நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்: முதல் நாளிலேயே எதிர்க்கட்சிகள் கடும் அமளி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 5, 2023

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்: முதல் நாளிலேயே எதிர்க்கட்சிகள் கடும் அமளி

புதுடில்லி, டிச. 5- நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது. சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்க ளின் பேரவைத் தேர்தல் முடிவுகள் 3.12.2023 அன்று வெளியாகின. 

தெலங்கானா தவிர இதர மாநி லங்களில் பா.ஜ. வெற்றி பெற்ற நிலையில், நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் நேற்று (4.12.2023) தொடங்கியது. வரும் 22ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் 19 மசோதாக்கள் தாக்கலாக உள்ளன. காலை 11 மணிக்கு குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் நாடா ளுமன்றத் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். 

நாடாளுமன்றத்தில் கேள்வியெ ழுப்ப லஞ்சம் பெற்ற குற்றச்சாட் டில், திரிணாமுல் காங்கிரஸ் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹுவா மொய்த்ராவின் பதவி யைப் பறிக்க பரிந்துரைக்கும் மக்க ளவை நெறிமுறைகள் குழுவின் அறிக்கை, மக்களவையில் நேற்று (4.12.2023) தாக்கல் செய்யப்படுவ தாக பட்டியலிடப்பட்டது. 

ஆனால் அந்த அறிக்கை தாக் கல் செய்யப்படவில்லை. அதே சமயம் மஹுவா நேற்று நாடாளு மன்றம் வந்திருந்தார். ஆளும் பாஜக அரசை விமர்சித்து எதிர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கள் அமளியில் ஈடுபட்டதால், நண்பகல் 12 மணி வரை அவை நட வடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது.

அப்போது ஆளும்கட்சியினர் 3 மாநில தேர்தல் வெற்றி தொடர் பாக பிரதமர் மோடியை வாழ்த்தி முழக்கம் எழுப்பினார்கள். பிற் பகல் அவை கூடிய போது இது பற்றி மஹுவா மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ், ஆர்எஸ்பி நாடாளுமன்ற உறுப் பினர் பிரேமசந்திரன் ஆகியோர் கேள்வி எழுப்பினர். ஆனால் அரசு தரப்பில் எந்தவித பதிலும் அளிக் கப்படவில்லை. அதே போல் பகுஜன் சமாஜ் நாடாளுமன்ற உறுப்பினர் டேனிஷ் அலி தன்னை தரக்குறைவாக விமர்சித்த பா.ஜ நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பிதூரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் பதாகையை கட்டிக் கொண்டு வந்தார். அதனால் அவையில் சர்ச்சை ஏற்பட்டது.

இதை தொடர்ந்து பிற்பகலில் சட்டத் தொழிலை ஒரே சட்டத் தின் மூலம் ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மசோதா மக்களவையில் நிறை வேற்றப்பட்டது. குளிர்காலக் கூட் டத்தொடரில் நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் நிறைவேற்றப்பட்ட முதல் மசோதா இதுவாகும்.

எம்எஸ்.கில் மறைவுக்கு இரங்கல்

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் தொடக்க நாளில் மேனாள் தலைமைத் தேர் தல் ஆணையர் எம்.எஸ்.கில், பசு மைப் புரட்சியின் தந்தை எம்.எஸ். சுவாமிநாதன் மற்றும் மூன்று மேனாள் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் லலித்பாய் மேத்தா, பசந்தி சர்மா மற்றும் டிபி சந்திரே கவுடா ஆகியோர் காலமானதை குறிப் பிட்டு மாநிலங்களவையில் இரங் கல் தெரிவிக்கப்பட்டது.

ராகவ் சதா இடைநீக்கம் ரத்து

நாடாளுமன்ற மாநிலங்களவை யில் ஆம்ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சதா ஒரு தீர் மானத்தை தாக்கல் செய்யும் போது வேறு நாடாளுமன்ற உறுப் பினர்களின் கையெழுத்துக்கள் இடம் பெற்றன. இதுபற்றி அவர் கள் புகார் தெரிவித்ததன் அடிப்ப டையில் ராகவ் சதா நாடாளுமன்ற உறுப்பினர் காலவரையின்றி சஸ் பெண்ட் செய்யப்பட்டார். இத னால் அவர் அவை நடவடிக்கையில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. நேற்று (4.12.2023) அவரது இடை நீக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தீர்மானம் பாஜ உறுப்பினர் ஜி.வி.எல். நரசிம்ம ராவ் தாக்கல் செய்தார். இது குரல் வாக்கெடுப்பு மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து அவர் அவையில் பங்கேற்க அனு மதி அளிக்கப்பட்டது.

நிலத்தடி நீர் சட்டம் அமல்

ஒன்றிய அரசு அறிமுகப்படுத்திய நிலத்தடி நீர் சட்ட மாதிரி மசோ தாவை 15 மாநிலங்களும், ஆறு யூனியன் பிரதேசங்களும் அமல் படுத்தியுள்ளதாக ஒன்றிய ஜல் சக்தி இணை அமைச்சர் பிஷ்வேஸ் வர் துடு மாநிலங்களவையில் தெரிவித்தார். ஆந்திரப் பிரதேசம், அசாம், பீகார், கோவா, அரியானா, இமாச்சலப் பிரதேசம், கருநாடகா, கேரளா உள்பட 15 மாநிலங்களில் நிலத்தடி நீர் தொடர்பான சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 6 யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

பிளாஸ்டிக் பொருட்களை தடுக்க தீவிர நடவடிக்கை

ஒன்றிய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திடம் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மக்க ளவையில் தெரிவிக்கப்பட்டதில், ஒருமுறை மட்டுமே பயன்படுத் தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்கெனவே கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே தடை செய்யப்பட்டது. இதனை மீறும் நபர்களுக்கு கடுமையான அபரா தங்கள் விதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் மற்ற வகை பிளாஸ்டிக் பொருட்களை அதிக அளவில் மறுசுழற்சி செய்வது தொடர்பாக ஏற்கெனவே உற்பத்தியாளர்கள் மற்றும் பல்வேறு பொருட்களின் தயாரிப்பு நிறுவனங்கள் ஆகிய வற் றிற்குவழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. இயற்கைக்கு பாதகம் ஏற்படாத நார் இழை, துணி போன்ற பல்வேறு பொருட் களைக் கொண்டு மாற்று யோச னைகளும் முன்வைக்கப்பட்டு வரப்படுகிறது’ என தெரிவிக்கப் பட்டுள்ளது.

பொது சிவில் சட்டத்தை கைவிட வேண்டும்

மாநிலங்களவையில் நேற்று (4.12.2023) பேசிய திமுக நாடாளு மன்ற உறுப்பினர் பி.வில்சன், ’அனைத்து மதங்களின் பழக்கவழக் கங்களையும் ஒழித்து மதச்சார்பின் மையைக் கொல்ல ஒன்றிய அரசு நினைக்கிறது. பேரறிஞர் அண்ணா அறிமுகப்படுத்திய சீத்திருத்த சுய மரியாதை திருமணங்கள் ஆகிய அனைத்தும் இந்த பொது சிவில் சட்டத்தால் அழிக்கப்படும் சூழல் உருவாகும். மேலும் 21ஆவது சட்ட ஆணையம் இரண்டு ஆண்டு ஆலோசனைக்குப் பிறகு பொது சிவில் சட்டம் தேவையில்லை என்று பரிந்துரை செய்தது. குறிப் பாக சிறுபான்மையினருக்கு எதி ரான இந்த பொது சிவில் சட் டத்தை நிறைவேற்றும் எண் ணத்தை ஒன்றிய அரசு உடனடி யாக கைவிட வேண்டும்’ என தெரிவித்தார்.


No comments:

Post a Comment