2023ஆம் ஆண்டு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 31, 2023

2023ஆம் ஆண்டு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்

featured image

ஜனவரி

ஜன. 9: ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
மதுரையில் ரூ.600 கோடியில் 3ஆவது டைடல் பூங்கா, மாமல்லபுரம் அருகே புதிய துணை நகரம் உள்ளிட்ட திட்டங்கள் சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில் அறிவிக் கப்பட்டன.
ஜன. 12: சேதுசமுத்தி திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்த வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம்.
ஜன. 13: அரசு பணியில் சேர தமிழ் கட்டாயம் என்ற தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேறியது.
ஜன. 16: தமிழ்மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்கள் 10 பேருக்கு விருது வழங்கப்பட்டது.
சீட் பெஸ்ட் அணியாமல் காரில் சென்ற இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குக்கு காவல்துறையினர் அபராதம்.

ராகுல் நடைப்பயணம் நிறைவு

காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுலின் ஒற்றுமை நடைப்பயணம் 136 நாட்களுக்குப் பின் காஷ்மீரில் ஜன.30இல் நிறைவு பெற்றது.

பிப்ரவரி

பிப். 1: நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல். ரூ.7 லட்சம் வரை வருமான வரிவிலக்கு, மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு, தங்கத்திற்கு இறக்குமதி வரி அதிகரிப்பு போன்ற அம்சங்கள் இடம் பெற்றன.
கள ஆய்வில் முதலமைச்சர் எனும் புதிய திட்டத்தின்படி முதல் 2 நாள் அசுமுறை பயணமாக சென்னையில் இருந்து காட்பாடிக்கு ரெயில் பெட்டியை அலுவலகமாக மாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்தார்.
பிப்.22: குழந்தைகளை 1ஆம் வகுப்பில் சேர்க்க 6 வயதாக உயர்த்துமாறு மாநில அசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டது.
பிப்.27: சென்னை புதுச்சேரி இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கி வைக்கப்பட்டது.
பிப்.28: டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீட் விலக்கு கோரிக்கையை வலியுறுத்தினார்.

மார்ச்

மார்ச் 3: விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 100 யூனிட் ஆக உய்£த்தி தமிழக அரசு உத்தரவிட்டது.
மார்ச் 5: கீழடியில் பிரமாண்ட அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.
பிரமோஸ் ஏவுகணை கப்பலில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டு சாதனை.
தோள்சீலை போராட்ட 200ஆவது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம், நாகர்கோவிலில் நடந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்பு.
மார்ச் 8: திருமணமான மகள் வாரிசு வேலை பெற தகுதியானவர் இல்லை என்ற உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
மார்ச் 9: எம்.சாண்ட் மணல் உற்பத்தியை ஒழுங்குபடுத்த புதிய கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
சீன அதிபராக 3ஆவது முறையாக பதவியேற்றார் ஜின்பிங்.
மார்ச் 15: அசாமில் சட்டவிரோதமாக குடியேறிய ஒன்றரை லட்சம் வெளிநாட்டினர் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களில் 30 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர்.
மார்ச் 17: தமிழ்நாடு காவல்துறையின் பெண்கள் பிரிவு தொடங்கப்பட்டு பொன்விழா ஆண்டு (50 ஆண்டு) கொண்டாட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. பெண் காவலருக்கு விடுமுறை, விருது, விடுதி உள்ளிட்ட 9 அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
மார்ச் 20: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடரில் பட்ஜெட் வெளியிடப்பட்டது. செப்.15 முதல் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000, கோவை, மதுரையில் மெட்ரோ ரெயில், அனைத்து தொடங்கப்பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
மார்ச் 21: வேளாண் பட்ஜெட் வெளியிடப்பட்டது. ரூ.14 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க நம்மாழ்வார் விருதுடன் ரூ.5 லட்சம் பரிசு அறிவிப்பு.
ஆஸ்கார் விருது பெற்ற, தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவண பட இயக்குநர் கார்த்திக் கொன்சால்வ்ஸ்க்கு தமிழ்நாடு அரசு ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தது.
விருதுநகரில் ரூ.2 ஆயிரம் கோடியில் மெகா ஜவுளி பூங்கா அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.
மார்ச் 23: உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழி வேண்டாம் என்று உச்நீதிமன்றம் முடிவு செய்திருப்பதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்தது.
மார்ச் 26: 36 செயற்கை கோள்களுடன் எல்.வி.எம்.3- எம்.-3 ராக்கெட் சிறீஅரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பறந்தது.
மார்ச் 30: வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு சட்டசபையில் அறிவிப்பு.
மார்ச் 31: தமிழ்நாடு மணப்பாறை முறுக்கு உள்ளிட்ட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

ஏப்ரல்

ஏப்.14இல் ராகுல் டில்லியில் அவர் குடியிருந்த அரசு பங்களாவையும் காலி செய்தார். ஆகஸ்ட் 3இல் குஜராத் நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதனால் ராகுல் காந்தி எம்.பி. பதவி தப்பியது. 4 மாத இடைவெளிக்கு பிறகு ஆகஸ்ட் 7இல் அவர் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றனர்.
ஏப்.1: வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா கேரளாவில் நடந்தது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கலந்து கொண்டு பேசியபோது, இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டம் என்றார்.


ஏப்.3: அகில இந்திய சமூகநீதி கூட்டமைப்பு தேசிய மாநாடு மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆன்லைனில் நடந்தது.
ஏப்.4: அருணாசல பிரதேசத்தின் 11 இடங்களுக்கு பெயர் சூட்டியது சீனா. இதை இந்தியா நிராகரித்தது.
கீழடி உள்ளிட்ட 5 இடங்களில் அடுத்த கட்ட தொல்லியல் அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நிலவில் இருந்து பார்த்தால் தமிழ் என்ற வார்த்தை தெரியும்படி 100 ஏக்கர் பரப்பளவில் மாதிரி காடு உருவாக் கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
அய்தராபாத்தில் நாட்டிலேயே உயரமான 125 அடி உயர அம்பேத்கர் வெண்கல சிலையை முதலமைச்சர் சந்திரசேக ராவ் திறந்துவைத்தார்.
ஏப்.17: செவித்திறன் மாற்றுத் திறனாளிகள் புரிந்து கொள்ளும் சைகை மொழியில் சட்டசபை நிகழ்வுகள் ஒளிபரப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஏப்.29: கலைஞர் நினைவாக சென்னை மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க 15 நிபந்தனைகள் விதித்து ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது.

மே

மே.8: வி¬ளாயட்டு வீரர்களை ஊக்குவிக்க தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தொடங்கி வைத்தார்.
மே.10: வ.உ.சி. (கோவை வ.உ.சி. பூங்கா), மூவலூர் ராமாமிர்தம் (மயிலாடுதுறை வரதாச்சாரியர் பூங்கா), முத்துலட்சுமி ரெட்டி (புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை) ஆகியோரின் சிலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
மே.12: வீட்டில் இருந்தே பிறப்பு இறப்பை பதிவு செய்வது, கியூ ஆர் குறியீடு மூலம் வரி செலுத்தும் வசதி உள்ளிட்ட வசதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
ஆன்லைனில் வழக்குகள் தாக்கல் செய்ய 24 மணி நே வசதியை உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி தொடங்கி வைத்தார்.
மே.18: தமிழ்நாடு அரசின் சட்ட திருத்தம் செல்லும். ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
நெல்லையில் தொல்லியல் துறை சார்பில் பொருநை அருங்காட்சியகம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினர்.
மே.24: சிங்கப்பூரில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
மே.29: ஜி.எஸ்.எல்.வி. எப்.-12 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. வழிகாட்டி செயற்கை கோளை விண்ணில் நிலைநிறுத்தியது.

ஜூன்

ஜூன்.1: டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஆழ்வார் பேட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு நேரில் சென்று மத்திய அரசின் அவசர சட்டம் உள்ளிட்ட நெருக்கடிகளில் ஆதரவு தர வேண்டுகோள் விடுத்தார்.


கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா சென்னையில் நடந்தது. இதையொட்டி 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஜூன். 9: குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணியை தொடங்கியது இஸ்ரோ.
டில்லி நேரு அருங்காட்சியகம், பிரதம மந்திரிகள் அருங் காட்சியகம் என்று பெயர் மாற்றப்பட்டது.
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் முதல்முறையாக குழந் தைக்கான முதுமக்கள் தாழியில் வெண்கல வளையல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஜூன் 10: அமேசான் காட்டில் விமான விபத்தில் சிக்கிய 4 குழந்தைகள் 40 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
ஜூன். 20: திருவாரூரின் காட்டூரில் கலைஞர் கோட் டத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ஜூலை

ஜூலை 9: ஆளுநர் பதவிக்கு ஆர்.என்.ரவி தகுதியற்றவர் என்று குடியரசுத் தலைவருக்கு 19 பக்க புகார் கடிதத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பினார்.
ஜூலை 13: மேயர்கள், நகராட்சி பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாதாந்திர மதிப்பூமியம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டார். மேயருக்கு 30 ஆயிரமும், நகரசபை தலைவருக்கு 15 ஆயிரமும், பேரூ£ட்சி தலைவருக்கு 10 ஆயிரமும், கவுன்சிலருக்கு 2,500ஆம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஜூலை 15: மதுரையில் மூன்றரை லட்சம் புத்தகங் களுடன் 8 தளங்களைக் கொண்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஜூலை 16: சாலை விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றினால் ரூ.10 ஆயிரம் வெகுமதி வழங்கப்படும் என்று அரசாணை வெளியீடு.
ஜூலை 20: மும்பை அருகே மலைக்கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 16 பேர் பலி.
ஜூலை 22: முதியோர் ஓய்வூதிய தொகையை மாதம் ரூ.1,000த்தில் இருந்து, 1,200 ஆக உயர்த்தி அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்து அரசு அறிவித்தது.
ஜூலை 23: மராட்டியத்தில் ஆன்லைன் சூதாட்டக்காரர் வீட்டில் ரூ.17 கோடி ரொக்கப் பணம் மற்றும் 14 கிலோ தங்கம், 200 கிலோ வெள்ளி சிக்கியது. விளையாட்டில் ரூ.58 கோடியை இழந்த தொழில் அதிபர் கொடுத்த புகாரில் சிக்கினர்.
ஜூலை 24: டுவிட்டரின் பெயர் எக்ஸ் என்று மாற்றப்பட்டது.
ஜூலை 28: செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை துரிதமாக செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 2023ஆம் ஆண்டின் சிறந்த மனிதர் விருது ஆசிய செஸ் கூட்டமைப்பால் அறிவிக்கப்பட்டது. அந்த விருதை செஸ் கூட்டமைப்பு நிர்வாகிகள் நேரில் வந்து மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்தனர்.
பேராசிரியர் நன்னன் எழுதிய புத்தகங்கள் நாட்டு டைமை ஆக்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

ஆகஸ்ட்

ஆக. 4: பாகிஸ்தானில் நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்படுவதாக பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அறிவித்தார்.
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் மேனாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆக.15: சுதந்திர தின விழாவையொட்டி எவரெஸ்டில் ஏறிய தமிழ்நாடு பெண்ணான முத்தமிழ் செல்விக்கு கல்பனா சாவ்லா விருது, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது.
ஆக.16: டி.எம்.சவுந்தரராஜன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரையில ரூ.50 லட்சத்தில் நிர்மாணிக்கப்பட்ட அவரது முழு உருவ வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
ஆக.18: ராமநாதபுரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மீனவர்களுக்கு 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். மீன்பிடி தடைகால நிவாரண தொகை ரூ.8 ஆயிரமாக உயர்வு.
ஆக.27: கணக்கு தணிக்கைத் துறையின் அறிக்கையை சுட்டிக்காட்டி ரூ.ஏழரை லட்சம் கோடி முறைகேடு நடந்திருப்பதாக பா.ஜனதா அரசு மீது 7 ஊழல் குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் மு..க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கருநாடகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

செப்டம்பர்

செப்.1: இந்தியா கூட்டணியின் 3ஆவது சந்திப்பின், 2ஆம் நாள் கூட்டத்தில் தேர்தல் ஒற்றமையாக சந்திக்க 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், செப்.13இல் டில்லியில் சரத்பவார் இல்லத்தில் நடந்தது. போபாலில் இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டம் நடத்தி தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவரங்களை முடிவு செய்வது என்று அந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
செப்.2: சூரியனின் ஆய்வுக்காக ஆதித்யா எல்.1 என்ற விண்கலத்தை விண்ணில் ஏவி இந்திய விஞ்ஞானிகள் சாதனை படைத்தனர்.
செப்.4: இந்தியா கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் ‘ஸ்பீக்கிங் பார் இந்தியா’ என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆடியோ பதிவு வெளியிட தொடங்கினார். முதல் பதிவில் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை செதுக்குவோம். இனி எனது குரல் இந்தியாவின் குரலாக அமையும் என்று பேசினார்.
செப்.17: 13 மாவட்டங்களில் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு 1,591 வீடுகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
செப்.23: உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
கீழடியில் 2,500 ஆண்டுகள் பழைமையான பவள மணிகள் கண்டெடுக்கப்பட்டன.
செப்.29: வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில் 215 அரசு ஊழியர்களுக்கு தண்டனை விதித்து பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க, தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு.

அக்டோபர்

அக்.2: இஸ்ரோவில் சாதித்து, நாட்டுக்கும், மாநிலத்துக்கும் பெருமை சேர்த்த 9 தமிழ்நாடு விஞ்ஞானிகளுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை அரசு வெளியிட்டது. பிற்படுத்தப்பட்டோர் 63 சதவீதம் உள்ளனர்.
அக்.3: ராமர் பாலத்தை புராதன சின்னமாக்க கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி.
அக்.5: மேட்டூர் அணை திறக்க முடியாததால் பாதிக்கப்பட்ட காவிரி விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ.13,500 இழப்பீடு அறிவித்தது தமிழ்நாடு அரசு.
அக்.12: நீலகிரி மலை ஆடுகளை பாதுகாக்கும் வரையாடு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
40 ஆண்டுகளுக்கு பிறகு நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தொடங்கியது. 50 பயணிகளுடன் கப்பல் புறப்பட்டு சென்றது. பிரதமர் மோடி இதை காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
அக்.15: கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல்கலாமிற்கு முழு உருவ சிலை நிறுவப்பட்டது.

நவம்பர்

நவ.1: இந்தியா – வங்காளதேசம் இடையே புதிய ரெயில் பாதையை இருநாட்டு பிரதமர்கள் (மோடி, «க் ஹசீனா) கூட்டாக தொடங்கி வைத்தனர்.
நவ.2: கடலூரில் சுதந்திர போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் உருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அர்ஜென்டினா அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சியை சேர்ந்த ஜேவியர் மிலி வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தார்.
சங்கரய்யா மறைந்தார்


முதுபெரும் கம்யூனிஸ்டு தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான சங்கரய்யா 102 வயதில் (நவ.15) மரணம் அடைந்தார். மறுநாள் அரசு மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வு நடந்தது.
சுதந்திர போராட்டத்தின் போதும், அதன் பின்னரும் 8 ஆண்டுகள் சிறை வாழ்க்கை யும், 4 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையும் வாழ்ந் தார். தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டு கட்சியை உருவாக்கி வளர்த்தவர்களில் முக்கியமானவராக திகழ்ந்தார்.
1964ஆம் ஆண்டு கம்யூனிஸ்டு கட்சி இரண்டாகப் பிரிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உருவானபோது அதில் முக்கிய பங்காற்றியவர். 3 முறை எம்எல்.ஏ.வாக இருந்த இவர் மதுரையில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டம். ஆலய நுழைவு போராட்டங்களில் முக்கிய தலைவராக பங்கு பெற்றவர்.
சங்கரய்யாவுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தகைசால் தமிழர் விருது வழங்கி கவுரவித்தது. அந்த விருதுத் தொகை ரூ.10 லட்சத்தையும் கரோனா நிதியாக தமிழ்நாடு அரசுக்கே அவர் திருப்பி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர்

டிச.1: 2ஆவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது ஏன்? முதலமைச்ச¬ அழைத்து பேசி தீர்வு காணுங்கள் என்று கவர்னர் ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து டிச.13இல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி மழை நிவாரண பணிகள் முடிந்ததும் வருவதாக மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.
கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அயோத்திதாசருக்கு மணிமண்டபம் திறக்கப்பட்டது.
டிச.11: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அடுத்த செப்டம்பர் மாதத்துக்குள் மாநில சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் என்றும் ஆணையிட்டது.
டிச.16: குவைத் மன்னர் ஷேக் நவாப் மரணம்.
டிச.17: சென்னையில் மிக்ஜாம் புயல் மழை நிவாரணம் ரூ.6 ஆயிரம் வினியோகம் தொடங்கி வைக்கப்பட்டது.
டிச.18: 30 நாட்களில் மனுக்களுக்கு தீர்வு காணும் ‘மக்களுடன் முதல்வர்’ புதிய திட்டத்தை கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
டிச.21: தூத்துக்குடியில் கன மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு, குடும்பத்தினருக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.
டிச.28: தே.மு.தி.க. தலைவர் திரைக்கலைஞர் விஜயகாந்த் மறைவு

No comments:

Post a Comment