புதுடில்லி, டிச.31- கடல் வளங்களை சூறையாடும் நோக்கத்தில் ஒன்றிய மோடி அரசு 28.12.2023 அன்று புதிய திட்டம் ஒன்றை அறி வித்தது.
அதில்,”இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் அமைந்த சில கடல் பகுதிகளை அமைச்சகம் அடையா ளம் கண்டுள்ளது. மற்ற திட்டங்களுக்கு இடை யூறு இல்லாமல் அந்த மண்டலங்களில் உள்ள கடல் பகுதியில் சுரங்கம் அமைத்து செயல்படுவ தற்கு உரிமைகளை வழங் குவது தொடர்பாக சம் பந்தப்பட்ட அமைச்ச கங்கள் மற்றும் துறைகளி டம் கருத்து கேட்கப்பட்டுள்ளது” என தெரிவிக் கப்பட்டுள்ளது.
அதாவது கடல் பகுதி களில் சுரங்கம் அமைக்க தனியாரிடம் வழங்குவது போன்ற அறிவிப்பை ஒன் றிய மோடி அரசு வெளி யிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு மூலம் மிக விரைவிலேயே கடல் பகுதிகளில் சுரங்கங்கள் அமைக்க ஒன்றிய அரசால் உரிமங்கள் வழங்கப்படு வது உறுதியாகி உள்ளது.
ஏற்கெனவே கடலோ ரங்களில் உள்ள கனரக தொழிற்சாலை மற்றும் எண்ணெய்க் கழிவு களால் கடலோரங்கள் மிகவும் மாசடைந்துள்ள நிலை யில், தற்பொழுது கனிம சுரங்கங்கள் அமைக்கப் பட்டால் கடல்வளம் கடு மையாக பாதிக்கப்பட்டு, மீன் வளம் முற்றிலும் அழிந்து போகும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
கடல் பகுதியில் சுரங் கம் அமைத்து செயல்படு வதற்கு உரிமைகளை வழங்கு வது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்ச கங்கள் மற்றும் துறைகளி டம் கருத்து கேட்கப்பட் டுள்ளது என ஒன்றிய மோடி அரசு கூறியுள்ளது. ஆனால் கடல் பகுதியில் அமைக்கப்படும் சுரங்கங் களை அரசு பொதுத்துறை நிறுவனங்கள் ஏற்கிறது என அறிவிப்பில் கூறப்பட வில்லை. உரிமம் வழங்கப் படும் என மொட்டை யாகவே கூறப்பட்டுள்ளது. அதாவது யார் வேண்டு மானாலும் உரிமம் பெற் றுக் கொள்ளலாம் என தனியாருக்கு வழங்க உள் ளது போன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதானிக்காகவா?
நாட்டில் துறைமுகங் கள், நிலக்கரி சுரங்கங்கள், எண்ணெய் வளங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளும் பிர தமர் மோடியின் நெருங் கிய நண்பரான அதானி கைகளில்தான் உள்ளது. குறிப்பாக மோடி அரசால் உருவாக்கப்படும் அனைத்துத் திட்டங் களும், அறிவிப்புகளும் அதானிக்கு சாதகமாகவே உள்ளது.
இந்நிலையில், தற் போது அறிவிக்கப்பட்டு இருக்கும் கடல் பகுதியி லும் கனிமச்சுரங்கம் அமைக்கலாம் என்ற திட் டம் ஏறக்குறைய அதானிக் காக உருவாக்கப்பட்டுள்ள திட்டம்தான் என மறை முக தகவல் வெளியாகி யுள்ளது.
No comments:
Post a Comment