டெக்கான் கிரானிக்கல், ஹைதராபாத்:
👉 நான்கு மாநில தேர்தலை வைத்து 2024 பொதுத் தேர்தலில் பாஜக வெல்லும் என்பது தவறு. இந்தியா கூட்டணி வரும் பொதுத் தேர்தலை புதிதாக அணுக வேண்டும் என்கிறார் அரசியல் ஆய்வாளர் பர்சா வெங்கடேஷ்வர் ராவ்.
👉 அய்ந்து மாநில தேர்தல் முடிவுகள், மக்களவை தேர்தலில் பாஜவை தோற்கடிக்க வியூகங்கள் வகுப்பது, தொகுதி பங்கீடு, பிரதமர் வேட்பாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்க இந்தியா’ கூட்டணி யின் 4வது ஆலோசனை கூட்டம் நாளை மறுநாள்(டிச.6) நடைபெறும்; அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டுமென கார்கே அழைப்பு.
தி டெலிகிராப்:
👉 இந்திய கூட்டணிக்கு மம்தா பானர்ஜி தலைமை தாங்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது
👉பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் பிரதமர் மோடி புகைப்படத்துடன் செல்பி எடுத்திட அறிவுறுத்தும் யு.ஜி.சி. அறிவுறுத்தலை, கடும் கண்டனத்திற்குப் பிறகு திரும்பப் பெற்றது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
👉 ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை முறியடிக்கும் விதமாக சமூக பொருளாதார சர்வே எடுக்க பாஜக முடிவு செய்ய வாய்ப்பு.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment