28.1.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
♦ நாடாளுமன்ற தேர்தல் – உ.பியில் காங்கிரசுக்கு 11 தொகுதிகள்: சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவிப்பு.
♦ ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் பேச்சு.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
♦ டில்லி அரசை கவிழ்க்க 7 ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ.25 கோடி லஞ்சம் – பா.ஜ மீது முதலமைச்சர் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு
♦ நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் கொண்டு வரப்படும் மசோதாக்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் பிரதிநிதிகளால் முழுமையாக விவாதிக்க அனுமதிப்பது தான் ஜனநாயகத்தின் மாண்பு. மேலும், வினாக்கள்-விடைகள் நேரம், நேரமில்லா நேரத்தில் உறுப்பினர்களை முழுமையாக பேச அனுமதிக்க வேண்டும் என்று மும்பையில் நடந்த பேரவைத் தலைவர்கள் மாநாட்டில் தமிழ்நாடு பேரவைத் தலைவர் மு.அப்பாவு கூறினார்
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ மராத்தா சமூகம் மராத்தா இடஒதுக்கீடு குறித்த விதிகளை இறுதி செய்ய காத்திருக்கும் நிலையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின் (ளிஙிசி) கீழ் உள்ள சமூகங்கள் தங்களின் 27 சதவீத இடஒதுக்கீடு சுருங்கிவிடும் என்று அஞ்சுகிறார்கள், மேலும் தெருவுக்கும் நீதிமன்றத்திற்கும் போராட தயாராக உள்ளனர் என தகவல்.
தி டெலிகிராப்:
♦ மணிப்பூரில் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த அமித் ஷா அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மல்லிகார்ஜுன் கார்கே வலியுறுத்தல்.
– குடந்தை கருணா
No comments:
Post a Comment