5 மாநில தேர்தலில் பாஜ, ஒன்றிய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் சிங் படேல், பக்கன் சிங் குலாஸ்தி உட்பட 21 எம்.பி.க்களை களமிறக்கி உள்ளது.
இதில் ராஜஸ்தான், மபியில் தலா 7 நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டீஸ்கரில் 4, தெலங்கானவில் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களும் போட்டியிட்டனர். இவர்களில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த 14 நாள்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டமன்ற உறுப்பினர் இரண்டில் ஏதேனும் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்யாதபட்சத்தில் 14 நாள்களுக்குப் பிறகு அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும். சட்டமன்ற உறுப்பினராகத் தொடரலாம் என அரசமைப்புச் சட்டத்தின் 101 ஆவது பிரிவின் விதியில் கூறப்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment