பேட்டரியில் சார்ஜ் ஏற்றுவதுபோன்று,
இந்த விழாமூலமாக எனக்கு சார்ஜ் ஏற்றியிருக்கிறீர்கள்!
உங்கள் நம்பிக்கையை என்றைக்கும் பாதுகாப்பது என்னுடைய கடமை; இறுதி மூச்சு அடங்குகின்ற வரையில் அதனை செய்வேன்!
சென்னை, ஜன.14 பேட்டரியில் சார்ஜ் ஏற்றுவதுபோன்று, இந்த விழாமூலமாக எனக்கு சார்ஜ் ஏற்றியிருக்கிறீர்கள்; உங்கள் நம்பிக்கையை என்றைக்கும் பாதுகாப்பது என் னுடைய கடமை; இறுதி மூச்சு அடங்குகின்ற வரையில் அதனை செய்வேன் என்றார் திராவிடர் கழகத் தலை வர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தமிழர் தலைவரின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாள் ஆங்கில மலர் – ஜிலீமீ விஷீபீமீக்ஷீஸீ ஸிணீtவீஷீஸீணீறீவீst கிஸீஸீuணீறீ ழிuனீதீமீக்ஷீ 2023
கடந்த 7.1.2024 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்ற தமிழர் தலைவரின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாள் ஆங்கில மலர் ஜிலீமீ விஷீபீமீக்ஷீஸீ ஸிணீtவீஷீஸீணீறீவீst கிஸீஸீuணீறீ ழிuனீதீமீக்ஷீ 2023 வெளியீட்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏற்புரையாற்றினார்.
அவரது ஏற்புரை வருமாறு:
சமுதாயப் பணி ஆற்றக்கூடியவர்கள்!
மிகுந்த நன்றிக்குரிய, மகிழ்ச்சிக்குரிய ஒரு நாள் இந்நாள் – அந்த நினைப்போடு வந்திருக்கின்ற முது பெரும் பெருமக்கள், – அவர்கள் எந்தப் பொறுப்பில் இருந்தபொழுதும், சமுதாயப் பணியாற்றக்கூடியவர் களான அவர்கள் நம்முடைய இந்த அரங்கத்தில், தந்தை பெரியாருக்கு நன்றி தெரிவிக்கின்ற ஓர் அற்புத மான நிகழ்ச்சிபோல நடைபெறுகின்றது.
சமூக சிந்தனையோடு தன்னுடைய ஒவ்வொரு தீர்ப்பையும் வைர வரிகளாக எழுதியவர்!
கிவிணிஜி பல்கலைக் கழகத் துணைவேந்தர் அய்யா ஜி.திருவாசகம் அவர்களும் சரி, அதேபோல, ஒப்பற்ற, மாசற்ற எந்தவிதமான ஒரு சிறு குறையோ அல்லது தவறோ சொல்ல முடியாத அளவிற்குத் தன்னுடைய பதவிக் காலத்தில் இருந்து, இன்றுவரையில் மிகப்பெரிய தனித்தன்மையோடு வாழக்கூடிய ஒரு திராவிடத் திருமகனார் என்ற அந்தப் பெருமைக்குரியவர், ஓர்ந்து கண்ணோடாது தேர்ந்து நீதி சொல்லக்கூடிய ஓர் அருளாளர், மனிதநேய பண்பாளர், சமூக சிந்தனையோடு தன்னுடைய ஒவ்வொரு தீர்ப்பையும் வைர வரிகளாக எழுதியவர். தனிப்பட்ட மனிதருக்குப் பயன்படுவதை விட, சமூகத்திற்குத் தன்னுடைய அறிவு, ஆற்றல், ஆளுமை வாய்ப்பு இவை பயன்படவேண்டும் என்று கருதி எழுதிய மாண்பமைமிகு நீதியரசர் அய்யா துரைசுவாமி ராஜூ அவர்களே,
கிவிணிஜி பல்கலைக் கழகத் துணைவேந்தர்
ஜி.திருவாசகம் அவர்களே,
ஒரு விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் அமையவேண்டும் என்று
ஓர் அன்பு வேண்டுகோள் விடுத்தேன்!
இம்மலரை பல்வேறு சிரமங்களுக்கிடையில், நான் கூட அவரிடம் கேட்பேன், ‘‘இவ்வளவு சங்கடப்பட வேண்டுமா?” என்று – இருந்தாலும் அவர் விடமாட்டார். ஒவ்வொரு ஆண்டும் ஒரு குழு அமைத்து செய்யும் பணியாகும். ‘‘என்னுடைய பிறந்த நாளை மய்யப்படுத் தாதீர்கள்; அது வெறும் பாராட்டு விழாவாக மட்டும் இருக்கக்கூடாது. அந்தந்த காலகட்டத்தில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளைப் பதிவு செய்து, அதன்மூலம் ஒரு விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் அமைய வேண்டும்” என்று ஓர் அன்பு வேண்டுகோள் விடுத் தேன். அதனைத் தொடர்ந்து கடைப்பிடிக்கக் கூடிய ‘மாடர்ன் ரேசனலிஸ்ட்’ நிர்வாக ஆசிரியரும், கழகப் பொருளாளருமான தோழர் வீ.குமரேசன் அவர்களே,
இங்கே அமர்ந்திருக்கக்கூடிய ‘விடுதலை’ நாளிதழின் நிர்வாக ஆசிரியரும், கழகத் துணைத் தலைவருமான அன்பிற்குரிய கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
மற்றும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக்கூடிய ஏராளமான சான்றோர் பெருமக்களே, கழகக் குடும் பத்தவர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இம்மலரைத் தயாரித்தவர்களுக்கு நன்றி செலுத் துவதற்காகத்தான் நான் இங்கே உரையாற்றுகிறேன்.
‘‘பாராட்டுரைகளைக் கேட்பதைவிட பெரிய தண்டனை வேறு ஒன்றும் இருக்க முடியாது!’’
ஏறத்தாழ ஒன்றரை மணிநேரம் இவ்விழா நடை பெற்று இருக்கிறது – இவ்வளவு நேரம் பாராட்டுரைகளைக் கேட்டுக் கொண்டு இருப்பது என்பது தந்தை பெரியார் அவர்கள் சொல்வார்கள் – ‘‘அதைவிட, பெரிய தண் டனை வேறு ஒன்றும் இருக்க முடியாது” என்பதைப்போல இருந்தது.
இங்கே உரையாற்றியவர்களின் உரையைக் கேட்க, கேட்க, நம்முடைய தலை வணங்கவேண்டிய அளவிற்கு இருந்தது. தலைகுனிய என்கிற வார்த்தையைச் சொல்லமாட்டேன். ஏனென்றால், தலைகுனிவு என்பது திராவிடர் கழகத்திற்கு, பெரியார் தொண்டர்களுக்கு எப்பொழுதும் ஏற்படாது.
எனவே, தலைகுனியவேண்டும் என்று சொல்வதை விட, ‘‘தலை வணங்கவேண்டிய அளவிற்கு இருந்தேன்” என்றுதான் சொல்லவேண்டும்.
எதிரிகள் கொஞ்சம் வேகமாகப் பேசும்பொழுது, நம்முடைய தலைநிமிர்ந்து நிற்கும்.
‘‘பெரியார் தந்த புத்தி!’’தான்!
நீங்கள் இங்கே சொல்லியதுபோல, அந்தத் தகுதிக்கு நான் வந்திருக்கிறேன், அந்த சாதனைகளையெல்லாம் செய்திருக்கிறேன் என்று சொன்னால், அதற்கு ஒரே ஒரு காரணம்தான் – ஒரு தனி நபர் அல்ல.
இங்கே யாரை நீங்கள் உருவகப்படுத்திச் சொன் னீர்களோ, அதற்கு அடிப்படை ஒன்றே ஒன்றுதான்.
அய்யா தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் விழாவில் சொன்ன ஒரே ஒரு செய்தி அதுதான்.
‘என்னுடைய பணிகளை முடிந்தவரையில் செய்து கொண்டிருக்கின்றேன் – தோழர்களுடைய ஒத்துழைப் போடு – குடும்ப உறவோடு. கொள்கைக் குடும்பமாக இருந்தாலும் சரி, குருதிக் குடும்பமாக இருந்தாலும் சரி, தமிழ்க் குடும்பமாக இருந்தாலும் சரி – உலகளாவிய நிலையில் இருக்கக்கூடிய ஒத்துழைப்போடு, என்னு டைய பணிகளைச் சிறப்பாக செய்ய முடிகிறது. முடிந்த அளவிற்கு உழைக்க முடிகிறது. துணிச்சலாக இருக்கிறது” என்று சொன்னார்கள்.
எல்லாவற்றிற்கும் ஒரே காரணம்தான், ‘‘பெரியார் தந்த புத்தி!”தான். வேறொன்றுமில்லை.
எதிர்ப்புகளைச் சந்திக்கின்றோமா – அதற்குத் தனித் தன்மை என்னவென்றால், பெரியார் தந்த புத்திதான்.
‘‘சொந்த புத்தி வேண்டாம்‘’ என்று பகுத்தறிவுவாதி சொல்லலாமா? என்பார்கள் புரியாமல் சிலர்!
நம்முடைய தோழர்களில் கூட சிலர் நினைப்பார்கள், ‘‘என்னடா இவர், பகுத்தறிவுவாதியாக இருக்கின்றவர், ‘‘சொந்த புத்தி வேண்டாம்; பெரியார் தந்த புத்தி போதும்” என்று சொல்கிறாரே – தந்தை பெரியார் அவர்கள்கூட ‘‘சொந்த புத்தி கொண்டு சிந்திக்கவேண்டும்” என்றுதானே சொல்லியிருக்கிறார். அதற்கு நேர் விரோதமாக சொல் கிறாரே” என்று குழப்பம் அடையலாம்.
வாழும் நிலையில் இரண்டு வகை உண்டு; தர்க்க முறையில், உண்மையான காரணங்களைச் சொல்வது என்பது அது ‘லாஜிக்’ – அதேநேரத்தில், அந்த நேரத்தில் தோன்றுவது என்பது ‘ஃபலாசி” – அது போலி வாதம். போலி விஞ்ஞானம் போன்று, போலி வாதம்.
அந்த நேரத்திற்கு அது சரியாக இருக்கும். கொஞ்ச நாள் சென்றால், அது சரியாக இருக்காது.
அப்படிப் பார்க்கும்பொழுது, ‘‘சொந்த புத்தி வேண் டாம்” என்று பகுத்தறிவுவாதி சொல்லலாமா? என்று கேட்பார்கள்.
ஆனால், பகுத்தறிவுவாதியைத் தாண்டி, சமுதாயத் தொண்டனாக, சமுதாயப் போராளியாக இந்தக் கால கட்டத்தில் ஒருவர் இருக்கும்பொழுது, அவர் என்ன நிலை எடுக்கவேண்டும்?
சொந்தப் புத்திக்கு சுயநலம், தடுமாற்றம், அனுபவக் குறைவு உண்டு!
அய்யா தந்தை பெரியார் அவர்கள் சிந்தித்து, தத் துவங்களைச் சொன்னார்; அதற்காகவே உழைத்தார். பெரியார் தந்த புத்தி என்று நான் ஏன் சொல்கின்றேன் என்று சொன்னால்,
சொந்தப் புத்திக்குச் சுயநலம் உண்டு
சொந்தப் புத்திக்குத் தடுமாற்றம் உண்டு
சொந்தப் புத்திக்கு அனுபவக் குறைவு உண்டு
ஆனால், பெரியார் தந்த புத்திக்கு மேலே சொன்ன எவையும் கிடையாது.
எனவே, என்னுடைய சொந்த புத்தி அனுபவ ரீதியாக வந்தாலும், பெரியார் தந்த புத்தியோடு அதை நான் பயன்படுத்துவதே என்னை நீங்கள் இங்கே புகழ்ந்து சொன்னவற்றிற்கு அடிப்படையானது.
தந்தை பெரியார் அவர்கள் சொன்னார், ‘‘என்னுடைய போராட்டங்களுக்கு வெற்றி நிச்சயம்; வேண்டுமானால் தாமதமாகலாம்” என்று சொன்னார்.
அந்த அடிப்படையில், தொடர்ந்து நாம் இப்பொழுது போராடவேண்டிய காலகட்டம் இது.
இன்றைக்கு நம்முன் இருக்கக்கூடிய மிகப்பெரிய சவால்!
நீதியரசர் அய்யா துரைசுவாமி ராஜூ அவர்கள் அழகாகச் சொன்னதைப்போல, ‘‘இன்றைய கால கட்டம், நாம் பெற்றதை, வளர்ப்பதைவிட, அத னைப் பாதுகாக்கப் போகிறோமா?” என்பதுதான் இன்றைக்கு நமக்கு முன் இருக்கக்கூடிய மிகப்பெரிய சவாலாகும்.
எண்ணிப் பாருங்கள், தொடர்ச்சியாக இருக் கிறது – ஒன்றிய அரசின் ‘‘விஸ்வகர்மா யோஜனா” திட்டத்தைப்பற்றி இங்கே சொன்னார்கள் – குலத்தொழில். 18 வயதாகும் ஒரு பிள்ளை, கல் லூரிக்கோ, பல்கலைக் கழகத்திற்கோ போகவேண் டியவரை – அவரவர் ஜாதித் தொழிலைத்தான் செய்யவேண்டும் என்று சொல்வதுதான் ‘‘நவீனக் குலக்கல்வித் திட்டமான விஸ்வகர்மா யோஜனா” திட்டமாகும்.
நேற்று நான் வாணியம்பாடிக்குச் சென்றிருந்தேன். அங்கு நான் தங்கியிருந்த இடம் ‘‘ஷூ தயாரிப்பு தொழிற்சாலை”யின் விருந்தினர் மாளிகை அது.
பெரியார் பார்த்திருந்தால், மிகுந்த மகிழ்ச்சியடைந்திருப்பார்!
அந்தத் தொழிற்சாலையில் 4 ஆயிரம் பேர் பணி யாற்றுகிறார்கள். அந்த 4 ஆயிரம் பேரில், 3 ஆயிரம் பேர் பெண்கள். இந்தக் காட்சியைப் பெரியார் பார்த் திருந்தால், மிகுந்த மகிழ்ச்சியடைந்திருப்பார் என்று சொன்னேன்.
அந்தத் தொழிற்சாலையில் இருந்து தயாரிக்கப்படும் காலணிகள் வெளிநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்படக் கூடியவை – உள்நாட்டில் விற்கப்படக் கூடியவை அல்ல. மிகுந்த தரத்துடன் இருக்கின்றன.
அந்தத் தொழிற்சாலைக்கு என்னை அழைத்துச் சென்று, ஒவ்வொரு பகுதியாக காண்பித்து, விளக்கம் சொல்லிக் கொண்டே வந்தார்கள். அங்கே அவரவர் அவருடைய வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
நான் அங்கே பணியாற்றும் பெண் ஒருவரைப் பார்த்து, ‘‘நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள்?” என்று கேட்டேன்.
‘‘ஏழாவது படித்திருக்கிறேன்” என்று சொன்னார்.
இன்னொருவர், ‘‘9 ஆவது படித்திருக்கிறேன்” என்றார்.
இன்னொருவர் ‘‘பிளஸ் டூ” வகுப்புவரை படித்திருக் கிறேன்” என்று சொன்னார்.
உண்மையாகவே தொழில் வளரவேண்டும் என்று நினைத்தால், அதுபோன்ற பணிகளைச் செய்யவேண் டும். இப்படி இல்லாமல், அப்பன் தொழிலைத்தான் மகன் செய்யவேண்டும்; அந்தக் குடும்பத் தொழிலைத்தான் செய்யவேண்டும்; அதுவும் 18 வயதுவந்தவுடன் அத னைச் செய்யவேண்டும் என்பதற்காக ஒன்றிய அரசு ஒரு திட்டத்தைக் கொண்டு வருகிறது என்று சொன்னால், இது எவ்வளவு பெரிய கொடுமை?
குலக்கல்வித் திட்டம் நீடித்திருந்தால், இன்றைக்கு நம்மில் யாராவது பட்டதாரிகளாக ஆகியிருக்க முடியுமா?
குலத்தொழிலை ஒழிப்பதற்காக நாம் பாடுபட்டு, குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தோம். அந்தக் குலக்கல்வித் திட்டம் நீடித்திருந்தால், இன்றைக்கு நம்மில் யாராவது பட்டதாரிகளாக ஆகியிருக்க முடியுமா?
இவ்வளவு பெரிய நிலைக்கு வந்திருக்க முடியுமா?
ஒருவர் நீதிபதியாக, இன்னொருவர் துணை வேந்தராக, அமைச்சராக, மருத்துவராக, ஆராய்ச் சியாளராக, வழக்குரைஞர்களாக வந்திருக்க முடியுமா? என்றால், வந்திருக்க முடியாது.
ஆரியம் எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணம்தான் இன்றைக்கு ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்டு இருக்கும் ‘‘விஸ்வகர்மா யோஜனா” திட்டம்.
இதற்கு முன்னோடி எது, எங்கே இருக்கிறது என்று பார்த்தால் – ஆச்சாரியாருடைய குலக்கல்வித் திட்டம் தான்.
உங்களில் பல பேருக்கு நன்றாகத் தெரியும்!
ஆச்சாரியாரால் கொண்டுவரப்பட்ட குலக்கல்வித் திட்டத்தை தந்தை பெரியார் அவர்கள் கடுமையாக எதிர்த்தார் என்ற வரலாறு உங்களில் பல பேருக்கு நன்றாகத் தெரியும்.
ஆனால், அதற்கு முன், இந்தத் திட்டத்திற்கு எங்கே விதை ஊன்றப்பட்டது என்பது நிறைய பேருக்குத் தெரியாது.
பெண்கள் படிக்கக் கூடாது என்று வெளிப்படையாகவே சொன்னவர் பாலகங்காதர திலகர்!
ஒரு நூற்றாண்டிற்கு முன்பு, எப்படி ஜோதிபாபூலே சமூகநீதிக்காகப் போராடிய நேரத்தில், அன்றைக்கு எப்படி இராஜகோபாலாச்சாரியாரும், பெரியாரும் களத் தில் நின்றார்களோ, அதுபோல நின்றவர், பாலகங்காதார திலக் என்கிற மராத்தி பார்ப்பனர் – பெண்கள் படிக்கக் கூடாது என்று வெளிப்படையாகவே சொன்னவர் அவர்.
‘‘தாழ்த்தப்பட்டவர்கள் படிக்கக் கூடாது. அதிகமாக அவர்கள் படிக்கவேண்டும் என்றால், ஆரம்பப் பள்ளி வரையில் மட்டும் படிக்கலாம்.‘‘
– இப்படி 1917-1918 ஆம் ஆண்டு காலகட்டத்தில், பம்பாய், சட்டப்பேரவையில் பாலகங்காதர திலகர் பேசுகிறார்.
ஒரு தவறான பிரச்சாரத்தைச் செய்கிறார்கள்!
‘‘பெண்கள், மனுதர்மப்படி வாழவேண்டும்; அவர்கள் படிக்கக் கூடாது. குலத்தொழில் என் னவோ அதனைச் செய்யவேண்டும்” என்று பேசினார்.
இவையெல்லாம் புரியாதவர்கள் என்ன சொல் கிறார்கள் என்றால், ‘‘பாலகங்காதர திலகர், சுயராஜ் ஜியம் நமது பிறப்புரிமை என்று சொன்னவர்; அவரைப் போன்று ஒரு தியாகி கிடையாது” என்று ஒரு தவறான பிரச்சாரத்தைச் செய்கிறார்கள்.
எப்படி வரலாற்றில் ‘‘குப்தர்கள் காலம் பொற் காலம்” என்று சொல்லி வைத்தார்களோ, கற் காலத்தைவிட, மிக மோசமான அந்தக் காலத்தை பொற்காலம் என்று நம்மை நம்ப வைத்தார்கள். பல விஷயங்களை நாம் நம்பிக் கொண்டிருக் கின்றோம்.
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எடுத்து கையாண்டிருக்கிறார்!
பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள் படிக்கக் கூடாது என்று சட்டமன்றத்திலேயே பாலகங்காதர திலகர் சொன்னதை, டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எடுத்து கையாண்டிருக்கிறார்.
‘‘செக்கு ஓட்டும் வாணியச் செட்டியார், முகச்சவரம் செய்பவர்கள் எதற்கு சட்டமன்றத்திற்குச் செல்லவேண் டும்? அங்கே சென்று இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?” என்று பாலகங்காதர திலகர் பேசியது பதிவாகியிருக்கிறது.
ஆர்.எஸ்.எசுக்கு முன்னோடி, ஆர்.எஸ்.எஸ். தத்துவர்த்தாவிற்கு மிகப்பெரிய கொள்கை முன்னோடி யார் என்றால், திலகர்தான்.
திலகருடைய கருத்தை அன்றைய காலகட்டத்திலேயே கண்டித்துப் பேசியவர் சாகுமகராஜ். அதேபோன்று, ஜோதிபாபூலே, அம்பேத்கர் ஆகியோர்.
‘‘மனுதர்மம்தான் எதிர்காலத்தில் இந்தியாவினுடைய சட்டமாக இருக்கவேண்டும்” என்று சொன்னவர்!
‘‘கீதா ரகசியம்” என்ற புத்தகத்தை எழுதியவர். மனுதர்ம சாஸ்திரத்தைப்பற்றி எழுதி, ‘‘மனுதர்மம்தான் எதிர்காலத்தில் இந்தியாவினுடைய சட்டமாக இருக்கவேண்டும்” என்று சொன்னவர் பாலகங்காதர திலகர்.
அதுதான் இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். அஜெண்டா!
ஆகவே, அந்தத் தொடர்ச்சி என்பது எத்தனை நூற்றாண்டு காலமாக தொடர்ந்து வருவது. அவ்வப்பொழுது அவர்களுடைய வித்தைகள் மாறுகின்றன. அதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், ஒரே வழி, பெரியார் தந்த புத்தியைத் தவிர, வேறு எவற்றாலும் நம்மால் புரிந்துகொள்ள முடியாது.
பெரியாரின் சிந்தனை செழிப்பதற்கு
நான் ஒரு கருவி!
அது ஒரு விஞ்ஞான முறை.
பெரியாருக்குச் சுதந்திர சிந்தனை!
சுதந்திர எண்ணம்!
சுதந்திர கருத்து!
சுதந்திர நடைமுறை!
சுதந்திர உணர்ச்சி!
இவையெல்லாம் எல்லோருக்கும் இருக்கிறது என்று சொன்னார். அதை அவர் சாதாரணமாக சிந்தித்துக் கூறினார். ஆனால், அதைப் பயன்படுத்துகின்றவர்களின் எண்ணிக்கைக் குறைவாக இருக்கின்றன. அந்த சிந்தனை செழிப்பதற்கு நான் ஒரு கருவி, அவ்வளவுதான். அதனால், என்னால் முடிந்த அளவிற்குச் செய்திருக்கிறேன்.
உங்கள் நம்பிக்கைக்குரிய அளவிற்கு, என்னை நீங்கள் உற்சாகப்படுத்தி இருக்கிறீர்கள். அந்த உற்சாகத்திற்கு நான் தலைவணங்கி நன்றி செலுத்துகின்றேன்.
எல்லோருடைய கைகளிலும் செல்போன் இருக்கிறது. அந்த செல்போனுக்கு எப்பொழுது சார்ஜ் செய்கிறோம்? நடைமுறை உதாரணத்தைச் சொன்னால்தான், பளிச்சென்று உங்களுக்கு விளங்கும்.
பேட்டரியில் சார்ஜ் ஏற்றுவதுபோன்று, இந்த விழாமூலமாக எனக்கு சார்ஜ் ஏற்றியிருக்கிறீர்கள்!
சில பேர் முறையாக அன்றாடம் இரவில் சார்ஜ் போடுவார்கள். சில பேர் சார்ஜ் அளவு குறைந்தால், சார்ஜ் போடுவார்கள். ஆகவே, செல்போனுடைய பயன் வேண்டும் என்றால், சார்ஜ் ஏற்றியிருக்கவேண்டும். சார்ஜ் போடுவதினுடைய விளைவு, மறுபடியும் அது ரிசார்ஜ் ஆகிறது.
அதுபோன்று, பயன்படக்கூடிய ஒரு கருவி நான். அந்தப் பயன்படக் கூடிய கருவி சார்ஜ் இறங்காமல் இருக்கவேண்டும் என்பதற்காக, பேட்டரியில் சார்ஜ் ஏற்றுவதுபோன்று, இந்த விழாமூலமாக எனக்கு சார்ஜ் ஏற்றியிருக்கிறீர்கள்.
இறுதி மூச்சு அடங்குகின்ற வரையில்…
சார்ஜ் குறைகிறது என்கிறபொழுது, நீங்கள் சார்ஜ் ஏற்றுகிறீர்கள் என்று நான் கருதுகிறேனே தவிர, வேறொன்றுமில்லை. சார்ஜ் ஏற்றுவதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம்; சார்ஜ் குறையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதை நீங்கள் நினைவூட்டுகிறீர்கள் என்று சொல்லி, உங்களுக்கு நன்றி கூறி, என்னுரையை முடிக்கிறேன்.
உங்கள் நம்பிக்கையை என்றைக்கும் பாதுகாப்பது என்னுடைய கடமை; இறுதி மூச்சு அடங்குகின்ற வரையில் அதனை செய்வேன்.
வந்திருக்கின்ற பெருமக்களுக்கு, சான்றோர்களுக்கு மிகப்பெரிய நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அய்யா நீதியரசர் அவர்களுக்கும், துணைவேந்தர் அவர்களுக்கும் மிகப்பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீதியரசர் அவர்கள் அபூர்வமாக வந்திருக்கின்ற நிகழ்ச்சி இது!
அய்யா நீதியரசர் அவர்கள், எந்த நிகழ்ச்சிக்கும் சுலபமாக ஒப்புக்கொள்ளமாட்டார். அவர் அபூர்வமாக வந்திருக்கின்ற நிகழ்ச்சி!
மற்றவர்கள் போன்று நிறைய பொது நிகழ்ச்சிகளுக்குப் போகமாட்டார். ஆனால், பெரியார் திடலைப் பொறுத்தவரையில், அய்யா லட்சுமணனைப் பற்றி சொன்னார் அல்லவா!
அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஜெனரலாக இருந்த காலகட்டத்தில்.
அழைப்பிதழை அச்சடித்துக் கொண்டு போய் கொடுத்தோம். ஏனென்றால், அவர் தனியாக இருக்கிறார், அவரைப் பாதுகாக்கவேண்டும் என்று நினைத்தோம்.
அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் வழக்கில், ஆயிரம் கோடி நன்றி செலுத்தவேண்டும் அவருக்கு. அப்படிப்பட்ட தீர்ப்பை வழங்கியவர்கள் அவர்கள். அவரை சங்கடப்படுத்தக் கூடாது.
இரண்டாவது, இரண்டு பேருமே உருவத்தைப்பற்றி சொன்னார்கள். எங்களுக்கு உருவம் முக்கியமல்ல, உள்ளம் முக்கியம்.
உள்ளத்தால் உறவாடி இணையக்கூடியவர்கள் நாங்கள். எனவே, உள்ளத்து உணர்ச்சிகளுக்கு நாங்கள் கடமைப்பட்டு இருக்கின்றோம்.
எங்களிடம் உரிமையோடு நீதியரசர் சண்டை போட்டார்!
இந்த நிகழ்ச்சியில் அவர் பெயரை மட்டும் போட்டு அழைப்பிதழ் கொடுத்தபொழுது, நீதியரசர் சண்டை போட்டார்.
‘‘பெரியார் திடல் வருவதற்கு என்னைவிட உரிமை உள்ளவர்கள் இருக்கிறார்களா?” என்று கேட்டார்.
மறுபடியும் அழைப்பிதழ் அச்சடித்து, இரண்டு பேரையும் இந்நிகழ்ச்சிக்கு அழைத்தோம்.
இப்படி எந்த நிகழ்ச்சிக்கும் போகாதவர், பெரியார் திடலில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு என்னை அழைக்கவில்லையே, என்று சண்டை போட்டு, வரக்கூடிய உரிமை பெற்றவராக இங்கே வந்திருக்கின்றார் நீதியரசர் அவர்கள்.
தலை தாழ்ந்த நன்றியை இருவருக்கும் தெரிவித்து என்னுரையை முடிக்கின்றேன்.
என்னுடைய தலைதாழ்ந்த நன்றி!
உங்களுக்கும் என்னுடைய நன்றியை, வணக்கத்தைத் தெரிவித்துக்கொண்டு, கடுமையாக உழைத்து இம்மலரைக் கொண்டு வந்திருக்கின்ற அருமைத் தோழர் குமரேசன் அவர்களுக்கும், இம்மலருக்குக் கட்டுரைகளை அனுப்பிய தோழர்களுக்கும், மலரைப் பெற்றுப் பரப்பக் கூடியவர்களுக்கும் என்னுடைய தலைதாழ்ந்த நன்றியைத் தெரிவித்து, என்னுரையை முடிக்கின்றேன்.
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏற்புரையாற்றினார்.
No comments:
Post a Comment