இந்திய அரசின் விருது பெற்ற திரையிசைப் பாட கரும், பெண் இசையமைப்பா ளராகப் பல படங்களில் பணி யாற்றியவரும், இசைஞானி இளையராஜா அவர்களின் மகளுமான பவதாரிணி அவர் கள் இளம் வயதில் உடல் நலக் குறைவால் மறைவுற் றார் (25.1.2024) என்பது பெரிதும் வருந் தத்தக்க தாகும்.
தன்னுடைய குரலாலும், இசையாலும், தனித்த திறமையாளராகப் புகழ்பெற்ற அவரது மறைவுக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், அவரது தந்தையார் இசைஞானி இளையராஜா, சகோதரர்கள், வாழ்விணையர் ஆகியோ ருக்கும், குடும்பத்தினருக்கும் நமது ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
26.01.2024 –
No comments:
Post a Comment