சென்னை, டிச. 31 நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (30.12.2023) சந்தித்துப் பேசினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறை வேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ரவி நிலுவையில் வைத்துள்ளதாகவும், அவற்றுக்கு ஒப்புதல் அளிக்க காலவரம்பு நிர்ணயம் செய்யக் கோரியும் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் அழைத்துப் பேசுமாறு அறிவுறுத் தினர்.
அதனடிப்படையில், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் ரகுபதி, துரை முருகன், தங்கம் தென்னரசு, ராஜகண் ணப்பன் ஆகியோர் நேற்று (30.12.2023) ஆளுநர் மாளிகைக்குச் சென்றனர். ஆளு நர் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்று, தனது அறைக்கு அழைத்துச் சென்றார். இந்த சந்திப்பு மாலை 5.30 முதல் 6 மணி வரை நடைபெற்றது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆளுநருடனான சந்திப் பில், சட்டப்பேரவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்த 10 முக்கிய மசோதாக்களை, அரசியல் சாசனத்தில் குறிப்பிடாத வகை யில், தேவையின்றி குடியரசுத் தலைவருக்கு ஆளுநர்அனுப்பி வைத்துள்ளதைத் திரும் பப் பெற்று, அவற்றுக்குவிரைந்து ஒப்புதல் அளித்து,அரசுக்கு அனுப்பிவைக்க வேண் டும் என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.
பொதுவாக, அரசியல் சாசன விதிக ளுக்கு உட்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும்.அப்போதுதான், மாநில மக் களின் நலனுக்கும், நிர்வாகத்துக்கும் பயனளிக்கும் என்று முதலமைச்சர், ஆளுநரிடம் எடுத்துரைத்தார்.
இதுதவிர, ஆளுநருக்கு முதலமைச்சர் அளித்த கடிதத்தில், அரசியல் சாசனத்தின் படி அமைக்கப்பட்டுள்ள உயர்அமைப்பு களின்மீது தான்உயர்ந்த மதிப்பும், மரி யாதையும் வைத்திருப்பதாகவும், மாநில நிர்வாகம் மற்றும் மக்களின் நலன் கருதியும், நிலுவை மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு விரைந்து தீர்வு காணும் நோக்குடனேயே தான் செயல்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகுந்த மரியாதை…
சந்திப்புக்குப் பின்னர் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்த சந்திப்பு சமூகமாக நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லோருக்கும் மரியாதை கொடுக்கக்கூடியவர். ஆளுந ரும் முதலமைச்சர்மீது மிகுந்தமரியாதை வைத்திருக்கக்கூடியவர். இவை இரண் டுமே இந்த சந்திப்பில் தெளிவாகத் தெரிந் தன. விடை எப்படி வருகிறது என்பதை நீதிமன்றத்தில்தான் பார்க்க வேண்டும்” என்றார்.
அரசமைப்பு வரம்புக்கு உட்பட்டு ஆதரவு
தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆளுநர்-முதல மைச்சர் சந்திப்பு சுமூகமாக இருந்தது. ஆளுநரும், முதலமைச்சரும் பரஸ்பரம் மரியாதையைப் பரிமாறிக்கொண்டு, மாநிலம் தொடர்பான பல்வேறு பிரச் சினைகள் குறித்த தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். ஆளுநரும், தமிழ் நாட்டு மக்களின் நலனில் தான் முழு ஈடுபாட்டுடன் இருப்பதாக மீண்டும் வலியுறுத்தினார். இந்திய அரசமைப்பின் வரம்புக்கு உட்பட்டு, மாநில அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
No comments:
Post a Comment