திருச்சி, ஜன.22- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்திய ‘மந்திரமா? தந்திரமா?’ பயிற்சிப் பட்டறை 2024 ஜனவரி 20, 21 ஆகிய இரண்டு நாட்கள் திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
20.1.2024 அன்று காலை 10 மணி அளவில் நடை பெற்ற தொடக்க விழா நிகழ்ச்சிக்கு பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வி.மோகன் தலைமையேற்று உரையாற்றினார்.
பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வா.தமிழ் பிரபாகரன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் பகுத்தறிவாளர் கழக துணை பொதுச்செயலாளர் அண்ணா. சரவணன் பகுத்தறிவாளர் கழக துணை பொதுச்செயலாளர் முனைவர் மு.சு.கண்மணி, பகுத்தறி வாளர் கழகத் துணை பொதுச்செயலாளர் புதுச்சேரி இளவரசிசங்கர், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப் பாளர் புதுச்சேரி ரஞ்சித்குமார், ‘மந்திரமா? தந்திரமா?’ நிகழ்ச்சியாளர்கள் மதுரை சுப.பெரியார்பித்தன் திண்டுக்கல் ஈட்டி கணேசன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமார் பயிற்சிப் பட்டறையை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
திராவிடர் கழக தகவல் தொழில்நுட்ப அணி மாநில ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் வி.சி.வில்வம் பயிற்சிப் பட்டறையின் நோக்கவுரையாற்றினார்.
முதல் நாள் பயிற்சி
சிறப்பு அழைப்பாளர் அகில இந்திய பகுத்தறிவாளர் கூட்டமைப்பு தலைவர் நரேந்திரநாயக் அவர்கள் ‘மந்திரமா? தந்திரமா?’ பயிற்சியை தொடங்கி பவர் பாயிண்ட் விளக்கத்துடன் பயிற்சி அளித்தார்.
மாலை 5 மணி அளவில் மதுரை சுப.பெரியார்பித்தன் தனது பாணியில் மக்களிடையே எவ்வாறு உரையாற்ற வேண்டும் என மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியை நடத்தி பயிற்சி அளித்தார்.
தொடர்ந்து நரேந்திரநாயக் அவர்கள் பயிற்சியாளர் களுக்கு பயிற்சி அளித்து இரவு 7 மணிக்கு முதல் நாள் நிகழ்வை நிறைவு செய்தார்.
இரண்டாம் நாள் பயிற்சி
ஜனவரி 21 காலை 9.30 மணிக்கு இரண்டாம் நாள் பயிற்சி தொடங்கியது. ‘மந்திரமா? தந்திரமா?’ நிகழ்ச்சி யாளர் திண்டுக்கல் ஈட்டி கணேசன் மக்களிடம் எப்படி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தோழர்களை ஒவ்வொருவராக அழைத்து செயல் விளக்கத்தில் அவர்களை ஈடுபடுத்தி பயிற்சி அளித்தார்.
தொடர்ந்து நரேந்திரநாயக் அவர்கள் பயிற்சியாளர் கள் அனைவரையும் செயல்முறை விளக்கத்தில் ஈடுபடுத்தி பயிற்சி அளித்தார்.
மாலையில் ‘மந்திரமா? தந்திரமா?’ நிகழ்ச்சியாளர் ஒரத்தநாடு க.சுடர்வேந்தன் செயல்முறை விளக்கம் கூறி பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளித்தார்.
‘மந்திரமா? தந்திரமா?’ நிகழ்ச்சியாளர் திருத்தணி தமிழ்முரசு இடையிடையே செயல்முறை விளக்கம் கூறி நிகழ்ச்சியை நடத்தினார்.
தொடர்ந்து நரேந்திரநாயக் அவர்கள் நிகழ்வை நடத்தி மாலை 5 மணிக்கு நிறைவு செய்தார்.
நிறைவு விழா
மாலை 5 மணிக்கு நடைபெற்ற நிறைவு விழாவில் திருவண்ணாமலை வெங்கட்ராமன், இராஜபாளையம் பூ.சிவக்குமார், புதுச்சேரி இளவரசிசங்கர் ஆகியோர் பயிற்சியாளர்கள் சார்பில் பயிற்சிப் பட்டறை பயன்கள் குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
பகுத்தறிவாளர் கழகம் மாநில தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் பயிற்சியில் பங்கேற்ற அனைவரையும் ஒருங்கிணைத்து நடத்திய திராவிடர் கழக, பகுத்தறி வாளர் கழக பொறுப்பாளர்களை பாராட்டி உரை யாற்றினார்.
மந்திரமா? தந்திரமா? பயிற்சிப் பட்டறையை நடத்திட ஆணையிட்டு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும், அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து ஊக்கப்படுத்திய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மற்றும் உணவு தேநீர் உட்பட அனைத்தையும் ஏற்பாடு களையும் செய்து கொடுத்த திருச்சி பெரியார் கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் தங்காத் தாளுக்கும், கல்வி நிறுவன ஊழியர்களுக்கும், இரண்டு நாள்கள் தேதியை ஒதுக்கி திருச்சிக்கு வருகை தந்து பயிற்சி அளித்த நரேந்திரநாயக் அவர்களுக்கும், பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்து இரண்டு நாட்களும் பங்கேற்று சிறப்பித்த பயிற்சியாளர்களுக்கும் சிறப்பாக ஒருங்கிணைத்த திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், பொதுச்செய லாளர்கள் வா.தமிழ்பிரபாகரன், துணைப் பொதுச்செய லாளர்கள் இளவரசிசங்கர், முனைவர் மு.சு.கண்மணி உள்பட அனைவருக்கும் நன்றி கூறி உரையாற்றினார்.
புத்தகம் பரிசளிப்பு
பயிற்சியில் பங்கெடுத்து சிறப்பித்த கிருஷ்ணகிரி கிருஷ்ணன், திருச்சி சுகுணா, திருச்சி மாரிமுத்து, ஆகிய மூன்று பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு புத்தகங்களை பரிசாக திருவரம்பூர் ஒன்றிய செயலாளர் தமிழ்ச்சுடர் வழங்கினார் நரேந்திர நாயக் அவர்களுக் கும் ஆங்கில புத்தகம் ஒன்றை வழங்கி சிறப்பித்தார்
பாராட்டு
திருச்சி பெரியார் கல்வி நிறுவனங்களின் ஒருங் கிணைப்பாளர் தங்காத்தாள் மேற்பார்வையில் இரண்டு நாட்களும் தங்குமிடம் உணவு உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் உடனிருந்து சிறப்பாக செய்து கொடுத்த திருச்சி விடுதலை மேலாளர் இராமமூர்த்தி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வாகன ஓட்டுனர் சி.தமிழ்ச்செல்வன், ஓட்டுனர் பிரபாகரன், ஒளிப்பட கலைஞர் பாண்டியன் சிறப்பாக ஒருங் கிணைத்த பகுத்தறிவாளர் கழகத் துணைப் பொதுச் செயலாளர்கள் ஆகியோருக்கு திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
குழு ஒளிப்படம்
பயிற்சியில் பங்கேற்ற பயிற்சியாளர்கள் பயிற்சி யளித்த மாணவர்கள் நரேந்திர நாயக் மற்றும் திராவிடர் கழக பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களுடன் குழு ஒளிப்படம் எடுத்துக்கொண்டு மிகுந்த மகிழ்ச்சி யுடன் விடை பெற்று ஊருக்கு புறப்பட்டு சென்றனர்
‘மந்திரமா? தந்திரமா?’ பயிற்சியில் 47 பயிற்சியாளர் களும், 15 பொறுப்பாளர்கள் உட்பட 62 நபர்கள் பங்கேற்றனர்.
பயிற்சியில் பங்கேற்றவர்களின் விவரம்
திராவிடர் கழக மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி யாளர்கள்:
1.திண்டுக்கல் ஈட்டி கணேசன்
2.மதுரை சுப.பெரியார்பித்தன்
3.ஆத்தூர் விடுதலைச் சந்திரன்
4.ஒரத்தநாடு க.சுடர்வேந்தன்
5. திருத்தணி தமிழ்முரசு
6.பழனி அழகர்சாமி
7.பேராவூரணி சோம.நீலகண்டன்
8.பெரம்பலூர் விஜயேந்திரன்
திராவிடர் கழக தோழர்கள்
(புதியவர்கள்)
1.பெரம்பலூர் சி.பிச்சப்பிள்ளை
2.அரியலூர் ரஜினிகாந்த்
3. நாமக்கல் பா. செல்வகுமார்
4.புள்ளம்பாடி பொற்செழியன்
5.திருச்சி ஆறுமுகம்
6.காளையார்கோயில் அரவிந்தன்
7.காளையார்கோயில் ராஜேஷ்
8.இராஜபாளையம் பூ.சிவக்குமார்
9.மதுரை கருப்பட்டி கா.சிவகுருநாதன்
10.திருத்துறைப்பூண்டி ஈவெரா
11. திருத்துறைப்பூண்டி உமாநாத்
12.ஜெகதாபட்டினம் சா.குமார்
13.ஊற்றங்கரை சே சிவராஜ்
14.கடலூர் க.எழிலேந்தி
15. பொள்ளாச்சி ஆனந்தசாமி
16.நாமக்கல் இராமச்சந்திரன்
17.மதுரை குலசேகரபாண்டியன்
18.மதுரை லீசுரேஷ்
19.பொள்ளாச்சி கார்த்திக்
20. மதுரை மாரிமுத்து
பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள்
(பயிற்சிக்கு புதியவர்கள்)
1. மத்தூர் அண்ணா.சரவணன்
2. புதுச்சேரி இளவரசி சங்கர்
3. புதுச்சேரி ஆடிட்டர் ரஞ்சித்குமார்
4. திருவண்ணாமலை பா.வெங்கட்ராமன்
5. தஞ்சை பாவலர் பொன்னரசு
6.கிருஷ்ணகிரி கிருஷ்ணன்
7.ஆத்தூர் இரா.மாயக்கண்ணன்
8.சென்னை ஆர்.கே.ஆசைத்தம்பி
9.புதுச்சேரி பெ.பிரசாந்த்
10.புதுச்சேரி க.திருவேந்தன்
இயக்கம் சாராதவர்கள்
(பயிற்சிக்கு புதியவர்கள்)
1.திருச்சி காட்டூர் பாரத்
2.திருப்பூர் ஓம்பிரசாத்
3.பல்லடம் மணிகண்டன்
4.திருச்சி நடராஜன்
5.திண்டுக்கல் சஞ்சீவிகுமார்
6.ஒட்டன்சத்திரம் கோபாலகிருஷ்ணன்
7.பழனி மோகனா
8.திருச்சி சுகுணா
No comments:
Post a Comment