சென்னை,டிச.31- இந்தியாவில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஜே.என்1 வைரஸ் தொற்றால் இதுவரை 4 பேர் பாதிக்கப்பட் டுள்ளனர். இந்த நிலையில் 28.12.2023 அன்று தமிழ் நாட்டில் 23 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. சென்னையில் 82 பேர் உள்பட தமிழ் நாட்டில் 156 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் ராஜீவ் காந்தி, கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, ராயப்பேட்டை உள் ளிட்ட அரசு மருத்துவமனைகளில் கரோனா சிகிச் சைக்காக படுக்கை வசதிகளுடன் தனி வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தனி வார்டுகளில் வெண்டிலேட்டர், ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேவையான மருந்து மாத்திரைகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், தனி வார்டுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் உள்ளனர். தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Sunday, December 31, 2023
அதிகரித்து வரும் தொற்று: சென்னையில், கரோனா சிகிச்சைக்காக தனி வார்டுகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment