"என்றும் தேவை நம் பெரியார்" சேலத்தில் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 31, 2023

"என்றும் தேவை நம் பெரியார்" சேலத்தில் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

featured image

சேலம், டிச. 31- தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி சேலம் பகுத்தறிவாளர் கழ கம் சார்பில் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி 28.12.2023 அன்று தமிழ்ச்சங்க க இராசாராம் அரங்கில் நடைபெற்றது.

நிகழ்வில் ப க மாவட்ட செயலர் சுரேசுகுமார் வரவேற்புரை நல்கிட மாவட்டத் தலைவர் வீரமணிராசு தலைமை ஏற்றிட கழக மாநில அமைப்பாளர் பாலு, ப க மாநில அமைப்பாளர் மாயக்கண்ணன் ஆகியோர் முன்னிலையில், மாநில பொதுச்செயலாளர் தமிழ் பிரபா கரனும், புகழ்ச்செல்வி இதழ் செய லர் பரணிப்பாவலனும் நோக்கத் தின் பொழிவுரை ஆற்றிட, பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட மாணாக்கர் எல்லாம் “தந்தை பெரியார் கல்லடி சொல்லடிப் பட்டு பெண்களின் முன்னேற்றத்திற்காக வும் சூத்திரன்” என்ற இழிப்பெயரை நீக்குவதற்காகவும் எவ்வளவோ இழிவினைத் தாங்கி நமக்காய் உழைத்தார் என்றும், தந்தை பெரியார்தான் பெண்களும் தமிழர் களும் தலைநிமிர்ந்து நடக்க பாடு பட்டார் என்றும், பேசி அரங்கத் தையே அதிர வைத்தனர்.

8 கல்லூரிகளிலிருந்து 48 மாணாக் கர்கள் வந்தனர். வந்தவர்களில் பெண் மாணாக்கர் 41 எஞ்சியுள்ள எழுவர் ஆண் மாணாக்கர் நிகழ் வில் நடுவர்கள் என்று யாரையும் தனியாக வைக்காமல் வந்திருந்த மாணாக்கர்களையே நடுவர்களாக நியமித்து அவர்களையே பேசும் ஒவ்வொரு மாணாக்கரின் பேச்சுத் திறன் ஒலிப்பு முறை கருத்தியல் மெய்ப்பாடு என்று மூன்று வகை யில் மதிப்பெண் போடப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர். வந்தி ருந்த மாணாக்கர் எல்லாம் சற் றொப்ப சரியான மதிப்பீடு செய்த தன் விளைவாக வெற்றியாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு பரிசுத் தொகையை நல்கினர். ஒவ் வொருவருக்கும் மூன்று மணித் துளிகள் ஒதுக்கப் பட்ட நேரத்தில் அனைத்து மாணாக்கர்களும் பெரியாரின் தொண்டு இனியும் தேவை என்ற கருத்தியல் அடிப் படையில் வைத்த சொல்லாடல்கள் எல்லாம் பார்வையாளர்களை வியக்க வைத்தன. காலை பத்த ரைக்குத் தொடங்கி பிற்பகல் மூன் றரை வரை எந்தத் தொய்வும் இன்றி சலசலப்பும் இல்லாது கட்டிப் போட்டது என்றால் மிகையில்லை.

பெரியாரின் 50ஆம் ஆண்டு இறுதி முழக்க நினைவு தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் தேனியில் நடைபெற்றது.

பேச்சாளர் நடுவே தமிழ்ப் பிரபாகரன் மற்றும் வீரமணிராசும் பெரியாரைப் பற்றி சில நினை வுகளைப் பகிர்ந்து கொண்டதும் வயிற்றுப் பசி தெரியாமல் எல் லோர்க்கும் செவிப் பசிக்கு விருந்து பரிமாறியபின் வெற்றி பெற்றவர் களின் பெயர்களை மாவட்ட ப க செயலளார் சுரேசு குமார் அறிவித்தார்.
முதல் பரிசு: 1. அ. சண்முகப் பிரியா நான்காம் ஆண்டு இளங் கலை வழக்கியல், மத்திய சட்டக் கல்லூரி சேலம்.
2. சா சப்ரின் பானு இரண்டாம் ஆண்டு இளங்கலை வணிகவியல், அரசினர் மகளிர் கலைக் கல்லூரி சேலம் 8.
இரண்டாம் பரிசு: 1. ச. முகம்மது ரித்திக் நான்காம் ஆண்டு இளங் கலை வழக்கியல், மத்திய சட்டக் கல்லூரி சேலம்,
2. கஆர்த்தி மூன்றாம் ஆண்டு இளங்கலை வரலாறு, அரசினர் மகளிர் கலைக் கல்லூரி சேலம் 8.
மூன்றாம் பரிசு: 1 து. கீதா முதலாம் ஆண்டு முதுகலை நுண் ணுயிரியல், வைசியா கல்லூரி சேலம் 103.
2. கோ.கார்த்திகா இரண்டாம் ஆண்டு இளங்கலை நிறுமச் செய லியல், சேலம் சவுடேசுவரி மகளிர் கல்லூரி.
போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணாக்கர்களுக்கும் அவர்களைப் பாராட்டிச் சான்றித ழும் முதல்வர்களின் திராவிடப் பிர கடனங்கள் புத்தகமும் புகழ்ச் செல்வி திங்களிதழும் வீரமணி ராசு கா.நா.பாலு மற்றும் பரணிப்பாவ லனும் சேர்ந்து வழங்கினர். நிகழ்ச் சிக்கு பகுத்தறிவாளர் கழகத் தோழர் கள் இரா.புகழேந்தி, மு.கவுதமன், கருணாமூர்த்தி, சோமசுந்தரம் ஆகி யோர் கலந்து கொண்டனர்

போட்டியில் வென்றவர்களுக்கு 2 முதல் பரிசுகளும் ரூ.2500 என்ற அடிப்படையிலும், 2 இரண்டாம் பரிசுகளும் ரூ.1500 என்ற அடிப் படையிலும், 2 மூன்றாம் பரிசுகளும் ரூ.1000 என்றஅடிப்படையிலும் பரிசு வழங்கப் பட்டன. நிகழ்வின் இறுதியாக சேலம் மாநகர துணைச் செயலாளர் கலாகுமார் நன்றியுரை யுடன் மாலை நான்கரை மணியள வில் நிகழ்வு நிறைவேறியது.

 

 

No comments:

Post a Comment