கட­லூர் மருத்­து­வர் வெ.நமச்­சி­வா­யம் மறைவு குடும்பத்தினருக்கு தமிழர் தலைவர் ஆறுதல் - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 28, 2024

கட­லூர் மருத்­து­வர் வெ.நமச்­சி­வா­யம் மறைவு குடும்பத்தினருக்கு தமிழர் தலைவர் ஆறுதல்

15-30

கட­லூர், ஜன.28- சிதம்­ப­ரம் ரிஜிஸ்ட்­ரார் சு.பூவ­ரா­கன் அவர்­க­ளின் பேத்தி பூங்­கொ­டி­யின் கண­வ­ரும், நிலவு பூ. கணே­ச­னின் மூத்த மரு­ம­க­னு­மான கட­லூர் குழந்தைகள் மருத்­துவ நிபு­ணர் வெ.நமச்­சி­வா­யம் (வயது 81) அவர்­கள் நேற்று (27.1.2024) பிற்­ப­கல் 3.00 மணி­ய­ள­வில்இயற்கை எய்­தி­னார் என்­பதை அறி ­விக்க வருந்­து­கி­றோம்.

சுய­ம­ரி­யாதை இயக்­கக் குடும்­பத்­தில், நிலவு. பூ.கணே­ச­னின் மூத்த மகள் பூங்­கொடி- மருத்­து­வர் வெ.நமச்­சி­வா­யம் இணை­ய­ரின் திரு­ம­ணம் நாவ­லர் தலை­மை­யில் கட­லூ­ரில் நடை­பெற்றது.

கட­லூர் மாந­க­ரில் குழந்­தை­க­ளுக்­கான சிறப்பு மருத்­து­வ­ரா­கத் திகழ்ந்து மிக­வும் பிர­ப­ல­மா­ன­வர். சேவை மனப்­பான்­மை­யு­ட­னும், பகுத்­த­றி­வுக் கொள்­கை­யு­ட­னும், முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர், இன­மா­னப் பேரா­சி­ரி­யர், ஆசி­ரி­யர் கி.வீர­மணி மற்­றும் திரா­விட இயக்­கத் தலை­வர்­க­ளு­டன் கொள்கை வழி உற­வி­ன­ரா­கத் திகழ்ந்­த­வர் மருத்­து­வர் வெ.நமச்­சி­வா­யம் ஆவார்.

இவ­ருக்கு மருத்­து­வர் ந.பூங்­கு­ழலி கோபி­நாத் என்ற மக­ளும், மருத்­து­வர் ந.பூங்­குன்­றம் என்ற மக­ளும் உள்­ள­னர்.
செய்­தி­ய­றிந்து கழக நிர்­வா­கி­க­ளும், திரா­விட இயக்­கச் சிந்­த­னை­யா­ளர்­க­ளும், பொது­மக்­க­ளும் திர­ ளா­கச் சென்று மரியாதை அஞ்­சலி செலுத்­தி­னர்.
அவ­ரது இறுதி ஊர்­வ­லம் நாளை (29.1.2024)காலை 10 மணி­ய­ள­வில் ரங்­க­நா­தன் நகர் கடற்­க­ரைச் சாலை, கட­லூர் எனும் முக­வ­ரி­யில் உள்ள அவ­ரது இல்­லத்­தி­லி­ருந்து புறப்­பட்டு அங்­குள்ள இடு­காட்­டில் நல்­ல­டக்­கம் செய்­யப்­ப­டு­கி­றது.

மருத்துவர் வெ.நமச் சிவாயம் மறைவையொட்டி, அவர்தம் குடும்பத்தினரு டன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தமி ழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித் தார்.

No comments:

Post a Comment