
புதுடில்லி, டிச.10 இந்தியாவில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் வெளி யேறுவது ஏன்? அதை தடுக்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று மக்களவையில் கனிமொழி கேள்வி எழுப்பினார். மக்களவையில் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி எழுப்பிய கேள்வியில், ‘‘இந்தியாவில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் வெளி யேறுவது அதிகரித்திருப்பது ஏன்? 2018ஆம் ஆண்டு 102 வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொடங் கப்பட்டன. ஆனால் அதே ஆண்டில் 111 வெளி நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் செயல் பாடுகளை நிறுத்தி விட்டனர்.
குறிப்பாக கோவிட் தொற்றுக்குப் பிறகு பல வெளி நாட்டு நிறுவனங்கள் சீனாவுக்கு செல்ல தயங்குகிற நிலையில் கூட, நாம் அவர்களுக்கு ஏற்ற வணிகச் சூழலை அமைத்துத் தந்துள்ளோம். அதனால் இது குறித்து எடுத்த நடவடிக்கை என்ன’?” என கேட்டி ருந்தார். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன், ‘‘வெளிநாட்டு வணிக நிறுவனங்கள் இந்தி யாவில் தங்களது கிளை அலுவலகத்தையோ, திட்ட அலுவலகத்தையோ, தொடர்பு அலுவலகத் தையோ, அல்லது தங்களின் பிரநிதிகள் அலுவலகத் தையோ தொடங்கலாம்.
இதற்கு பாரத ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் மற்றும் அரசின் பிற துறைகளின் விதிமுறைகளை அவர்கள் பூர்த்தி செய்ய வேண்டும். இதுபோன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் அலுவலகங்கள் இந்தியாவில் தொடங் கப்பட்ட 30 நாட்களுக் குள் அந்த நிறுவனங்கள் கம்பெனி பதிவாளரிடம் (டில்லி, அரியானா) கம்பெனிகள் சட்டம் 2013 பிரிவு 380இன் கீழ் உரிய ஆவணங்களுடன் விண் ணப்பித்து பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும் என எழுத்துப் பூர்வமாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment