தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்ணை திருமணம் செய்ததால்
கோவில் விழாக்களில் குடும்பத்தினர் ஒதுக்கி வைப்பாம்
பெங்களூரு,டிச.30- கருநாடகத்தில் உள்ள ஹோராபைலு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்ணைத் திருமணம் செய்த நபரையும், அந்தக் குடும்பத்தையும் அந்தப் பகுதி மக்கள் தனிமைப்படுத்தியுள்ள தீண்டாமைக் குற்றம் அரங்கேறியுள்ளது.
அந்தப் பகுதியில் உள்ள ஜாதியத் தலைவர்களின் தலைமையில் நடத்தப் பட்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள் ளது. யாரும் அந்தக் குடும்பத்தினருடன் பேசக்கூடாது, எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது, ஊர் கோயிலில் நடக்கும் விழாக்களுக்கு அவர்கள் அனும திக்கப்பட மாட்டார்கள். இந்த விதிகளை மீறுபவர்களுக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் எனவும் விதியை மீறுபவர்கள் தொடர்பான தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.500 சன்மானம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் வசித்துவந்த தினேஷ் மற்றும் பிரீத்தி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண் டுள்ளனர். தினேஷின் குடும்பமும் பிரீத்தியை ஏற்றுக் கொண்டது. ஆனால் அந்த கிராமத்தில் அதிகமாக இருக்கும் ‘ஜோகி’ பிரிவினரால் இந்த சமூக சமநிலையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதையறிந்த தினேஷின் சமூகத் தைச் சேர்ந்த மற்ற குடும்பத்தினர் இந்தக் குடும்பத்தை ஒதுக்கி வைத்துள் ளனர். மனைவி பிரீத்தி அளித்த புகாரின் அடிப் படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment