்யத்தின் இணைச் செயலாளர்கள் முனைவர் ஆர். சரவணன், முனைவர் ரஷீத்கான், பொருளாளர் வீ. குமரேசன் இருந்தனர். (சென்னை பெரியார் திடல் – 24-1-2024)
No comments:
Post a Comment