என்னே கொடுமை - ‘உலகில் மூன்று பெண்களில் ஒருவர் பாலியல் தொந்தரவை எதிர்கொள்கிறார்கள்’ - உலக சுகாதார அமைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 3, 2023

என்னே கொடுமை - ‘உலகில் மூன்று பெண்களில் ஒருவர் பாலியல் தொந்தரவை எதிர்கொள்கிறார்கள்’ - உலக சுகாதார அமைப்பு

புதுடில்லி, டிச.3- உலகளவில் மூன்றில் ஒரு பெண் தனது வாழ்நாளில் உடல் அல்லது பாலியல் ரீதியான வன்கொடுமையை எதிர்கொள்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக, உடல்ரீதியாக அல்லது பாலியல் ரீதியான வன்கொடுமை யை எதிர்கொள்வதில் தென்கிழக்கு ஆசியப் பகுதியே உலகில் 2-ஆவது இடத்தில் இருப்பதாகவும், இந்தப் பகுதியில் 33 சதவிகித பெண்கள்  வன்கொடு மைகளுக்கு உள்ளாவதாகவும் தெரிய வந்துள்ளது.  உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியப் பகுதிக்கான இயக்குநர்  டாக்டர் பூனம் கேத்ரபால் சிங்,  இதுகுறித்து அளித் துள்ள பேட்டியில், ‘வன்முறை, வற்புறுத்தல் இல்லாத வாழ்க்கையை வாழ அனைவருக்கும் உரிமை உண்டு. பெரும் பாலான பெண்கள், தங்களுடன் வாழும் நபர்களால்தான் இதுபோன்ற கொடுமை களுக்கு ஆளாகிறார்கள். குறிப்பாக மிகவும் நெருங்கி யவர்களால் தான் பாதிக்கப்படுகிறார்கள்’ என்று தெரிவித்துள்ளார். மேலும், “பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, குறிப்பாக நெருங்கிய வர்கள் ஏற்படுத்தும் கொடுமைகள், பாதிக்கப்பட்ட பெண்களிடம் உடனடியாகவும் அதேநேரத்தில் நீண்ட காலத்திற்கும் கடுமையான உடல்நல பாதிப் புகளை ஏற்படுத்து கிறது. இவை தீவிரமான உடல், மன, பாலியல் மற்றும்  இனப்பெருக்க பிரச்சனை களை உள்ளடக்கியது.  குறிப்பாக, தனிப்பட்ட, குடும் பம், சமூகத்தில் ஏற்படும் காரணிகளால், மிகவும் நெருங்கியவர்களால் பெண்களுக்கு பாலியல் வன் கொடுமைகள் அதிகம் ஏற்படுவதை சான்றுகள் நிரூபிக்கின்றன” என்று அவர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment