உச்சநீதிமன்றத்தை அவமதித்த கேரள ஆளுநர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 4, 2023

உச்சநீதிமன்றத்தை அவமதித்த கேரள ஆளுநர்


திருவனந்தபுரம், டிச.4-
கேரள சட்டப்பேரவை நிறை வேற்றிய தீர்மானங்களை இரண்டு ஆண்டுகள் நிறுத்தி வைத்து ஆளுநர் என்ன செய்து கொண்டி ருந்தார் என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன் றத்தை ஆளுநர் அவம திப்பு செய்துள்ளதாக கேரள நீதித்துறை அமைச் சர் பி.ராஜீவ் குற்றம்சாட் டினார். 

கேரள ஆளுநர் நிறுத்தி வைத்த மசோதாக்கள் குறித்து செய்தியாளர்களி டம் கடந்த 30.11.2023 அன்று பேசிய ஆரிப் முகமதுகான், ‘குடியரசு தலைவரைத் தவிர தான் யாருக்கும் கட்டுப்பட வேண்டி யதில்லை’ என கூறினார். இதுகுறித்து விமர்சித்த சட்டத்துறை அமைச்சர் பி.ராஜீவ், இதன் மூலம் ஆளுநர் உச்சநீதி மன்றத்தை அவ மதிப்பு செய்துள்ளார். குடியரசு தலைவருக்கு எதிரான உத்தரவு பிறப் பிக்கவும் உச்சநீதிமன்றத் துக்கு அதி காரம் உள் ளது. 

நாட்டின் உயர்ந்த நீதிபீட மான உச்சநீதிமன்றத் துக்கு அனைவரும் கட் டுப்பட்டவர்கள் என்றார். ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் ஆளுந ரின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத நட வடிக்கைகளை கண் டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநி லக்குழு சார்பில் மாபெ ரும் ஆர்ப்பாட்டம் வியா ழனன்று மாலை நடை பெற்றது. வாலிபர் சங்க மாநிலச் செய லாளர் வி. கே.சனோஜ் உள்ளிட் டோர் ஆளுநருக்கு கண் டனம் தெரிவித்து பேசி னார்கள். ஆயிரக்கணக் கான இளைஞர்கள் பங் கேற்றனர்.

No comments:

Post a Comment