பக்தியின் காரணமாக மக்களும், அரசர்களும் நன்கொடையாக அளித்த பல்லாயிரம் கோடிக் கணக்கான கோவிலின் அசையும் மற்றும் அசையா சொத்துகளைக் கேள்வி கேட்க ஆளின்றி, காலம் காலமாக கொள்ளையடித்துக் கொழுத்த ஆரிய கூட்டமும், அந்தக் கொள்ளையில் பங்கு வாங்கி கொழுத்த தர்மகர்த்தா கூட்டமும் கொள்ளையைத் தொடர பெரும் தடையாக ஆட்சிக்கு வந்தவர்தான் நீதிக்கட்சியின் முதலமைச்சரான பனகல்அரசர் (ராமராயநிங்கர்). உயர் ஜாதியினர், பார்ப்பனர்கள், இவர்களுக்கு ஆதரவான அந்தச் சட்டத்துக்கு எதிராக காங்கிரசார் என எல்லோருடைய எதிர்ப்பையும் மீறி 1922ஆம் ஆண்டு ‘இந்து பரிபாலன சட்டம்’ கொண்டு வந்தார் பனகல்அரசர்.
1925ஆம் ஆண்டு இந்து பரிபாலன சட்டத்தில் 500 திருத்தங்களை முன்மொழிந்து எப்படியேனும் கொள்ளையை தடுக்கும் சட்டத்தை முடங்கச் செய்துவிட வேண்டுமென தீரத்துடன் செய லாற்றிய சத்தியமூர்த்தி அய்யர் கடைசியாக திருப்பதி கோவிலை மட்டுமாவது நாங்களே நிர்வகிக்க அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்து, அறநிலையத் துறையின் ஆரம்பச் சட்டத்தை ஒழித்துக்கட்ட படாதபாடுபட்டார் என்பது வரலாறு. இறுதியாக எவ்வித தடை முயற்சியும் எடுபடாமல், 1927ஆம் ஆண்டு இந்து சமயஅறநிலைய வாரியம் உருவாக் கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்ட கோவில் சொத் துக்களை மீட்கும் நடவடிக்கையும், கணக்கு வழக்கற்ற சொத்துக்களை ஆவணப்படுத்தி, அரசுப் பதிவேட்டில் பதிந்து பக்தர்களின் எண்ணத்திற்கேற்ப கோவிலின் நிர்வாகத்தை அரசு கட்டுப்பாட்டில் கொணர்ந்து, கொள்ளைக் கூட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த முதல் ஆட்சியாக நீதிக்கட்சியின் ஆட்சி விளங்கியது.
No comments:
Post a Comment