மேட்டுப்பாளையம், டிச.30- மேட்டுப் பாளையம் கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் இன்று (30-12-2023) பெரியாரியல் பயிற்சிப் பட்டறை காரமடை ஆசிரியர் காலனி தேக்கம் பட்டி சிவக்குமார் உணவகத்தில் 40 மாணவர் களுடன் மிக எழுச்சியுடன் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி தலைவர் மு. வீரமணி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்
மாநில இளைஞரணி அமைப்பாளர் வழக் குரைஞர் கோவை ஆ.பிரபாகரன் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை தொடங்கி வைத்து உரை யாற்றினார்.
மேட்டுப்பாளையம் மாவட்டத் தலைவர் சு.வேலுச்சாமி தலைமையேற்று உரையாற்றினார்.
மாவட்ட காப்பாளர் சாலைவேம்பு சுப் பையன்,மாவட்ட செயலாளர் க.சுஅரங்கசாமி, மாவட்டத் துணைத் தலைவர் பாசமலர் ஆறுமுகம், மேட்டுப்பாளையம் நகரத் தலைவர் கோ. அர.பழனிச்சாமி, மேட்டுப்பாளையம் நகர செயலாளர் சந்திரன், பெரியார் வீர விளையாட்டு கழக மாநில பொறுப்பாளர் தேக்கம்பட்டி சிவக்குமார், காரமடை ஒன்றிய தலைவர் ஏ.எம்.ராஜா, குட்டை புதூர் தலைவர் நாராயணன், தேக்கம்பட்டி வெள்ளையங்கிரி, மாவட்ட அமைப்பாளர் நடுர் செல்வராசு, காரமடை முத்துசாமி, முருகேசன், மேட்டுப்பாளையம் ரங்கராஜ்,மாவட்ட இளைஞரணி செயலாளர் நா.பிரதீப், பழனியப்பன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்
வழக்குரைஞர் பூவை.புலிகேசி “தந்தை பெரியார் ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் முதல் வகுப்பெடுத்தார்.
கழக கிராம பிரச்சார குழு மாநில அமைப் பாளர் முனைவர் க. அன்பழகன் “பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்புகள்” என்ற தலைப் பிலும், கழக துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சுஎன்னரெசு “பெரியார் பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனைகள்” என்ற தலைப் பிலும், எழுத்தாளர் வி.சி.வில்வம் “தமிழர் தலைவர்ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள்” என்ற தலைப்பிலும், மருத்துவர் குன்னூர் இரா.கவுதமன் “பேயாடுதல் – சாமி ஆடுதல் அறிவியல் விளக்கம்” என்ற தலைப் பிலும், “புரபசர் ஈட்டி கணேசன் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்கம்” என்ற தலைப்பிலும் தொடர்ந்து வகுப்பு எடுத்துத்தனர்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமார் நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார்.
No comments:
Post a Comment