5 மாதங்களாக துணைவேந்தர் இல்லாமல் இயங்கும் சென்னை பல்கலைக்கழகம்- ஆளுநரை சாடிய ப.சிதம்பரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 27, 2024

5 மாதங்களாக துணைவேந்தர் இல்லாமல் இயங்கும் சென்னை பல்கலைக்கழகம்- ஆளுநரை சாடிய ப.சிதம்பரம்

featured image

சென்னை,ஜன.27– காங்கிரசு கட் சியின் மூத்த தலைவரும், ஒன்றிய மேனாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் சமூக வலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
1857 இல் நிறுவப்பட்ட இந்தி யாவின் முதல் மூன்று பல்கலைக் கழகங்களில் ஒன்று சென்னை பல்கலைக்கழகம். இந்த பல்கலைக் கழகம் கடந்த 5 மாதங்களாக துணை வேந்தர் இல்லாமல் உள்ளது.
ஆளுநர்- _ அரசு இடையே ஏற்பட்டுள்ள நிலைப்பாடுதான் காரணம்.
தமிழ்நாட்டில் பல சர்ச்சை களுக்கு மய்யமாக தமிழ்நாடு ஆளுநர் இருப்பது ஏன்? ஆளுநர் தான் பல சர்ச்சைகளுக்கு காரணம் என சிலர் கூறுகின்றனர். உயர்கல்வி யின் நிலை குறித்த வருத்தமான கருத்து இது.
-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment