சென்னை புத்தகக் காட்சி நிறைவு 15 லட்சம் வாசகர்கள் வருகை: ரூபாய் 18 கோடிக்கு நூல்கள் விற்பனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 22, 2024

சென்னை புத்தகக் காட்சி நிறைவு 15 லட்சம் வாசகர்கள் வருகை: ரூபாய் 18 கோடிக்கு நூல்கள் விற்பனை

featured image

சென்னை, ஜன. 22- பபாசியின் சென்னை புத்தகக் காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த ஆண்டு ரூ.18 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான 46-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம் சிஏ திடலில் கடந்த ஜன வரி 6ஆ-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. நிறைவு நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி அரங்க மகா தேவன் சிறப்புவிருந்தின ராகக் கலந்து கொண்டு பதிப்புத் துறையில் 25 ஆண்டுகள் சேவை புரிந்த 24 பேருக்கு சிறப்பு விருது களை வழங்கி கவுரவித்தார்.

மொத்தம் 17 நாட்கள் நடைபெற்ற இந்த புத்த கக் காட்சியை 15 லட்சம் வாசகர்கள் பார்வையிட்டுள்ளனர். புத்தக விற்பனையும் ரூ.18 கோடி வரை நடைபெற்றதாக பபாசி நிர்வாகிகள் தெரிவித்தனர். நடப்பாண்டு குழந்தைகளுக்கான சிறுகதைகள், சரித்திர நாவல்கள், வரலாற்று நூல்களுக்கு அதிக வர வேற்பு கிடைத்தது. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாகக் கண்காட்சி யில் கடந்த 2 ஆண்டுகளா கப் பங்கேற்க முடியாமல் இருந்த புலம்பெயர் எழுத் தாளர்கள், தமிழர்கள் எனப் பலரும் இந்தாண்டு மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.

கண்காட்சியின் சிறப் பம்சமாகத் திருநங்கையர் நடத்தும் பதிப்பகத்துக் கும், தமிழக சிறைத் துறைக் கும் தலா ஓர் அரங்கம் ஒதுக்கப்பட்டது. இதில் சிறைத் துறைக்கான அரங்கத்தில் வாசகர்கள் தானம் வழங்கியதன் மூல மாகத் தமிழகம் முழுவ தும் உள்ள சிறைச்சாலை நூலகங்களுக்காக சுமார் 22 ஆயிரம் புத்தகங்கள் சேகரிக்கப்பட்டன.

எனினும், மற்ற மாவட் டங்களிலும் புத்தகக் காட்சிகள் நடத்தப்படு வதால் விற்பனை எதிர் பார்த்த அளவுக்கு இல்லை எனவும் சில பதிப்பா ளர்கள் தெரிவித்தனர். மேலும், இதனுடன் சேர்த்து நடத்தப்பட்ட தமிழக அரசின் சென்னை சர்வதேசப் புத்தகக் கண் காட்சியும் வெற்றிகரமாக அமைந்தது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment