
அய்தராபாத், ஜன.25 தெலங்கானா மாநிலத்தில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளான சங்கரா ரெட்டி அருகே உள்ள துலதாபாத் மற்றும் ஹத்னூரா ஆகிய பகுதிகளில் ராமன் கோவில் திறப்பு விழாவை கொண்டாடுகிறோம் என்ற பெயரில் இந்துத்துவா குண் டர்கள் முஸ்லிம் வியாபாரி களின் கடைகளுக்குத் தீ வைத்து எரித்தது மட்டுமல் லாமல், வாகனங்களையும் சேதப்படுத்தி வன்முறை நிகழ் வுகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிகழ்வு தொடர்பாக துலதாபாத் மற்றும் ஹத்னூரா பகுதியின் முஸ்லிம் மக்களும் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ள தால், அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதனால் சங்கராரெட்டி யில் பலத்த பாதுகாப்பு ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் தேவாலயம் மீது தாக்குதல்
பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபுவா மாவட்டத்தின் ராணாபூர் அருகே உள்ள தப்தலை கிராமத்தில் 21.1.2024 அன்று ராமன் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு இந்துத் துவா அமைப்பினர் ஊர்வலம் நடத்தினர்.
இந்த ஊர்வலத்தின் பொழுது ஊர்வலத்தில் பங் கேற்ற இந்துத்துவா குண் டர்கள் அந்த பகுதியில் பிரார்த்தனை நடைபெற்றுக் கொண்டிருந்த தேவாலயத் திற்குள் புகுந்து சுவர் மீது ஏறி அங்கு இருந்த கம்பத்தில் காவி கொடிகளை ஏற்றி “ஜெய் சிறீ ராம்” என கூச்சலிட்டனர்.
திசைதிருப்பும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
தேவாலயத்தின்மீது தாக் குதல் நடத்தியவர்கள் தப்தலை கிராமத்தின் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட் டதாக தகவல் வெளியாகி னாலும், இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை எவ்வித நட வடிக்கையும் எடுக் காமல் இந்துத்துவா குண்டர் களுக்கு ஆதரவாகவே செயல் பட்டு வருகிறது. இதுகுறித்து ஜபுவா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அகம் ஜெயின் கூறுகையில், ”இது தொடர்பான விசாரணையில் பிரார்த்தனை நடந்த இடம் தேவாலயம் அல்ல. அது தனி நபரின் வீடு. எனவே எப்அய் ஆர் பதிவு செய்யவில்லை” என பிரச்சினையை திசை திருப் பும் வகை யில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment