புதுடில்லி, ஜன. 13- கல்வி நிறு வனங்களில் வருகின்ற கல்வியாண்டு முதல் 2 ஆண்டுகள் பி.எட் படிப்புகளுக்கு அனுமதி இல்லை என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது.
தற்போது கல்வி நிறுவனங்களில் மூன்று ஆண்டுகள் இளநிலைப் பட்டப்படிப்பு அல்லது முதுநிலை படித்த மாண வர்கள் இரண்டு ஆண்டு கள் பி.எட் படிக்கும் வசதி நடைமுறையில் உள்ளது.
மேலும், சில கல்வி நிறுவனங்களில் 4 ஆண் டுகள் ஒருங்கிணைந்த பி.எட் பட்டப்படிப்பு திட்டமும் நடைமுறை யில் உள்ளன. அதன்படி படிக்கும் மாணவர்கள் பி.எஸ்.சி. அல்லது பி.ஏ. படிப்புடன் பி.எட் படிப் பையும் மேற்கொள்வார் கள்.
இந்த நிலையில், 2024-2025 கல்வியாண்டு முதல் 2 ஆண்டுகள் பி.எட் படிப்பை நடத்த கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் சுற்ற றிக்கை அனுப்பியுள்ளது.
அதற்கு பதிலாக அனைத்து கல்வி நிறுவ னங்களும் 4 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பி.எட் படிப்பை மட்டுமே நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள் ளது.
Saturday, January 13, 2024
2 ஆண்டு பி.எட். படிப்பு இனி இல்லை
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment