கழக செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு உடலுக்கு தமிழர் தலைவரின் கண்ணீரும் வீரவணக்கமும்
கதறிய குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்!
இயக்க சிந்தனையைத் தவிர வேறு சிந்தனையே இல்லாதவர் சு.அறிவுக்கரசு!
இரங்கல் கூட்டத்தில் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் புகழாரம்!
கடலூர், ஜன. 24, செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு உடலுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி நேரில் கண்ணீருடன் வீரவணக்கம் செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்! தொடர்ந்து பிற்பகலில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் துணைத் தலைவர் தலைமையேற்று உரையாற்றினார்.
திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு .அறிவுக்கரசு 22.01.2024 அன்று அதிகாலை 12.45 மணியளவில் உடல்நலக் குறைவால் சுயமரியாதைச் சுடரொளியானார். இதனைத் தொடர்ந்து 23.01.2024 அன்று மாலை 3 மணியளவில், அன்னா ரின் எண். 2, செட்டி கோயில் சந்து முகவரியில் உள்ள இல்லத்தில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் இயக்கத் தோழர்கள் சாரை சாரையாக வந்து கலந்து கொண்டு, கழகத்தின் செயல வைத் தலைவருக்கு தங்களின் இறுதி மரியாதையை செலுத் தினர். நியூசிலாந்திலிருந்து செயலவைத் தலைவரின் மகன் மணி நிலவன் உள்பட அன்னாரின் பிள்ளைகள், உறவினர்கள், கழகத் தோழர்கள், பொதுமக்கள் இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 5 மணியளவில் வீட்டுக் கூடத்தில் வைக்கப்பட்டி ருந்த கழக செயலவைத் தலைவர் உடலை, கழகத் தோழர்கள் சுமந்தபடி வெளியில் கொண்டு வந்தனர். ஆம்புலன்சுடன் வந்திருந்த புதுவை ஜிப்மர் மருத்துவமனை பொறுப்பாளர் களிடம் கழகத்தின் துணைத் தலைவர் உடல்கொடைக்கான சான்றுகளை ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து, உடல் ஆம்புலன்சில் வைக்கப்பட்டு, செயலவைத் தலைவரின் உட லைச் சுமந்த வாகனம் மெதுவாக நகர்ந்தது. கண்கள் கலங்க, துயர உணர்ச்சி மேலிட்ட வகையில் ஊமை ஜெயராமன், இளந்திரை யின் ஆகியோர் கொள்கை முழக்கங்களோடு தோழர்களும், குடும்பத்தினரும், பொதுமக்களும் பெரும் திரளாக சிறிது தூரம் பின்தொடர்ந்தனர். பிறகு வாகனம் புறப்பட்டது.
கண்ணீர் மல்க வைத்த இரங்கல் உரைகள்!
முன்னதாக, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்கள் வீ.அன்புராஜ், முனைவர் துரை.சந்திரசேகரன், கழக ஒருங் கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், திமுக மாநகர செயலாளர் ராஜா, திமுக சட்டமன்ற மேனாள் உறுப்பினர் இள.புகழேந்தி இரங்கல் உரை ஆற்றினர். மேலும் ம.தி.மு.க. கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆ.வந்தியத் தேவன், தமிழ்நாடு அரசு அலுவலர் சங்க மாநிலத் தலைவர் அமிர்த குமார், கழக கடலூர் மாவட்ட தலைவர் சொ. தண்ட பாணி, சிதம்பரம் மாவட்ட செயலாளர் அன்பு. சித்தார்த்தன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் அரங்க.பரணிதரன், தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் பாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமர்நாத், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் திருமார்பன், நாகை மாவட்டத் தலைவர் நெப்போலியன், திருவள்ளூர் மாவட்ட தலைவர் மணி, காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் முரளி, அரியலூர் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம், தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன், கழக காப்பாளர் அரங்க பன்னீர்செல்வம், கலைஞர் பகுத்தறிவு பாசறை பொறுப்பாளர் கி.கோ. செல்வமணி, ஈரோடு சம்பத், தலைமைக் கழக அமைப்பாளர் த.சீ.இளந்திரையன், புதுவை மாநில தலைவர் சிவ.வீரமணி, ப.க துணைப் பொதுச் செயலா ளர்கள் அண்ணா சரவணன், அரூர் ராஜேந்திரன்,மேகநாதன் ஆகியோர் இரங்கல் உரையாற்றினர்.
பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்
பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தனது இரங்கல் உரையில், “என்னுடைய சிறிய வயதில் அறிவுக்கரசு அவர்களைப் பார்க்கும்போது ஒரு ராணுவ வீரரைப் பார்ப்பது போல் தான் இருந்தது. ஆகவே அவரிடம் இருந்து விலகி இருந்தேன். அவரைப் புரிந்து கொண்டவுடன் ஒரு நண்பரைப் போல பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அவரிடமிருந்து நிர்வாகம் தொடர்பாக பல விசயங்களை நான் கற்றுக்கொண்டேன். அவ ருக்குப் பிடித்த விசயங்களைத் தெரிந்து கொண்டு அவற்றை அவருக்கு செய்து கொடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஆங்கிலம், தமிழ் இரண்டு மொழிகளிலும் படிக்கவும், எழுதவும் கூடியவர். அப்படிப்பட்டவரை இழந்திருக் கிறோம்” என்று கண்ணீர் மல்க பேசினார்.
கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் கழகத் தலைவரின் இரங்கலுரையை கூட்டத்தில் வாசித்துக் காட்டி, “அய்யா அறிவுக்கரசுவின் புகழ் ஓங்குக! என்று கூறினார். கழக ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா, ஜெயக்குமார் பேசும் போது, “பன்முக ஆற்றல் பெற்றவர்! எழுத்தாளர், பேச்சாளர், ஒரு தொழிற்ச் சங்கவாதி, சிறந்த நிர்வாகி, உலக அளவில் பெரிய நட்பு வட்டத்தைப் பெற்றவர், இயக்கம் தொடர்பான ஏதாவது அய்யம் என்று அவரிடம் கேட்டால் கணினி போல விரைந்து சொல்லக்கூடிய ஆற்றலாளர், சிறந்த நினைவாற்றல் பெற்றவர், ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் புலமை பெற்றவர். அவருடன் அரை மணி நேரம் பேசினால் 20 புத்தகங்களைப் படித்த அறிவு கிடைக்கும் என்றும், பெயருக்கேற்ற அவரது அறிவின் சிறப்பு பற்றியும் பலரும் குறிப்பிட்டுப் பேசினர்.
துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தனது இரங்கல் உரையில், ”சிறந்த எழுத்தாளர்! சு. அறிவுக்கரசு பிறந்ததிலிருந்தே பகுத்தறிவுப் பாலை உண்டவர்! அருமையான தோழர்! இயக்கத்தை ஆழமாகப் புரிந்துகொண்டவர்! இயக்க உணர்வு! கொள்கை உணர்வு! இயக்கமே வாழ்வாக கருதியவர்! இயக்கம் தவிர வேறு சிந்தனையே இல்லாதவர்! தோழர் அறிவுக்கரசு அவர்கள் எந்தக் கொள்கைக்காக வாழ்ந்தாரோ, எந்த தலைவரின் தலைமையை ஏற்று இறுதிவரை தொண்டாற் றினாரோ அவர் வழியைப் பின்பற்றி நாமும் வாழ்வோம்” என்று கூறினார்.
இரங்கல் நிகழ்வில் பங்கேற்றோர்
பாவலர் அறிவுமதி, மக்கள் அதிகாரம் மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சி. ராஜூ, திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பெருநற்கிள்ளி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மாதவன்,திமுக செயற்குழு உறுப்பினர் விக்ரமன், திமுக ஒன்றிய துணைச் செயலாளர் குணசேகரன், தமிழ்நாடு அரசு அலுவலர் சங்க மேனாள் தலைவர் சூரியமூர்த்தி, அறிவியல் மன்ற அமைப்பாளர் அறிவழகன், திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்டத் தலைவர் சதீஷ், புதுவை தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் செங்குலத்தார், திராவிடர் விடுதலைக் கழக விழுப்புரம் மாவட்ட செயலாளர் சாக்ரடீஸ், திராவிடர் விடுதலைக் கழக கொள்கை பரப்பு செயலாளர் சீனி.விடுதலை அரசு, மக்கள் அதிகாரம் மாநகரச் செயலாளர் ரவிச்சந்திரன், மாநகரத் துணைச் செயலாளர் பாண்டியன், புதுவை மாவட்ட செயலாளர் மணியரசன், செந்தாமரைக் கந்தன், ராஜேஷ்குமார், தந்தை பெரியார் திராவிடர் கழக புதுவைத் தலைவர் வீரமோகன், செயலாளர் சுரேஷ், தொழிற்சங்க தலைவர் ஜெகன், அரியாங்குப்பம் தொகுதி செயலாளர் முருகன், கடலூர் மாவட்ட தமிழ் சங்க தலைவர் ராச.குழந்தை வேலன், கோட்டேரி ஊராட்சி மன்ற தலைவர் முத்து.கதிரவன், ரூப நாராயண நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சி.கிருஷ்ணமூர்த்தி, கடலூர் அனைத்து பொதுநல கூட்டமைப்பு தலைவர் எஸ்.எம்.கே. ரவி உள்பட அரசு ஊழியர் சங்க பொறுப்பாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர். திண்டிவனம் மாவட்டத்தலைவர் இர.அன்பழகன்,மாவட்ட செயலாளர் செ.பரந்தாமன், தலைமை கழக அமைப்பாளர் தா.இளம்பரிதி, மாவட்ட மகளிரணி தலைவர் விஜயலட்சுமி தாஸ், திண்டிவனம் பகுத்தறிவாளர் கழக செயலாளர் நவா.ஏழுமலை, நகர கழக தலைவர் உ.பச்சையப்பன், மயிலம் ஒன்றிய செயலாளர் தழுதாளி அன்புக்கரசன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் கே. பாபு, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மு. இரமேஷ், மாணவர் கழக தோழர் பிரகாஷ்,பெ.கார்த்தி, பெரியார் பற்றாளர் தோழர் கஜேந்திரன், மாநில இளைஞரணி துணை செயலாளர் தா.தம்பி பிரபாகரன், அ.கஸ்தூரி மயிலம் ஒன்றிய மகளிர் அணி செயலாளர், திருப்பூர் மாவட்ட ப.க தலைவர் கோபி குமாரராஜா, வழக்குரைஞர் வீரமர்த்தினி, கலைமணி, ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் உடுமலை வடிவேல், பூவை பகுதித் தலைவர் பெரியார் மாணாக்கன், மாவட்ட மகளிர் அணித் தலைவர் பூவை செல்வி, இசையின்பன், மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் செ.பெ.தொண்டறம், ஆவடி நகரச் செயலாளர் தமிழ்மணி, மெர்சி ஏஞ்சலா, அமலி ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிறைவாக அறிவுக்கரசு அவர்களின் மருமகன் முனைவர் ஜெயக்குமார், “இதை நாங்கள் எங்கள் குடும்பத்தின் இழப்பாகவே கருதவில்லை. ஏனெனில் அவருக்கு தனியாக குடும்பம் என்று ஒன்று இல்லை. இயக்கம்தான் அவருடைய குடும்பம்! ஆகவே இந்த இயக்கத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு! இந்த இயக்கக் குடும்ப இரங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி! அறிவுக்கரசு மாமா அவர்களின் புகழ் ஓங்குக! அவருக்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!” என்று கூறி இரங்கல் நிகழ்வை நிறைவு செய்தார். இறுதியில் அனைவரும் ஒரு நிமிடம் அமைதியாக இருந்து இறுதி மரியாதை செய்தனர்.
வேலூர் மாவட்டம்: வேலூர் மாவட்டத் தலைவர் வி.இ.சிவக்குமார், கழக காப்பாளர் வி.சடகோபன், பொதுக்குழு உறுப்பினர் கு.இளங்கோவன், மாநில ப.க. அமைப்பாளர் இர.அன்பரசன், மாவட்ட ப.க. செயலாளர் மா.அழகிரிதாசன், குடியாத்தம் நகர தலைவர் சி.சாந்தகுமார், மாவட்ட ப.க. துணைத் தலைவர் பி.தனபால்.
வடசென்னை: மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், இளைஞரணி தமிழ்முரசு.
சோழிங்கநல்லூர்: மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன், வீரபத்திரன்.
ஆத்தூர்: மாவட்டத் தலைவர் வானவில், மாவட்டச் செயலாளர் நீ.சேகர், செல்வம், அருள்.
தென்சென்னை: மாவட்ட துணைச் செயலாளர் சா.தாமோதரன், மாவட்ட இளைஞரணி தலைவர் வழக்குரைஞர் துரை.அருண்.
விழுப்புரம்: மாவட்ட அமைப்பாளர் சே.வ.கோபண்ணா, மாவட்ட துணைத் தலைவர் க.திருநாவுக்கரசு, மாவட்ட செயலாளர் அரங்க.பரணிதரன், மாவட்ட இளைஞரணி தலைவர் விழுப்புரம் சதீஷ், வண்டிப்பாளையம் இராவணன்.
அரியலூர்: மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகன், மாவட்ட செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன், மாநில ப.க. அமைப்பாளர் தங்க.சிவமூர்த்தி, மா.இணைச் செயலாளர் இரத்தின.இராமச்சந்திரன், மா.இ.அ. தலைவர் க.கார்த்திக், மாவட்ட வழக்குரைஞரணி மு.ராஜா, மா.இ.அ. அமைப்பாளர் க.செந்தில், ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன், செந்துறை ஒன்றிய தலைவர் மு.முத்தமிழ்ச்செல்வன், அரியலூர் ஒன்றிய தலைவர் சி.சிவக்கொழுந்து, தா.பழூர் ஒன்றிய அமைப்பாளர் சி.தமிழ்சேகரன், தா.பழூர் ஒன்றிய செயலாளர் பி.வெங்கடாசலம்.
துறையூர்: மாவட்டத் தலைவர் ச.மணிவண்ணன், கிளைச் செயலாளர் பாரதி.
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி, காப்பாளர் இர.இராசு, புதுவை மாவட்ட தலைவர் வே.அன்பரசன், மாவட்ட அமைப்பாளர் இரா.சடகோபன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு.தமிழ்ச்செல்வன், மாவட்ட இளைஞரணி தலைவர் தி.இராசா, விடுதலை வாசகர் வட்ட செயலாளர் ஆ.சிவராசன், ப.க. அமைப்பாளர் ஆடிட்டர் இரா.இரஞ்சித்குமார், மாவட்ட துணைத் தலைவர் மு.குப்புசாமி, புதுவை நகரட்சித் தலைவர் மு.ஆறுமுகம், புதுவை நகராட்சி செயலாளர் எஸ்.கிருஷ்ணசாமி, பொதுக்குழு உறுப்பினர் லோ.பழனி, நகராட்சித் தலைவர் துளசிராமன் (உழவர்கரை), அல்போன்ஸ், பொதுக்குழு உறுப்பினர் விலாசினி, கல்பனா.
மேட்டூர்: மேட்டூர் மாவட்ட காப்பாளர் ஜி.எஸ்.சுப்பிரமணி, மாவட்ட தலைவர் கா.கிருஷ்ணமூர்த்தி
திருவண்ணாமலை: வட்டாட்சியர் ஓய்வு போளூர் சு.பன்னீர்செல்வம், மாவட்ட தலைவர் சி.மூர்த்தி, மாவட்ட இணைச் செயலாளர் அண்ணாதாசன்.
கிருட்டிணகிரி: மாவட்டத் தலைவர் தா.அறிவரசன்
விருதுநகர்: பொதுக்குழு உறுப்பினர் புகழேந்தி, மாவட்டத் தலைவர் நல்லத்தம்பி
தாம்பரம்: தாம்பரம் சுமதி பொய்யாமொழி, படப்பை செ.சந்திரசேகரன், கு.வைத்திலிங்கம், புதுமை இலக்கியத் தென்றல் தலைவர் செல்வ.மீனாட்சிசுந்தரம், வழக்குரைஞர் வேலவன், பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வெங்கடேசன்.
ஊற்றங்கரை செ.சிவராஜ், சீனிமுத்து இராஜேசன், தருமபுரி கருபாலன், இர.கிருட்டினமூர்த்தி, மாவட்டத் தலைவர் சர வணன், மகளிரணி சங்கீதா, மாநில எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர் திருப்பத்தூர் கவிதா, குடியாத்தம் தேன்மொழி..
காரைக்கால்: மாவட்டத் தலைவர் கிருட்டினமூர்த்தி, மாவட்ட செயலாளர் பொன்.பன்னீர், மகளிரணி அனிதா இராதாகிருஷ்ணன்
பட்டுக்கோட்டை: மாவட்டத் தலைவர் பெ.வீரையன், மாவட்ட செயலாளர் மல்லிகை வை.சிதம்பரம், மாவட்ட ப.க. தலைவர் ஆ.இரத்தினசபாபதி, பொதுக்குழு உறுப்பினர் இரா.நீலகண்டன்.
தஞ்சாவூர்: மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் அ.அருணகிரி, மாவட்ட துணைச் செயலாளர் உத்ராபதி, மாவட்ட இணைச் செயலாளர் தி.வ.ஞானசிகாமணி, மகளிரணி மாவட்டதலைவர் அல்லிராணி, வடசேரி ஊராட்சி மன்ற மேனாள் தலைவர் இன்பமூர்த்தி, மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் கரந்தை டேவிட், உரத்தநாடு வடக்கு ஒன்றியத் தலைவர் இர.துரைராஜ், செயலாளர் அ.சுப்பிரமணியன், பகுத்தறிவு ஊடகத்துறை மா.அழகிரிசாமி, ஒன்றியதுணைத் தலைவர் நா.வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி தலைவர் கருவிழிக்காடு சுப்பிரமணியன்.
திருவாரூர்: மாவட்டத் தலைவர் வீ.மோகன், மாவட்டச் செயலாளர் வீர.கோவிந்தராசு, நகரத் தலைவர் சவு.சுரேஷ், நகர துணைத் தலைவர் ஜெயராஜ்
கோவை: மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகர், விடுதலை அ.மு.இராஜா, தொழிலாளரணி நெல்லைமுத்து, முத்து கணேசன்.
பொள்ளாச்சி கழக மாவட்டம்: காப்பாளர் தி.பரமசிவம், மாவட்டத்தலைவர் சி.மாரிமுத்து, மாவட்ட துணைத் தலைவர் ஜெ.செழியன்.
மதுரை: மாவட்டக் காப்பாளர் தே.எடிசன்ராசா, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர் வா.நேரு, காப்பாளர் சே.முனியசாமி, பொறியாளர் மகேந்திரன், மாவட்ட செயலாளர் இரா.சுரேசு, மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் க.எரிமலை, செயலாளர் ஜெ.பாலா, பகுதி செயலாளர் பிச்சைப்பாண்டி, பகுதிச் செயலாளர் போட்டோ இராதா, பகுதிச் செயலாளர் சோ.சுப்பய்யா, மதுரை முருகேசன்.
அரூர்: அரூர் மாவட்ட ப.க. தலைவர் அரூர் இராஜேந்திரன்.
திருச்சி: மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், கல்பாக்கம் இராமச்சந்திரன், பெல் ஆறுமுகம், செ.ப.செல்வம், பூமிநாதன், கங்காதரன், பன்னீர்செல்வம், திருவரங்கம் இராஜா.
மன்னார்குடி: மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மாவட்ட செயலாளர் கோ.கணேசன், மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணைச் செயலாளர் வீ.புட்ப நாதன், மன்னை நகர இளைஞரணிச் செயலாளர் மா.மணி கண்டன், ஒன்றிய இளைஞரணித் தலைவர் வாஞ்சியூர் இளங் கோவன், ப.க. செயலாளர் கோவி.அழகிரி, ஒன்றியத் தலைவர் மு.தமிழ்ச்செல்வன், மன்னை நகர தலைவர் மு.ராமதாஸ்.
திருவள்ளூர்: மாவட்டத் தலைவர் மணி, மாவட்ட செயலா ளர் கிருட்டினமூர்த்தி, அறிவுச்செல்வன், ஸ்டாலின், எழில்.
நாகப்பட்டினம்: மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலி யன், மாவட்ட செயலாளர் ஜெ.புபேஷ்குப்தா, மாவட்ட துணைத் தலைவர் பொன்.செல்வராசு, நாகை ஒன்றியத் தலைவர் கு.சின்னதுரை, மாநில சட்டக்கல்லூரி மாணவரணி அமைப் பாளர் மு.இளமாறன்.
திருப்பத்தூர்: மாவட்டத் தலைவர் கே.சி.எழிலரசன், மாநில ப.க. துணைத் தலைவர் அண்ணா சரவணன், மாவட்டச் செயலாளர் பெ.கலைவாணன், சோலையார்பேட்டை அமைப் பாளர் ராஜேந்திரன், மாவட்ட ப.க. தலைவர் சி.தமிழ்ச்செல்வன், சோலையார்பேட்டை ஒன்றியச் செயலாளர் பாண்டியன்.
சேலம்: மாவட்டத் தலைவர் அ.ச.இளவழகன், மாவட்ட செயலாளர் ப.வைரம், மாநகரத் தலைவர் அரங்க.இளவரசன், மாநகரச் செயலாளர் சி.பூபதி, மாவட்ட இ.அ. தலைவர் தமிழர் தலைவர்.
இராணிப்பேட்டை மாவட்டம்: மாவட்டத் தலைவர் லோகநாதன், மாவட்ட அமைப்பாளர் ஜீவன்தாஸ்.
காஞ்சி: மாவட்டத் தலைவர் முரளி.
சிதம்பரம்: மாவட்டத் தலைவர் பேரா.பூ.சி.இளங்கோவன், மாவட்டச் செயலாளர் அன்பு.சித்தார்த்தன், மாவட்ட துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன், சிதம்பரம் நகர அமைப்பாளர் இரா.செல்வரத்தினம், மாவட்ட ப.க. அமைப்பாளர் கோவி.நெடுமாறன், பேராசிரியர் இரா.திருமாவளவன், மாவட்ட இளைஞரணித் தலைவர் சிற்பி சிலம்பரசன், காட்டுமன்னார்குடி ஒன்றியச் செயலாளர் முருகன், மாவட்ட அமைப்பாளர் கு.தென்னவன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பஞ்சநாதன், ஆண்டிப்பாளையம் குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர் வலசை அரங்கநாதன், ஒன்றியத் தலைவர் பாளையங் கோட்டை பெரியண்ணசாமி, மாவட்ட அமைப்பாளர் கா.கண்ணன்.
கல்லக்குறிச்சி: மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர், மாவட்ட செயலாளர் சுந்தரராஜன், மாவட்ட துணைத் தலைவர் குழ.செல்வராசு, பொதுக்குழு உறுப்பினர் பெரியசாமி, ஒன்றியத் தலைவர் செல்வ.சக்திவேல், ப.க. தலைவர் எழில்நிலவன்.
கடலூர்: மாவட்டத் தலைவர் சொ.தண்டபாணி, மாவட்ட செயலாளர் கவிஞர் எழிலேந்தி, பொதுக்குழு உறுப்பினர் நா.தாமோதரன், கடலூர் மாநகரத் தலைவர் தென்.சிவக்குமார், மாவட்ட அமைப்பாளர் சி.மணிவேல், மாவட்ட துணைச் செயலாளர் நா.பஞ்சமூர்த்தி, மாவட்ட இளைஞரணித் தலைவர் நா.உதயசங்கர், பெரியார் வீரவிளையாட்டு கழகத் தலைவர் இரா.மாணிக்கவேல், வேகாக்கொல்லை கிளைத் தலைவர் இரா.வேணுகோபால், கட்டியங்குப்பம் சேகர், சிவா, நூலகர் கண்ணன், ஒன்றியச் செயலாளர் பா.செந்தில்வேல், கடலூர் தருமன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டிஜிட்டல் இராமநாதன், நெய்வேலி பாஸ்கர், ப.க. தருமலிங்கம், இந்திரா நகர் கிளைக் கழகத் தலைவர் பாஸ்கர், நூலகர் மாதவன், மாநில ப.க. அமைப்பாளர் பெரியார்செல்வம், வடலூர் கலைச்செல்வம், வடலூர் ரமா பிரபா ஜோசப், பண்ருட்டி கோ.புத்தன், பண்ருட்டி பெருமாள், வடலூர் முருகன்.
விருத்தாசலம்: மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன், மாவட்டச் செயலாளர் ப.வெற்றிச்செல்வன், பொதுக்குழு உறுப் பினர் தங்க.இராசமாணிக்கம், மாவட்ட இளைஞரணித் தலைவர் செ.சிலம்பரசன், விருத்தாசலம் நகரத் தலைவர் ந.பசுபதி, விருத்தாசலம் நகர அமைப்பாளர் சு.காரல்மார்க்ஸ், மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் பி.பழனிச்சாமி, மாவட்ட துணைத்தலைவர் அ.பன்னீர்செல்வம், மாவட்ட துணைத் தலைவர் த.சேகர், விருத்தாசலம் ஒன்றியத் தலைவர் கி.பால முருகன், கா.அறிவழகன், வேப்பூர் வட்டாரச் செயலாளர் ம.இளங் கோவன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் ஆ.செந் தில், பெண்ணாடம் நகரத் தலைவர் செ.கா.இராஜேந்திரன்.
தமிழர் தலைவர் கண்ணீருடன் செலுத்திய வீரவணக்கம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி சுயமரியா தைச் சுடரொளி சு. அறிவுக்கரசு அவர்களின் உடலுக்கு வீரவணக்கம் செலுத்த ஜனவரி 23 ஆம் தேதி காலையில் 6 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு, காலை 10.30 மணியளவில் கடலூர் அறிவுக்கரசு இல்லம் வந்தடைந் தார். அறிவுக்கரசு உடல் வைக்கப்பட்ட இடத்திற்கு ஆசிரியர் சென்றார். இயக்கக் குடும்பத்தலைவர் வந்த நிலையில் குடும்பத்தார் கண்ணீர் பெருக்கினர். ஆசிரியர், அறிவுக்கரசு உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் மீது மலர் மாலையை வைத்தார். பின்னர் தலை குனிந்தபடியே சில நிமிடங்கள் பெட்டியின் உள்ளிருக்கும் செயலவைத் தலைவரின் உடலையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் கண்ணாடியைக் கழற்றி தானாக வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். அதைக்கண்டு மீண்டும் அங்கு உணர் வலைகள் பொங்கியது. பின்னர் ஆறுதலைப் பெறுங்கள் என்பதைப் போல அறிவுக்கரசு வின் பிள்ளைகளின் கைகளைப் பற்றியபடி சில மணித்துளிகள் இருந்தார். தோழர் அரிமாவளவனிடம் 22 ஆம் தேதி அதிகாலை யில் நடந்த விவரங்களை கேட்டுத் தெரிந்து கொண்டார். பின்னர் கனத்த இதயத்துடன் வெளியில் வந்து சூழ்ந்திருந்த கழகத் தோழர்களிடம் இரங்கல் நிகழ்ச்சியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகளைத் தெரிவித்தார். உள்ளூர் பிரமுகர்களைச் சந்தித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற இருந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள புறப்பட்டுச் சென்றார்.
செயலவைத்தலைவர் சு. அறிவுக்கரசு கலந்து கொண்ட இறுதி நிகழ்வு!
சுயமரியாதைச் சுடரொளி ஆகிவிட்ட அறிவுக்கரசு அவர்கள், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் குற்றாலம் பயிற்சி முகாமிற்கு தனக்கிருந்த உடல்நலக் குறைவிலும், கடலூரிலிருந்து வருகை தந்து உற்சாகமாக பாடம் எடுத்தவர்! கடலூர் வட்டாரப் பகுதிகளில் நடந்த, அய்ந்து ”பெரியாரியப் பயிற்சிப் பட்டறைகளில் பங் கெடுத்துக் கொண்டார். நடப்பு ஆண்டான 2024 ஜனவரி 17 ஆம் தேதி, தஞ்சை மாவட்டம் உரத்தநாடு ஒன்றியம் வடசேரியில் உள்ள மல்லிகா அய்யனார் திருமண மகாலில், தஞ்சை மாவட்ட இணைச் செயலாளர் தீ.வ.ஞானசிகாமணி – ராணி ஆகியோரின் மகன் ஞானத்திலீபன் – ம.சிந்து ஆகியோரின் இணையேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அவ்விணையேற்பு விழாவினை கழகத்தின் செயலவைத்தலைவர் தலைமையேற்று நடத்தி வைத்தார். இதற்காக அவர், தனது உடல் நிலை யையும் பொருட்படுத்தாது, திருமண மண்டபத்தின் உயரமான படிகளில் மிகுந்த சிரமத்துடன் ஏறி வந்து அரை மணி நேரத்திற்கும் மேலாகப் பேசியது குறிப்பிடத் தக்கது. மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா. ஜெயக் குமார் தான் இந்நிகழ்வுக்கு தேதி கேட்டு அறிவுக்கரசு அவர்களிடம் பேசியிருக்கிறார். தனது சிரமத்தை செயலவைத்தலைவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார். தோழர்கள் விரும்புகின்றனர் என்று சொன்னதும், ”தோழர்கள் விரும்பினால் கலந்து கொள்கிறேன்” என்று விருப்பம் தெரிவித்திருக்கிறார். அந்நிகழ்வே அவருக்கு இறுதி நிகழ்ச்சியாக அமைந்து விட்டது.
No comments:
Post a Comment