சேலம், ஜன.22– நியாயமாக தர வேண்டிய எந்த நிதியும் தருவது இல்லை ஒன்றிய அரசு தமிழ் நாட்டை வஞ்சிக்கிறது என்று சேலம் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றம் சாட்டினார்.
கோவிலை திறக்கலாமா?
சேலத்தில் நடந்த தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டில் தி.மு.க. துணைப் பொதுச் செயலா ளர் கனிமொழி எம். பி. பேசியதா வது:-
நாம் பெரியாரின் பிள்ளைகள், வட இந்தியாவில் நடைபெற உள்ள ஒரு கோவில் திறப்பு விழாவை பற்றிப் பேசப் போவதில்லை. அதற்கு ஏன் குடியரசுத் தலைவரை அழைக்க வில்லை என்றும் கேட்கப் போவ தில்லை. பிரதமர் கோவிலை திறந்து வைப்பது பற்றியும் பேசப்போவ தில்லை. ஆனால் ஒரு கோவிலை கட்டி முடிப்பதற்கு முன்னால் திறக்கலாமா?
இதற்கு நமது அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் கூறுங்கள் (அமைச்சரிடம் கேட்க, அவர் கூடாது என்று பதில் அளித்தார்) இந்து மதத்தின் காவலர்கள் என்று கூறும் பா.ஜனதா அரசியலுக்காக, இந்து மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அரசிய லுக்காக கட்டி முடிக்காத கோவிலை திறக்கிறார்கள். இங்கே இருக்கும் எங்கள் அண்ணிக்கும் இதில் வருத்தம் இருக்கும். தனியார் அறக் கட்டளை திறக்கும் கோவிலுக்கு அரசு இலவச ரயில் விடுகிறது. இதை எல்லாம் கேள்வி கேட்டால் பா.ஜனதா அரசு ‘அய்’ஸ்(அய்.சி.இ) வைக்குது. அதாவது இன்கம் டாக்ஸ் (வருமான வரி) சி.பி.அய்.(மத்திய புலனாய் துறை), ஈ.டி. (அம லாக்கத்துறை) மூலம் மிரட்டுவது.
40-க்கு 40 கிடைக்கும்
ஆனால் தமிழ்நாட்டில் நாம் கேள்வி கேட்போம். எதிர்ப்போம். ஒன்றிய ஆட்சியை மாற்றிக் காட்டுவோம். அதில் மாற்றமும் இல்லை. ஒன்றிய அரசு அனைத்து வகையிலும் தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. தமிழ்நாட்டுக்கான நிலுவைத் தொகை வழங்கப்பட வில்லை.
இது தமிழ்நாடு. இங்கு உங்க ளுக்கு மக்கள் வாக்களிக்க மாட் டார்கள். எனவே நிவாரணம் மட்டுமல்ல. நியாயமாக வர வேண் டிய நிதியைக் கூட தரவில்லை.
வெள்ள பாதிப்பை பார்வையிட ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்தார்.
அவர் கோவிலுக்கு சென்று அங்கே ஏன் சம்பளம் குறைவு என்று கேட்கிறார் என்றால் அவர் கள் யாருக்கானவர்கள் என்று தெரியும்.
தமிழ்நாட்டில் நமக்கு 40-க்கு 40 கிடைக்கும். ஆனால், இந்தியா முழுவதும் வர வேண்டும். இங்கே இருக்கும் இளைஞர் படையினர் அந்த மாற்றத்தை கொண்டு வர, நீங்கள் வடஇந்தியாவை நோக்கி நடந்தால் போதும் மாற்றம் வரும். நாட்டை காப்பாற்றியாக வேண் டும். -இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment