சென்னை, ஜன. 9- திருவல்லிக்கேனி அரசு கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனை யில் தரம் உயர்த்தப்பட்ட மகப்பேறு மற்றும் சிசு கண்காணிப்பு மென் பொருளை பிக்மி 3.0 (றிமிசிவிணி 3.0) மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலை மை யில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் நேற்று (8.1.2024) தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, 6 செவி லியர்களுக்கு மகப்பேறு செவிலிய பயிற்றுநர் சான்றிதழ் வழங்கப்பட் டது.
மகப்பேறு திட்டங்கள் தொடக்கம்
சென்னை மாநக ராட்சி மேயர் ஆர்.பிரியா, சுகாதாரத் துறை செயலா ளர் ககன்தீப் சிங் பேடி, கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனை இயக்குநர் மீனா உள்ளிட் டோர் உடன் இருந்தனர்.
அப்போது, அமைச் சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
4 மகப்பேறு திட்டங் கள் தொடங்கி வைக்கப் பட்டுள்ளன.
சுகப்பிரசவங்களை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து ஆரம்ப சுகா தார நிலையங்களிலும் பராமரிப்பு, பயிற்சி பிரிவு, யோகா பயிற்றுவித்தல் தொடர்பான பல்வேறு முயற்சிகள் மேற்கொள் ளப் பட்டுள்ளன.
கர்ப்பிணிகள் மற்றும் பச்சிளங்குழந்தைகளை கண்காணிக்கும் வகையில் பிக்மி 3.0 (றிமிசிவிணி 3.0) எனும் மென் பொருள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப் பட் டுள்ளது.
இதன் மூலம் தமிழ் நாட்டில் ஏற்படுகிற பிரச வங்கள், மகப்பேறு வசதி கள், தொடர் பராமரிப்பு போன்ற பல வகையான தகவல்களை தொடர்ந்து கண்காணிக்க முடியும்.
இங்கு அறுவை அரங் கங்கள், சிறப்பு வார்டுகள், தீவிரசிகிச்சை பிரிவுகள் என்கின்ற வகையில் மிகப் பெரிய கட்டமைப் புகள் அமைக்கப்பட்டு விரைவில் பயன்பாட் டுக்கு வரவுள்ளன.
இவ்வாறு அவர் தெரி வித்தார்.
No comments:
Post a Comment