புதுடில்லி, டிச.8– உள்ளாட்சி தேர் தலில், மக்கள்தொகைக்கு ஏற்ப ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை உயர்த்தும் திட்டம் இல்லை என்று மாநிலங்களவையில் ஒன்றிய அமைச்சர் கூறினார்.
நாடாளுமன்ற மாநிலங்கள வையில் நேரத்தின் போது ஒன்றிய பஞ்சாயத்து ராஜ் இணையமைச் சர் கபில் மோரேஷ்வர் கூறிய தாவது,
அரசமைப்புச் சட்டத்தின் 243டி பிரிவின்கீழ், இதர பிற்படுத்தப்பட் டோருக்கு (ஓ.பி.சி.) 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது ஆனால், 21 மாநிலங்கள் ஓ.பி.சி.க்கு 50 சதவீத ‘ இடஒதுக்கீடு அளித்து வருகின்றன.
மக்கள்தொகைக்கு ஏற்ப உள் ளாட்சி தேர்தலில் ஓ.பி.சி.க்கான இடஒதுக்கீட்டை உயர்த்துமாறு உறுப்பினர் கோருகிறார். ஆனால் அத்தகைய திட்டம் எதுவும் இல்லை.
உள்ளாட்சி தேர்தலில் பெண் களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. அதிலேயே ஓ.பி.சி., எஸ்.சி. எஸ்.டி., ஆகிய சமூக பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப் படுகிறது.
ஓ.பி.சிக்கு இடஒதுக்கீடு அளிக்க மாநிங்களுக்கு உரிமை இருப்பதால், மாநிலங்களே முடிவு எடுக்கலாம்.
-இவ்வாறு அவர் கூறினார்.
Friday, December 8, 2023
Home
நாடாளுமன்ற செய்திகள்
உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை உயர்த்தும் திட்டம் இல்லையாம் - மாநிலங்களவையில் ஒன்றிய அமைச்சர் தகவல்
உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை உயர்த்தும் திட்டம் இல்லையாம் - மாநிலங்களவையில் ஒன்றிய அமைச்சர் தகவல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment