புதுடில்லி, ஜன.1- ஒன்றிய அரசும், பிரதமர் மோடியும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி களை நிறைவேற்றவில்லை என காங்கிரஸ் கட்சி குறை கூறியுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தளத்தில்,
‘நரேந்திர மோடி ஜி, 2023ஆம் ஆண்டின் கடைசி நாள் நேற்று (31.12.2023). 2022ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு விவசாயியின் வருவாயும் இரட்டிப்பாக்கப்படும் என கூறியிருந்தீர்கள். ஒவ்வொரு இந்தியருக்கும் வீடு மற்றும் 24 மணி நேர மின்சாரம் என கூறியிருந்தீர்கள். நாட்டின் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலராக இருக்கும் என்றும் கூறி யிருந்தீர்கள். இவை எதுவும் நடக்கவில்லை. ஆனால் பாரதீய ஜனதாவின் பொய்கள் வலிமையானவை என்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் தெரியும்’ என குறிப்பிட்டு உள்ளார்.
இதைப்போல மக்கள் தொகை கணக் கெடுப்பு நடத்தாததை சுட்டிக்காட்டி காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேசும் ஒன்றிய அரசை சாடியுள்ளார். இதில் சந்தேகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
No comments:
Post a Comment