
புதுடில்லி, ஜன.28- ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் சொல்வதை கண் மூடித்தனமாக அனை வரும் பின்பற்றவேண்டும் என்று எதிர்பார்க்கிறது என்று ராகுல்காந்தி சாடினார்.ர் ராகுல்காந்தி கடந்த 14ஆம் தேதி மணிப்பூரில் இந்திய ஒற் றுமை நீதி நடைப் பயணத்தை தொடங் கினார்.
25.1.2024 அன்று இந்த பயணம் மேற்கு வங் காளத்தில் நுழைந்தது. 26.1.2024 அன்று நடைப் பயணத்திற்கு ஓய்வு விடப்பட்டது.
இதற்கிடையே, மேகாலயா மாநிலத்தில் நடந்த பயணத்தின்போது அங்குள்ள பல்கலைக் கழக மாணவர்களுடன் ராகுல்காந்தி உரையாடிய காட்சிப் பதிவு 26.1.2024 அன்று வெளியிடப்பட் டது.
அதில், மாணவர்களி டையே ராகுல்காந்தி கூறியதாவது:-
நான் உங்களை பல் கலைக் கழகத்தில் சந்திக்க விரும்பினேன். ஆனால், ஒன்றிய உள்துறை அமைச்சர், பல்கலைக் கழக நிர்வாகத்தை நிர்பந் தம் செய்து, எனது நிகழ்ச் சியை ரத்து செய்ய வைத்து விட்டார்.
பல்கலைக்கழகங்கள் ஒரு காலத்தில் கருத்து சுதந்திரத்துடன் திகழ்ந் தன. தற்போது. அச்சமும், அடக்குமுறையும் விதைக்கும் மைதானங்க ளாக மாற்றப்பட்டுள்ளன. எதிர்கால இந்தியா, கூண்டுக்குள் சிறகடிக்க முடியுமா?
நாட்டில் உள்ள ஒவ் வொருவரும். தான் சொல்வதற்கு கண் மூடித் தனமாக கீழ்ப்படிய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். எதிர்பார்க் கிறது. இதுபோல் ஒரு நாடு செயல்பட முடி யுமா?
இதற்கு பதிலடி என் பது எதிர்ப்புதான் – ஒரு தனிமனிதனாக எனக் கென்று சொந்த கருத்து இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment